மாவலி பதில்கள்

nehru

சி. கார்த்திகேயன், சாத்தூர்

இப்போது நேருவை பற்றி மோடி பேசுவது இல்லையே?

Nehru

மோடியும் அவரது கட்சியினரும் ஒருவர் இறந்துபோய் இத்தனை ஆண்டுகாலம் கழித்தும் அவரை விமர்சித்துப் பேசுகிறார்கள் என்றால் நிச்சயம் அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு உருவாகிவிட்டது. நேருவின் சாதனைகள் குறித்து பலரும் பேச ஆரம்பித்துவிட்டதால் மோடியும் அவர் கட்சியினரும் சைலன்ட்டாகிவிட்டனர்.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

தி.மு.க.. எம்.பி. சிவாவின் அமைதி! அடுத்து அவரை கே.என்.நேரு. சந்தித்தது பற்றி? இதில் முதல்வர் ஸ்டாலின் அணுகுமுறை எப்படி?

"பாழ் செய்யும் உட்பகை' என்று கட்சிக்குள் நிலவும் பகைமை பற்றி கலைஞர் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார். தி.மு.க.வுக்குள்

சி. கார்த்திகேயன், சாத்தூர்

இப்போது நேருவை பற்றி மோடி பேசுவது இல்லையே?

Nehru

மோடியும் அவரது கட்சியினரும் ஒருவர் இறந்துபோய் இத்தனை ஆண்டுகாலம் கழித்தும் அவரை விமர்சித்துப் பேசுகிறார்கள் என்றால் நிச்சயம் அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு உருவாகிவிட்டது. நேருவின் சாதனைகள் குறித்து பலரும் பேச ஆரம்பித்துவிட்டதால் மோடியும் அவர் கட்சியினரும் சைலன்ட்டாகிவிட்டனர்.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

தி.மு.க.. எம்.பி. சிவாவின் அமைதி! அடுத்து அவரை கே.என்.நேரு. சந்தித்தது பற்றி? இதில் முதல்வர் ஸ்டாலின் அணுகுமுறை எப்படி?

"பாழ் செய்யும் உட்பகை' என்று கட்சிக்குள் நிலவும் பகைமை பற்றி கலைஞர் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார். தி.மு.க.வுக்குள் நடக்கும் உள்ளடிகள் எப்படி கட்சியின் வளர்ச்சியையும் வெற்றியையும் தடுத்திருக்கிறது என்பதற்கு மாவட்டங்கள்தோறும் உதாரணங்கள் உண்டு. அந்த உட்பகையின் மோசமான தன்மையை நன்கறிந்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். தி.மு.கவுக்குப் பல திருப்புமுனைகளைத் தந்த இடமான திருச்சியில் அமைச்சர் நேருவுக்கும் எம்.பி. சிவாவுக்குமான உட்பகையும், நேருவுக்கு கருப்புக்கொடி காட்டப் பட்டதும், சிவா வீடு தாக்கப்பட்டதும் கட்சிக்கு யூ டர்ன் திருப்புமுனையை உண்டாக்கிவிடக்கூடாது என்பதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் தி.மு.க. தலைவர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்ந்ததும், நேருவை அனுப்பி சிவாவை சந்திக்க வைத்ததும், ஆட்சியையும் கட்சியையும் முதல்வர் கையாளும் அணுகுமுறையைக் காட்டக் கூடியதாக உள்ளது.

தே.அண்ணாதுரை, கம்பம் புதுப்பட்டி

எடப்பாடி என்ன எம்.ஜி.ஆரா?, அ.தி. மு.க.வுக்கு பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்ய?

அ.தி.மு.க.வில் தலைமைப் பொறுப்பு என்பது பொதுச்செயலாளர் பதவிதான். அதற்கு, தன்னைத் தவிர வேறு யாரும் போட்டிக்கு வந்துவிடக்கூடாது என்பதால்தான், அ.தி.மு.க. தொண்டர்களே நேரடியாகப் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்வார்கள் என்ற விதியை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். எம்.ஜி.ஆரின் ரசிகர்களும் அவர் மீது அபிமானம் கொண்ட தொண்டர்களும் அவரைத் தவிர இன்னொருவரைத் தலைமைப் பொறுப்புக்கு நினைத்துப் பார்க்க முடியுமா? ஜெயலலிதாவுக்கும் அதே விதி பொருத்தமாக இருந்தது. கட்சிக்குள் வேறு யாரும் அவரை எதிர்க்க முடியாது. இப்போதைய அ.தி.மு.க.வின் நிலை அப்படி அல்ல. ஆனால், எம்.ஜி.ஆர். காலத்தில் உருவாக்கப்பட்ட விதியால், தலைமைப் பொறுப்புக்கு வர நினைப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆராக நினைத்துக் கொள்கிறார்கள்.

சு.வெங்கடேஷ், கோட்டயம்

டாஸ்மாக் இல்லாவிட்டால் தமிழ்நாடு அரசு தனது திட்டங்களை எப்படி நிறைவேற்றும்?

தமிழ்நாடு அரசின் வருவாயில் அதிக பங்கு வணிக வரிக்குத்தான். அடுத்தது பத்திரப் பதிவு மூலம் கிடைக்கும் வருவாய். டாஸ்மாக் என்பது மூன்றாவது இடம்தான். இதுபோக சொத்து வரி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரிகளும், போக்குவரத்து துறை (ஆர்.டி.ஓ)சார்ந்த வருவாயும் முக்கிய மானவை. அதனால், டாஸ்மாக்கால்தான் தமிழ்நாடு அரசு தாக்குப்பிடிக்கிறது என்று சொல்லும் வாதம் தள்ளாட்டமானது.

சாரங்கன், கும்பகோணம்

பழைய சினிமா தியேட்டர்கள் இருந்த இடங்களைக் கடக்கும்போது என்ன நினைப்பீர்கள்?

ரசிகர்களின் கனவு உலகமாக, இந்திர லோகமாக இருந்த இடம் பல ஊர் களிலும் கட்டாந்தரையாகிவிட்டது. சில ஊர் களில் கல்யாண மண்டபங்களாகவும், ஷாப் பிங் காம்ப்ளக்ஸாகவும் உருமாறியிருக்கிறது. எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டபோதும், அத னைக் கடக்கும்போது ஒரு கனவு உலகத் தில் பயணிக்கும் உணர்வு மாறுவதில்லை.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு சிபாரிசு செய்யப்படும் என நோபல் கமிட்டி துணைத்தலைவர் கூறியிருப்பது குறித்து?

அப்படி எந்த செய்தியும் இல்லை. அது வதந்தி என நோபல் கமிட்டி துணைத் தலைவரே மறுத்திருக் கிறார். பா.ஜ.க.வின் வதந்தி பரப்பும் பணிக்கு வேண்டு மானால் நோபல் பரிசு கொடுக்க லாம்.

nkn250323
இதையும் படியுங்கள்
Subscribe