Advertisment

மாவலி பதில்கள்

ff

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

"நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது பற்றி...?

ஆஸ்கர் என்பது இந்தியத் திரையுலகத்துக்கு நெடுங்கனவு. அது ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக ஒரு காலத்தில் இருந்தது. பின்னர், பிற நாடுகளின் ஆங்கிலப் படங்களுக்கும் மெல்ல வாய்ப்பு அமைந்தது. பிற மொழிப் படங்களுக்கென தனி விருது அறிவிக்கப்பட்டபோதுதான் இந்திய மொழிப் படங்கள் உள்ளே நுழைய முடிந்தது. சிவாஜியின் தெய்வமகன் முதல் கமலின் நாயகன் வரை ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட தமிழ்ப் படங்கள் தரத்தில் சிறப்பானதாக இருந்தாலும் பட்டியலில

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

"நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது பற்றி...?

ஆஸ்கர் என்பது இந்தியத் திரையுலகத்துக்கு நெடுங்கனவு. அது ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக ஒரு காலத்தில் இருந்தது. பின்னர், பிற நாடுகளின் ஆங்கிலப் படங்களுக்கும் மெல்ல வாய்ப்பு அமைந்தது. பிற மொழிப் படங்களுக்கென தனி விருது அறிவிக்கப்பட்டபோதுதான் இந்திய மொழிப் படங்கள் உள்ளே நுழைய முடிந்தது. சிவாஜியின் தெய்வமகன் முதல் கமலின் நாயகன் வரை ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட தமிழ்ப் படங்கள் தரத்தில் சிறப்பானதாக இருந்தாலும் பட்டியலில் இடம் பிடிக்க முடியவில்லை. அமீர்கானின் லகான் திரைப்படம் இறுதிச் சுற்று வரை முன்னேறி இரண்டாம் இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குநரான சத்யஜித்ரேவின் படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை எனப் போற்றப்பட்ட போதும் அவருடைய எந்தப் படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. வாழ்நாள் சாதனையாளர் என்ற பெயரில் ஆஸ்கர் அவரைத் தனிப்பட்ட முறையில் கவுரவப் படுத்தியது. இந்தியாவின் தந்தை எனப் போற்றப்படும் காந்தி பற்றி வெள்ளைக்காரரான ரிச்சர்ட் அட்டன்பரோ எடுத்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்தன. ஆஸ்கர் விருதுக்காக முட்டி மோதிப் பார்த்த கமல்ஹாசனுக்கு உள்ளூரில் "உலக நாயகன்' பட்டம் கொடுத்து ஆறுதல்படுத்தி விட்டார்கள். இந்தியாவுக்கும் ஆஸ்கருக்கும் சம்பந்தமில்லை என விரக்தி மேலிட்ட நிலையில்தான், இந்தியாவின் அதுவும் தமிழ்நாட்டு இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் ஆங்கிலப் படமான ஸ்லம்டாக் மில்லியனரில் மெட்டமைத்த "ஜெய் ஹோ' என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டபோதுதான் இந்தியர்களுக்கு பெருமிதம் ஏற்பட்டது. அவருடன் அப்பாடலின் சவுண்ட் இன்ஜினியரான கேரளாவின் ரசூல் பூக்குட்டி விருது பெற்றார். அதன்பிறகு பெரிய இடைவெளி. தற்போது "ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் "நாட்டு நாட்டு' பாட்டுக்காக அதன் இசையமைப் பாளர் கீரவாணியும், பாடலாசிரியர் சந்திர போஸும் ஆஸ்கர் விருது மேடையில் ஏறி இந்தியர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக் கிறார்கள். தமிழில் மரகதமணி என்ற பெயரில் இசை யமைத்தவர்தான் கீரவாணி. இந்தியாவுக் கான விருதுகள் தென்னிந்தியக் கலைஞர்களால் மீண்டும் சாத்தியமாகியுள்ளது.

Advertisment

ff

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

"ரஜினியை நான்தான் அரசியலுக்கு வரக்கூடாது என்று தடுத்தேன்' என்கிறாரே முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு?

எனக்கு கட்சியும் வேண்டாம்... ஒரு கொடியும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தவர் ரஜினி. அவருடைய ரசிகர்கள் பலமுறை அழைத்தும் கட்சி தொடங்க மறுத்தவர். அப்படிப்பட்டவரை அரசியலுக்கு இழுத்து வர நினைத்தவர்கள் யார் என்பதையும், ரஜினியைத் தடுத்த வெங்கையா நாயுடு சொல்லியிருக்கலாம்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைபுதூர் -தேனி

ராமர், அனுமர், வீர சிவாஜி இவர்களைப் பற்றி கர்ப்பிணிப் பெண்களுக்குக் கற்றுத் தர வேண் டும். அப்போதுதான் பிறக்கின்ற பிள்ளைகள் ஒழுக்க மாகவும், இந்திய கலாச்சாரத் துடனும் பிறக்கும் என்று ஆர்.எஸ்.எஸ். மகப்பேறு கூட்டமைப்பு வெளியிட் டுள்ளதே?

காந்தி, நேதாஜி, திருவள்ளுவர், அவ் வையார் பெயர்களைக் கூட சொல்லத் தோன்ற வில்லையே!

nkn180323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe