பழ.மணிவாசகன், கரூர்
தமிழ்நாட்டில் பகுத்தறிவாளர் ஆட்சி என்று யாருடைய ஆட்சியைச் சொல்லலாம்?
பகுத்தறிவு என்பது உண்மை நிலையை உணர்ந்து, உயரவேண்டிய இடத்தை நோக்கி சிந்திப்பது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சமூகநீதியும் சமூகநலத் திட்டங்களும் மக்களின் வாழ்வை உயரச் செய்தன. சுதந்திர இந்தியாவில் தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்களில் ஓமந்தூர் ராமசாமியாரில் தொடங்கி பெருந்தலைவர் காமராசர் வழியே திராவிட ஆட்சியாளர்கள்வரை பலரும் பகுத்தறிவாளர்கள்தான்.
பி.மணி, குப்பம்-ஆந்திரா
"சிறை விதிகளின்படியே கைதி களுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது' என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளாரே?
சசிகலாவுக்கு எதிராக "தர்மயுத்தம்' நடத்திய ஓ.பி.எஸ்.ஸை எதிர்த்து போயஸ் கார்டன் வாசலில் மீடியா முன்பாக சின்னம்மாவுக்காக கலக்கலாகக் குரல் கொடுத்து கலங்கடித்த அமைச்சராயிற்றே அவர்!
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு விதிகளின்படி கிடைத்த சலுகைகள், புழல் சிறையில் உள
பழ.மணிவாசகன், கரூர்
தமிழ்நாட்டில் பகுத்தறிவாளர் ஆட்சி என்று யாருடைய ஆட்சியைச் சொல்லலாம்?
பகுத்தறிவு என்பது உண்மை நிலையை உணர்ந்து, உயரவேண்டிய இடத்தை நோக்கி சிந்திப்பது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சமூகநீதியும் சமூகநலத் திட்டங்களும் மக்களின் வாழ்வை உயரச் செய்தன. சுதந்திர இந்தியாவில் தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்களில் ஓமந்தூர் ராமசாமியாரில் தொடங்கி பெருந்தலைவர் காமராசர் வழியே திராவிட ஆட்சியாளர்கள்வரை பலரும் பகுத்தறிவாளர்கள்தான்.
பி.மணி, குப்பம்-ஆந்திரா
"சிறை விதிகளின்படியே கைதி களுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது' என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளாரே?
சசிகலாவுக்கு எதிராக "தர்மயுத்தம்' நடத்திய ஓ.பி.எஸ்.ஸை எதிர்த்து போயஸ் கார்டன் வாசலில் மீடியா முன்பாக சின்னம்மாவுக்காக கலக்கலாகக் குரல் கொடுத்து கலங்கடித்த அமைச்சராயிற்றே அவர்!
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு விதிகளின்படி கிடைத்த சலுகைகள், புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கும் கிடைத்திருக்கிறது என்கிறார் போலும்.
ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
"வங்கியில் மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக்அவுட் நோட்டீஸை பிரதமர் மோடிக்கு நெருக்கமான சி.பி.ஐ. இணை இயக்குநர் ஏ.கே.சர்மா பலவீனமடையச் செய்து, அவரை தப்பிக்க அனுமதித்துவிட்டார்' என்கிறாரே ராகுல்?
தப்பிக்க அனுமதித்தால் என்ன, அதற்குப் பரிகாரமாகத்தான் சொகுசு சிறையை உருவாக்கி, அதன் வீடியோ காட்சியை லண்டனுக்கு அனுப்பி, இங்கிலாந்து நீதிமன்ற அனுமதியுடன் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவர பெருமுயற்சி எடுக்கிறதே மோடி அரசு. அதை ராகுல் குறை சொல்லலாமா!
பொன்னியம்மன்மேடு வண்ணை கணேசன்
"சினிமாவில் இனி நான் நடிப்பது கட்சி நடத்துவதற்கான செலவுக்கு மட்டும்தான்' என்று கமல் கூறுவது?
கட்சிக்கு செலவு செய்து தொண்டர்களை ஈர்ப்பது சரிதான். ஆனால், அவரது ரசிகர்களே கூட கண்டுகொள்ளாத அளவுக்கு கமலின் படங்கள் வணிகரீதியில் தள்ளாடுகின்றனவே. "விஸ்வரூபம் 2' என்று டைட்டில் வைத்துவிட்டு, வாமன அவதாரம் அளவுக்குக்கூட வசூல் காட்டவில்லையே!
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
"தி.மு.க.வின் புதிய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பக்குவம் இல்லை' என்று பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறுகிறாரே?
ஆமாம்... பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு இருக்கிற அரசியல் பக்குவம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை தான்.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
வாசகர்களாகிய எங்களிடம் கேட்கத் தோன்றுவது?
கேளுங்கள்... கேளுங்கள்... கேட்டுக் கொண்டே இருங்கள். தேடலை நோக்கிய கேள்விகளாகக் கேட்கும் வாசகர்களின் அறிவாற்றலே மாவலிக்கு பக்கபலம்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
7 பேர் விடுதலை விவகாரத்தில் மாநில அரசும் மத்திய அரசும் "கேம்' ஆடுகின்றனவா?
ராஜீவ் கொலையில் தொடங்கி, கைது நடவடிக்கைகள், சி.பி.ஐ. விசாரணை, தீர்ப்பு, தண்டனைக் குறைப்பு, விடுதலைத் தீர்மானம் என எல்லாவற்றிலுமே அன்று முதல் இன்று வரை மத்திய-மாநில அரசுகளின் ஆட்டம் தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது.
_________________
ஆன்மிக அரசியல்
ராகுலன், நாச்சியார்கோவில்
சாதியும் மதமும் ஆன்மிக அரசியலின் பலமா -பலவீனமா?
ஆன்மிக அரசியலை தேர்தல் களத்திற்கு இழுத்து வந்தால் மற்ற அரசியல் போலவே சாதியும் மதமும் ஓட்டு வாங்கப் பயன்படும். ஒரு தரப்பின் ஆதரவைப் பெறுவதற்கு அதுவே பலமாகவும், இன்னொரு தரப்பின் எதிர்ப்பை சம்பாதிக்கும் பலவீனமாகவும் மாறவும் கூடும். ஆன்மிக அரசியல் பேசியவர்கள் உடனடியாக கட்சித் தொடங்குவதற்கு தயங்குவதன் காரணமும் அதுதான். அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆன்மிகமும் தனிப்பட்ட மனிதர்களின் பலம், பலவீனம் சார்ந்தே இயங்குகிறது. கேரளாவில் கிறிஸ்தவ மதத்தில் இறைப்பணியாற்ற வந்த கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, தன்னை பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல் என்பவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2014 முதல் 2016 வரை பேராயரின் பிடியில் சிக்கி அவதிப்பட்டதை கன்னியாஸ்திரி புகாராகத் தெரிவிக்க, பேரா யரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் மத நிறுவனங்கள் ஈடுபட்டன. 2 ஆண்டு காலமாக ஒருவரைக் கற்பழிக்க முடியுமா என்ற கேள்விகள் வெளிப்பட்டன. பேராயரோ, "இது பாலியல் தொந்தரவல்ல... ஆன்மிகப் பேரின்பம்' என்றார். பின்னர், வாடிகனில் உள்ள போப்பாண்டவர் வரை விவகாரம் சென்று பேராயர் பதவி நீக்கம் செய்யப்பட, தற்போது அவரை போலீஸ் கைது செய்துள்ளது.
மதத்தின் பெயரால் சாதிய ஆணவத்தின் பெயரால் நடைபெறும் படுகொலைகளுக்கும் பஞ்சமில்லை. தெலங்கானா வில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் காதல் கணவர் பிரணய்குமார் தன் கண்முன்னேயே தன் குடும்பத்தினர் ஏவிய ஆட்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ந்தவர் அம்ருதா. அவரைப் போலவே சாதிய வெறி அரிவாளின் கொடூரத்தை உணர்ந்தவர் தமிழ்நாட்டின் கவுசல்யா. அவரைப்போலவே அம்ருதாவும் சாதிய வெறிக்கு எதிராகப் போராடத் தயாராகியுள்ளார். ஒரே மதத்தை சார்ந்த சாதிகளின் வெறித்தனத்தை ஆன்மிக அரசியலும் பேசுவதில்லை, தேர்தல் அரசியல்வாதிகளும் பேசுவதில்லை.