பா.ஜெயப்பிரகாஷ், தேனி
பலாப்பழத்தை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மன்சூர்அலிகான் பற்றி?
சாதாரண மனிதர்களே தங்களை நாயகன்- நாயகியாக சித்தரித்து வீடியோக்களை வைரலாக்கும் காலம் இது. மன்சூர்அலிகான் திரைப்படக் கலைஞர். முதல் படத்திலேயே தன் கதாபாத்திரத்தின் மூலம் படத்தின் நாயகன் அளவுக்கு ரசிகர்களை ஈர்த்தவர். தான் தயாரித்த படத்திற்கு கிலோ மீட்டர் நீளத்திற்கு தலைப்பு வைத்து திரும்பிப் பார்க்க வைத்தவர். தேர்தல் அரசியலையும் விட்டு வைக்காமல் களத்தில் இறங்கி விவசாயி வேடம் போடுவது, சுரைக்காயை பச்சையாகக் கடித்து சாப்பிடுவது என கவனத்தை ஈர்க்க முயன்றவர். பிறந்தநாளில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டும் புள்ளீங்கோ பாய்ஸ் காலத்தில், பலாப்பழத்தை வெட்டியிருக் கிறது பெருசு. நீங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் என்பது போன்ற கவன ஈர்ப்பு இது.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
சல்மான் ருஷ்டியை தாக்கியவருக்கு ஈரான் அரசு நிலம் பரிசாக அளித்து இருப்பது குறித்து?
பிரதமர் நரசிம்மராவ் தலைமை யிலான காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த போது, விவசாயிகள் என்ற பெயரில் அ.தி. மு.க.வினர் அவர் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதை ஸ்டில் பை ஸ்டில்லாக நக்கீரன் வெளியிட்டது. என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மாநிலத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க? என எல்லாரும் எதிர்பார்த்தார்கள். மத்திய அமைச்சரைத் தாக்கிய அ.தி.மு.க பிரமுகர் இளவரசனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வரை தந்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. ஈரான் அரசும் நம்ம ஊர் இரும்புப் பெண்மணி போன்றதாக இருக்கக்கூடாதா!
டி.ஜெயசிங், கோயம்புத்தூர்
தேர்தல் பிரச்சாரத்தின் போது புரோட்டா வீசுவது, தோசை சுடுவது, டீ அடிப்பது இதையெல்லாம் செய்யும் வேட் பாளருக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா?
தேர்தல் என் பது ஜனநாயகத் திருவிழாவாக மாறி விட்டது. அதிலும் இடைத்தேர்தல் களம் என்றால் அதகளம்தான். செய்தித்தாள்கள், வானொலி இவை மட்டுமே ஊடகங்களாக இருந்த காலத்தில் சுவர் எழுத்து விளம்பரங் கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், ஒலிபெருக்கிகள் இவற்றின் மூலம்தான் ஓட்டுக் கேட்பது நடந்தது. வேட்பாளர் கள் ஒவ்வொரு வீடாக நடந்து சென்று, “"அம்மா.. ஓட்டுப் போடுங்க, “அய்யா.. ஓட்டுப் போடுங்க'’என்று கேட்டார்கள். தலைவர்கள் வந்து பரப்புரை செய்தார்கள். அவர்களுக்காக மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தார்கள். விடிய விடிய காத்திருந்த காலமும் உண்டு. இப்போது ஊடக உலகம் மாறிவிட்டது. தொலைக்காட்சி ஊடகங்களைத் தாண்டி, அவ ரவர் கையிலும் இருக்கும் செல்போன் அற்புத ஊடகமாகி விட்டது. அவரவரும் ஊடகத்தினர்தான். வேட்பாளரும் ஊடகவியலாளர். வாக்காளரும் ஊடகவியலாளர். இருவருக்கும் இடையே அல்லாடும் கட்சிக்காரர்களும் ஊடகவியலாளர்கள்தான். காட்சிமயமாகிவிட்ட உலகில், பேசி ஓட்டுக் கேட்கும் பழைய பழக்கம் பலன் தருவதில்லை. யாரும் விரும்புவதுமில்லை. அதனால், காட்சிப்படுத்துவதற்கேற்ற வகையில் புரோட்டா வீசுவது, தோசை சுடுவது, டீ அடிப்பது எனத் தொடங்கி, துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது வரை இறங்கி விட்டார்கள். எல்லாமும் ஊடகங்களில் பரவி அலப்பறை செய்கிறது. ஒரு வீட்டுப் பெண்மணியிடம், "பாப்பாவுக்கு ஏன் டயப்பர் மாற்றவில்லை?' என்று கேட்டால், "வேட்பாளர் கொஞ்ச நேரத்தில் இங்கே ஓட்டுக் கேட்க வருவார். அவர் மாற்றிவிடுவார்' என்று சொல்லக்கூடிய நிலைமை உருவாகி இருக்கிறது. எல்லா வேட்பாளர்களும் இந்த லெவலுக்கு இறங்கியிருந்தாலும், வெற்றி பெறப்போகிறவர் ஒரே ஒரு வேட்பாளர்தான். அதுவும் இடைத்தேர்தல் என்றால் இது போன்ற வெற்று வேலை செய்து ஜெயிக்க முடியாது. வெயிட்டாக செயல்பட்டால்தான் முடியும் என்பது ஓட்டுக் கேட்பவருக் கும் தெரியும். ஓட்டுப் போடுபவருக்கும் தெரியும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுக்கு வக்காலத்து வாங்கும் அண்ணாமலை ஏன், டெல்லி தமிழ் மாணவர்களுக்கும், கர்நாடகா சுட்டு வீழ்த்திய ராசாவுக்கும் பதில் பேசவே இல்லையே?
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் களைத் தாக்கியவர்கள் ஆர்.எஸ்.எஸ் மாணவர்கள். அண்ணாமலையால் எப்படி கண்டிக்க முடியும்? தன்னை proud Kannadiga என்று சொல்லிக்கொண்ட அண்ணா மலை, கர்நாடக வனத்துறையால் தமிழர் பலியாக்கப்பட்டால் எப்படி வாய் திறப்பார்? இந்திய ராணுவ வீரர்கள் பலர் தங்களுக்கு உரியளவில் உணவுகூட வழங் கப் படவில்லை என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். ராணுவ நிர்வாகத்தில் பாரபட்சம் இருப்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். உண்மையான தேசபக்தி இருந்தால் அண்ணாமலை அது பற்றியாவது வாய் திறந்திருக்கலாம்.
எம். செந்தில்குமார், சென்னை-78
"தமிழ் எங்கே இருக்கிறது என்று சொன்னால் ஐந்து கோடி பரிசு'' என்று ராமதாஸ் அறிவித்துள்ளாரே?
"தைலாபுரத்தில் கூடவா தமிழ் இல் லீங்கய்யா' என்று யாராவது கேட்டால் ஒருவேளை அந்த நபருக்கு 5 கோடி ரூபாய் பரிசு கிடைக்க வாய்ப் பிருக்குமோ!