2024 நாடாளுமன்ற தேர்தலைப் பொருத்தவரை எங்கள் கண்ணுக்கு தெரிந்த வரை போட்டியாளரே இல்லை என்ற அமித்ஷாவின் கருத்து பற்றி...

Advertisment

இப்படித்தான் இங்கே ஒரு அம்மையார் 2016ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கட்சிக்குள்ளேயே வில்லன்கள் இருந்திருக்கிறார்கள் என்பது கடைசியில்தான் தெரிந்தது.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

முன்பு குஜராத் கலவரம் குறித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதாசிவத்துக்கு கேரள கவர்னர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அப்துல் நசீருக்கு ஆந்திரா கவர்னர் பதவி வழங்கப்பட்டு இருப்பது குறித்து?

எல்லா கட்சிகளையும் ஊழல் கட்சி, வாரிசு அரசியல் கட்சி, தேசவிரோத கட்சி என்று பலவகையாகக் குற்றம்சாட்டும் பா.ஜ.க.வும் அதன் ஆட்சி நிர்வாகமும், இந்தியா என்கிற பன்முகத்தன்மை கொண்ட நாட்டுக்கே வேட்டு வைக்கும் கட்சி என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அம்பேத்கரை பெயரளவுக்கு பயன்படுத்திக்கொண்டு அவர் தலைமை யில் உருவான அரசியல் சாசனத்திற்கு எதிராக நடப்பதும், தேசபக்தி என்று பேசிக் கொண்டு மதவெறி-சாதி ஒடுக்குமுறை-மாநில உரிமைகள் பறிப்பு- இந்திய மொழிகள் மீது ஆதிக்கம் எனப் பலவித பேராபத்துகளை உரு வாக்குவதும், பா.ஜ.க.வுக்கு தொடர்ச்சியான வேலைத் திட்டமாக உள்ளது. அதில் ஒன்று தான் உங்கள் கேள்வியின் சாராம் சம். விமர்சனம் செய்பவர்களையும், எதிர்ப்பவர்களையும் அவமானப்படுத்தி, அவதூறாக சித்தரிப்பதும், ஆதரிப்பவர்களுக்கு பட்டவர்த்தனமாகத் தெரியும் வகையில் உயர்பதவிகளைக் கொடுப்ப தும் பா.ஜ.க. ஏற்படுத்தியுள்ள மோசமான ஜன நாயகச் சீரழிவுகள். தேர்தல் களத்தில் தொடர்ச்சியான வெற்றி கிடைக்கிறது என்கிற இறுமாப்பில் இத்தனையும் தொடர்கிறது. அதற்கு, படித்த-பண்பாளர்கள் என்று கருதப் படுகிற பொறுப்புகளில் இருப்பவர்களே துணை போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது இன்றைய நிலையில் மிகச்சவாலான ஒன்றாகும்.

Advertisment

dd

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் - தேனி

"வடக்கனும், கிழக்கனும், தெற்கனும், மேற்கனும், நம்மைப்போல் தன் குடும்பத்தை காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன் தான்" என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறி யுள்ளது பற்றி?

இவ்வளவு நீட்டி முழக்காமல், யாதும் ஊரே.. யாவரும் கேளிர் என்று சொன்னவர் தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றன். எந்தத் திசையில் இருந்து வந் தாலும், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வாழ்வளிக்கும் நிலமாக இன்றளவும் இருக்கிறது தமிழ்நாடு. உயர்கல்வியில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலமாக இருப்பதால், உடல் உழைப்புத் தொழிலாளர்களாக வடமாநிலத் தவர்கள் இங்கு வந்து பணி செய்யும் வாய்ப்பு அமைகிறது. அத்துடன், தொழில்கட்டமைப்பு களும் மேம்பட்டு வருவதால் வடநாட்டவர்கள் இங்கு வந்து முதலீடு செய்கின்றனர். தொழிலாளர்களாக வருபவர்கள் பெரிய சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் அல்ல. பனியா போன்ற சமுதாயத்தினர் தொழிலாளர்களாக ஆவதில்லை. ஆனால், முதலாளிகளும் தொழிலாளர்களும் வடமாநிலத்தவர்களே என்ற நிலை வரும்போது தமிழ்நாட்டின் வளங்கள் சுரண்டப்படும். தமிழர்கள் மீதான ஒடுக்கு முறை அதிகரிக்கும். தமிழ்ப் பண்பாட்டு அடித்தளங்கள் தகர்க்கப்படும். ஆரியத்தின் ஆதிக்கத்திலிருந்து பெருமளவு மீட்பு முயற்சி களையும் விழிப்புணர்வையும் உருவாக்கியது திராவிட இயக்கம். அதுபோல இப்போதும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் இல்லை. 20 கிலோ அரிசி இலவசம், கல்வி, பாடப்புத்தகம், பஸ் பாஸ் எல்லாம் இலவசம். வடமாநிலங்கள் பலவற்றில் இந்த கட்டமைப்பு கிடையாது. அதனால் தமிழ்நாட்டு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றுடன் பலரும் செட்டில் ஆகிவிடு கிறார்கள். வடமாநில முதலாளிகளையும் தொழிலாளர்களையும் இங்கே குவித்து, அவர்களை பா.ஜ.க. போன்ற அரசியல் இயக்கங்கள் ஓட்டு வங்கிகளாக மாற்ற முயற்சிக்கின்றன. எந்த மொழி பேசி னாலும் தொழி லாளர்களின் பாதுகாப்பு என் பது முக்கியமானது. அரே.. வாங்கோ.. குந்துங்கோ என்று தமிழில் பேசினாலும் முதலாளிகளின் ஆதிக்கம் கவனத்திற்குரியது. தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாதிப்பில்லாத ஒரு சூழலை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவை.

ஜெ.கிருஷ்ணதேவு, மதகடிப்பட்டு -புதுச்சேரி

Advertisment

"பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்; பிரியாணி கொடுத்தால் சாப்பிடுங்கள். ஆனால் வாக்கை மட்டும் அ.தி.மு.க.வுக்கு செலுத்துங்கள்' என்று இ.பி.எஸ். கூறியிருப்பது பற்றி?

அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தேர்தல் களின்போது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இதைத்தான் சொன் னார். அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு, எங்களுக்கு வாக்களியுங்கள் என்றார். இப் போது தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். களத்தின் நிலவரத்தைக் கணித்துவிட்டால், உண்மைகளை பூசி மெழுகி பேசியாக வேண்டி இருக்கும். அதுதான் தேர்தல் களம்.

வாசுதேவன், பெங்களூரு

பழமொழிகளில் என்றும் புதுமையாக இருப்பது?

பல மொழிகள் உண்டு. அதில் ஒன்று, ஆசை வெட்கமறியாது.