த.சத்தியநாராயணன், அயன்புரம்

மறைந்த பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பை காங்கிரஸ் பாராட்டியது சரியா... தவறா?

இந்தியாவுடன் முரண்பட்ட முகமது அலி ஜின்னா, பூட்டோ, ஜியா-உல்-ஹக் உள்ளிட்ட பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மரணமடைந்த போது, இந்தியாவின் தரப்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எதிரி நாடாக இருந்தாலும், மரணத்தில் இரங்கல் என்பதும் அப்போது இறந்தவரின் பெருமைகள் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்வதும் எல்லா நாட்டிலும் மரபுதான். கோட்சே வாரிசுகளுக்கு அந்த மரபு தெரியாது. அதனால், காங்கிரஸ் மீது பாய்கிறார்கள்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்

Advertisment

50 மாணவிகள் மத்தியில் பிளஸ் டூ தேர்வெழுத அமரவைக்கப் பட்ட பீகார் மாணவர் பதற்றத்தில் மயங்கி விழுந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆண்-பெண் சேர்ந்து படிக்கும் பள்ளிகள் சிலவற்றில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, ஒரு பையன் தன் அருகில் இருக்கும் பையனிடம் அதிகமாகப் பேசினால், அவனை இரு பெண்களுக்கு நடுவே உட்கார வைத்து விடுவார்கள். அப்படி உட்கார வைத்தால், எதிர்பாலினத்தின் முன் பையன் அடக்க ஒடுக்கமாக இருப்பான் என்பதுதான் இந்த வழக்கத்திற்கு காரணம். இது ஒரு வகை தண்டனையாகவும் அமைந்தது. இரண்டு மாணவிகள் நடுவே உட்காரும்போதே பதற்றத்தில் அமைதியான மாணவர்கள் உண்டு. அப்படிப்பட்ட பள்ளியில் பயின்றவரோ என்னவோ, அந்த 50 மாணவிகள் மத்தியில் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்ட பீகார் மாணவர்!

எஸ்.அஜீம், உடையார்பாளையம்

Advertisment

மோடியின் மன் கி பாத், பரீஷா பே சர்ச்சா நிகழ்ச்சிகள்?

ஊடகங்கள் வளர்ந்துள்ள காலத்தில், ஆட்சியாளர்கள் மக்களுடன் அதிகளவில் தொடர்பை வைத்துக் கொள்வது நல்லது. ஆனால், அது வெற்று விளம்பரமாக இருக்கக்கூடாது.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

இங்கிலாந்து நாட்டு மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசிய நபருக்கு வெறும் 18 ஆயிரம் ரூபாய் அபராதம்தானா?

முட்டை விலையை ஒப்பிடும்போது, அபராதத் தொகை அதிகம்தானே! முட்டை, அழுகிய தக்காளி ஆகியவற்றை வீசுவது எதிர்ப் பின் அடையாளம். துப்பாக்கித் தோட்டாவைப் பயன்படுத்த வில்லை என்று காட்டிக் கொள்ளும் ஜனநாயக முறை என நீதிபதிகள் தீர்மானித் திருக்கலாம்.

திலகர் ஈஸ்வரன், தேவூர், மேட்டுக்கடை

ஆடியோ- வீடியோ அர சியலையே அண்ணாமலை முன்னிலைப்படுத்துவதேன்?

குஜராத் மாடல் என்ற பெயரில் சிங்கப்பூர், ஆஸ்தி ரேலியா, சீனா நாடுகளின் வளர்ச்சியை வீடியோவாகப் பரப்பி இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தது மோடியின் பா.ஜ.க.! அதையே அக்கட்சியின் நிர்வாகிகளும் பேச்சாளர்களும் பரப்புரையாக மேற்கொண்டார்கள். கர்நாடகா வில் சட்டமன்றக் கூட்டத் தொடரின்போதே வில்லங்கமான வீடியோக்களைப் பார்த்து ரசித்தவர்கள் பா.ஜ.க.வினர். மூத்தவர்களின் வழியைப் பின்பற்றுகிறார் அண்ணாமலை.

பி.கேசவன், கரூர்

ஈரோடு இடைத்தேர்தலில் கட்சித் தொண்டர்களுக்கு என்ன மிஞ்சும்? வாக்காளர்களுக்கு என்ன மிஞ்சும்?

வாக்காளர்களுக்கு சில ஆயிரங்கள். உண்மையாக உழைக்கும் கட்சித் தொண்டர்களுக்கு கணக்குப் பார்த்தால் அதுவும் இல்லை.

prabhakaran

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

பிரபாகரன் மற்றும் அவர்கள் குடும்பத் தினர் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறி இருப்பது எந்த வகையில் உண்மை?

நாங்களும் அரசியலில் உயிர்ப்புடன் இருக்கிறோம் என்கிற அளவில் உண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

பா.ஜெயப்பிரகாஷ், தேனி

அதானி குழும விவகாரத்தில் பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு ராகுல்காந்திக்கு மக்களவைச் செய லகம் உத்தரவிட்டுள்ளது குறித்து?

குற்றவாளி பற்றி புகார் கொடுத்தால், அப்படி புகார் கொடுத்த வரையே போலீசார் விசாரணைக்கு அழைத்து பாடுபடுத்துவதில்லையா! அதுபோலத்தான் இதுவும். ராகுல் காந்தியின் வாயை அடைக்க நினைக்கலாம். மக்கள் பேச ஆரம் பித்துவிட்டார்கள். அதனை அடைக்க மோடி அரசால் முடியாது.

எஸ். இராமதாஸ், புதுச்சேரி

"என்னுடைய அரசியல் எதிரி சாதிதான்'என்று கமல்ஹாசன் கூறியுள்ளாரே?

சாதி என்பது சமுதாயத்தின் எதிரி. அரசியல் கூட்டாளி. அதுவும் தேர்தல் அரசியலில் சாதியின் பங்களிப்பு என்ன என்பது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனுக்குப் புரிந்திருக்கும்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பெண் குழந்தைகள் அதிகளவில் பட்டம் பெறுவதைப் பார்க் கும்போது இதுதான் புதிய இந்தியா என தோன்றுகிறது என்கிறாரே ஆர்.என்.ரவி?

பழைய இந்தியாவின் பெருமை என்று அவர் பேசி வந்த சனாதன தர்மம்தான், பெண்களை ஆயிரம் ஆண்டுகளாக படிக்க விடாமல் செய்தது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஆளுநர்.