Advertisment

மாவலி பதில்கள்!

mm

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

அதானி விவகாரத்தில் மோடியும் மத்திய அரசும் மவுனம் காப்பது ஏன்?

திருடர்களுக்குத் தேள் கொட்டினால் அலற முடியாதே!

ff

Advertisment

நித்திலா, தேவதானப்பட்டி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மறைவு?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பஸ் போக்குவரத்து நடைபெற பிரதமர் வாஜ்பாயுடன் கை குலுக்கியவர் முஷாரஃப். கார்கில் பகுதியில் இந்தியாவுடன் சண்டை போடுவதற்காகத் தீவிரவாதி களுக்கு ஆயுதம் வழங்கியவரும் அவர்தான். உறவையும் பகையையும் மாறி, மாறி கையாண்டவர். ராணுவத்திற்குத் தலைமை தாங்கியவர் என்றாலும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் ஒத்துழைத் தவர். பாகிஸ்தான் அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்பதற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு.

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77

இ.பி.எஸ். அரசியலில் ஒரு சாணக்கியர் என்பதை, நடக்கும் ஈரோடு தேர்தல்

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

அதானி விவகாரத்தில் மோடியும் மத்திய அரசும் மவுனம் காப்பது ஏன்?

திருடர்களுக்குத் தேள் கொட்டினால் அலற முடியாதே!

ff

Advertisment

நித்திலா, தேவதானப்பட்டி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மறைவு?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பஸ் போக்குவரத்து நடைபெற பிரதமர் வாஜ்பாயுடன் கை குலுக்கியவர் முஷாரஃப். கார்கில் பகுதியில் இந்தியாவுடன் சண்டை போடுவதற்காகத் தீவிரவாதி களுக்கு ஆயுதம் வழங்கியவரும் அவர்தான். உறவையும் பகையையும் மாறி, மாறி கையாண்டவர். ராணுவத்திற்குத் தலைமை தாங்கியவர் என்றாலும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் ஒத்துழைத் தவர். பாகிஸ்தான் அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்பதற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு.

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77

இ.பி.எஸ். அரசியலில் ஒரு சாணக்கியர் என்பதை, நடக்கும் ஈரோடு தேர்தல் களத்தில் இரட்டை இலையை பெற்று நிரூபித்துவிட்டார் அல்லவா?

பதவி, அதிகாரம் இவற்றுக் காக எதைக் கொடுத்தேனும் காப்பாற்றிக் கொள்வதுதான் சாணக்கியத்தனம் என்றாகிவிட் டது. நீட் தேர்வு, உதய் மின் திட் டம் உள்ளிட்டவற்றில் தமிழ்நாட் டுக்கு வஞ்சகம் செய்துதான், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போதே அ.தி.மு.க. ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார்கள். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, யார் தலைமையில் ஆட்சி என் பதில் தர்ம யுத்தங்களும், பேரங் களும், புரோக்கர் வேலைகளும் வெளிப்படையாக நடத்தப்பட்டன. இதில் அ.தி.மு.க. தலைவர்கள் மட்டுமல்ல, பா.ஜ.க பிரமுகர்கள், கவர்னர், பிரதமர் என உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ஈடுபட்டார்கள். 4 ஆண்டு காலம் ஆட்சியை நடத்துவதற்கு சாணக் கியர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த விலை அதிகம். அதில், தமிழ்நாட் டின் உரிமைகளும் அடக்கம். பதவி, அதிகார காலம் முடிந்த பிறகு, அ.தி.மு.க. என்கிற வலிமையான அரசியல் கட்சியின் பங்களிப்பைக் குறைத்து, தமிழ்நாட்டில் பா.ஜ.க. கால் ஊன்றிவிட்டது போலவும், அடுத்த தேர்தலில் அது வெற்றி பெற்றுவிடும் என்பது போலவும் தோற்றத்தை உருவாக்குவதற்கும் துணை நின்றவர் எடப்பாடி பழனி சாமி. இப்பவும் அவரது குடுமி, டெல்லியிடம் இருக்கிறது. எப்போ தெல்லாம் அதை ஆட்டவேண்டும் என்று டெல்லி நினைக்கிறதோ, அப்போதெல்லாம், ஓ.பி.எஸ். என்ற பொம்மைக்கு சாவி கொடுத்து ஆட்டிவிடும். அந்த பொம்மையும் தனக்கு எல்லா செல்வாக்கும் இருப்பதாக நினைத்து ஆடும். டெல்லி எதிர்பார்க்கும் அரசியல் கணக்குகள் ஓரளவு நிறைவேறிய தும், ஓ.பி.எஸ். என்ற தலையாட்டி பொம்மையை ஓரங்கட்டிவிட்டு, எடப்பாடி பழனிசாமியின் தலைமை யிலான அ.தி.மு.க. மீது சவாரி செய்யும். அதற்கேற்ப, முதுகைக் கொடுப்பார் பழனிசாமி. இப்போ தும் அதுதான் நடந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள தேர்தல் சின் னங்களிலேயே டெல்லி தர்பாரின் மனநிலைக்கேற்ப ஆட்டுவிக்கப் பட்ட ஒரே சின்னம் என்றால் அது இரட்டை இலைதான். இது அ.தி.மு.க.வுக்குப் பெருமையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

மத்திய பட்ஜெட்டால் பட்டியலின மக்கள் தான் பாதிக்கப்படுவதாக சோனியா காந்தி கூறியுள்ளாரே?

பட்டியலின மக்கள் மட்டுமா? சிறுபான்மையினர், பழங்குடிகள், மாநிலங்களுக்கான ஒதுக்கீடு, கல்வி, சுகாதாரம், வேளாண்மை என அனைத்து நிலைகளிலும் பாதிப்பை ஏற் படுத்தியுள்ளது ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட். சிறுபான்மை மதத்தினரான முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பவுத்தர், பார்சி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த மவுலானா ஆசாத் பெய ரிலான தேசிய கல்வி ஊக்கத் தொகையை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் மாதந்தோறும் பெற்று வந்த 33ஆயிரத்து 700 ரூபாய் ஊக்கத் தொகை நின்றுபோய், மாதாமாதம் அவர் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கிறார். முஸ்லிம் சமுதாயத்துப் பெண்கள் படித்து முன்னேற இந்த உதவித்தொகை பெரும் வாய்ப்பாக இருந்தது. அது முடக்கப்பட்டதால் அந்த சமுதா யத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை முஸ்லிம் சமுதா யத்தினர் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டியின் பரிந்துரையின்படி இந்த உதவித் தொகையை மன்மோகன்சிங் அரசு வழங்கி வந்தது. அதில் மண் அள்ளிப் போட்டு, கல்விக் கண்கள் தெரியாதபடி செய்திருக்கிறது மோடி அரசு.

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

நிலநடுக்கம் துருக்கி, சிரியாவை சின்னாபின்ன மாக்கிவிட்டதே?

"இயற்கை குலுங்கிச் சிரித்தால், மனிதர்கள் தாங்க மாட்டார்கள்' என்பதை இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டேயிருக்கின்றன.

nkn110223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe