Advertisment

மாவலி பதில்கள்

ss

தே.மாதவன், கோயமுத்தூர்-45

சினிமா படத்தில் வரும் வசனம் போல மத்திய பட்ஜெட் ஓராயிரம், இரண்டாயிரம், மூன்றாயிரம் கோடி என அள்ளித் தெளித்து விட்டார்களே?

Advertisment

அத்தனை ஆயிரம் கோடியில், ஒரு சில கோடி கூட தமிழ்நாட்டில் திட்டமிடப் பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்படவில்லை. வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. கல்விக் கான நிதி ஒதுக்கீடும் குறைவாக உள்ளது. பட்டினிச் சாவைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான (100 நாள் வேலை திட்டம்) நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. ஆயிரமாயிரமாய் அள்ளி வீசியதெல்லாம், அடுத்ததாக தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களுக்கு மட்டும்தான். கலர்ப் பொடி தூவும்போது கலக்கலாக இருக்கும். ஆனால், கண்கள் பாதிக்கப்பட்டுவிடும். அதுதான் மோடி ஆட்சியில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்.

செந்தில்குமார்

செந்தில்குமார்.எம், சென்னை-78

காங்கிரஸுடன் கைகோர்க்க நினைக் கும் கமலின் திட்டம் என்னவாக இருக்கும்?

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல் ஹாசன். அதன்பிறகு, நடன இயக்குநராக இருந்தார். இயக்குநராக விரும்பினார். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் நல்ல கதாபாத்திரமாக நடித்தார். ஹீரோ ஆனார். சிறந்த நடிகர் விருது பல முறை பெற்றார். இலக்கை அடைவதற்கு எப்போது எந்த ரூட்டில் பயணிக்க வேண் டும் என்பது கமலுக்கு அனுபவப் பாடம். தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் வெற்றிபெற முடியாமல் போனாலும், ஒரு எம்.பி. பதவி மூலம் இந்திய நாடாளுமன்றத்தில் இருப்பைப் பதிவு செய்யலாம் என்பது அரசியல் கணக்கு. அதற்கேற்ற ரூட் போடும் வேலை நடக்கிறது.

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

இ.இ.ஈ. ஆவணப் படத்திற்குப் பிரதமர் மோடி இத்தனை பயப்படக் காரணம்?

குஜராத் மாடல் என்று சொல்லித்தானே அந்த மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வெற்றி பெற்றது பா.ஜ.க. அந்த மோடியின் குஜராத் மாடல் என்பது எத்தகைய தன்மை வாய்ந்தது, அதன் உண்மை முகம் என்ன என்ப தற்கு, கோத்ரா ரயில் எரிப்பு கொடூரமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மதவெறிக் கொடூரங்களுமே சாட்சியங்கள். அதில் மோடி அரசின் நேரடிப் பங்கு என்ன என்பதை வெளிப்படுத்திய காவல்துறை உயரதிகாரிகள் சிறையில் வாடுகிறார்கள். உண்மையைப் பேசத் துணிந்த சொந்தக் கட்சிக்காரர்கள் இப்போது இந்த உலகிலேயே இல்லை. கொலை வெறித் தாண்டவத்தின் ஒவ்வொரு நொடியும், ஹிட்லர்-முசோலினி ஆட்சிகளை மிஞ்சக் கூடியவை. உயிரிழந்தவர்கள், பாலியல் கொடுமைக்குள் ளானவர்கள், வயிற்றில் இருந்த சிசுவைக் கிழித்து சின்னாபின்னமாக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண், உயிரோடு தீ வைக்கப்பட்டவர்கள் என எவருக்கும் இன்றுவரை அந்த மண்ணில் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால், பத்திரிகை யாளர்கள் அன்று முதல் இந்த அவலத்தை அம்பலப்படுத் திக்கொண்டே இருக்கிறார்கள். அவுட்லுக், டெஹல்கா, தி இந்து உள்பட இந்தியாவின் பல பத்திரிகைகள் வெளிப்படுத்தின. தமிழில் நக்கீரன் பங்கும் உண்டு. ஆனால், மோடியும், பா.ஜ.க.வும் தேர்தல் அரசியலில் தொடர்ந்து பெற்ற வெற்றிகளால் அத்தனை கொடூரங்களும் மறைக் கப்பட்டன. மறந்து போயின. உள்ளுக்குள் நெருப்பாக எரியும் ரண வேதனையை இப்போது பி.பி.சி. வெளிக் கொண்டு வந்திருக்கிறது. பயம் இருக்கத்தானே செய்யும்!

Advertisment

dd

வாசுதேவன், பெங்களூரு

"சங்கராபரணம்' புகழ் டைரக்டர் கே.விஸ்வநாத் மறைவு!

கலை, பண்பாட்டைக் காப்பாற்றும் கலைப் படங் களை எடுத்தவர் கே.விஸ்வநாத். அரசாங்கத்தில் உயர் அதி காரியாக இருந்த சோமையா ஜூலுவை வயதான நாயக னாக "சங்கராபரணம்' தெலுங்கு படத்தில் அறிமுகப் படுத்தினார். கே.வி.மகா தேவன் இசையில் அத்தனை பாடல்களும் மொழி கடந்து ஹிட் ஆனது. அதன்பிறகு, "சாகர சங்கமம்' (தமிழில், சலங்கை ஒலி), "ஸ்வாதி முக்தயம்' (தமி ழில் சிப்பிக்குள் முத்து) உள் ளிட்ட கே.விஸ்வநாத்தின் படங் கள் அவருடைய கலைத் திறனை மட்டுமல்ல, கமல்ஹாசனின் நடிப்பு லிநடனத் திறமையை யும் பெருமளவில் வெளிப்படுத் தக்கூடியதாக அமைந்தது. அதற்கு இளையராஜாவின் இசைப் பங்களிப்பும் முக்கிய மானதாக இருந்தது. ஆந்திரா (இன்றைய தெலங்கானா உள்பட) மாநிலம் இன்னமும் நிலவுடைமைச் சமுதாயத்தைக் கொண்ட மாநிலம். அங்கே பழமைக் கலைகள் -பண்பாடு மீதான அழுத்தமான பார்வை இப்போதும் உண்டு. அதன் பெருமைகளை அதிகமாகவும், அதில் ஏற்படும் உளவியல் பாதிப்புகளை கலை நயத் துடனும் வெளிப்படுத்தியவர் கே.விஸ்வநாத்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

"அதானி குழும முறை கேட்டை விசாரிக்க கூட்டு பார்லிமெண்ட் கமிட்டி அமைக்க வேண்டும்' என எதிர்க்கட்சிகள் கூறியிருப்பது பற்றி?

குறைந்தபட்சம், விஜய் மல்லையா போல அதானி ஒட்டுமொத்தமாக எஸ்கேப் ஆகாமல் தடுக்கலாம். மிச்சமிருக்கும் பொதுத்துறை வங்கிகளையாவது திவால் ஆகாமல் காப்பாற்றலாம்.

nkn080223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe