Advertisment

மாவலி பதில்கள்

ff

சாரங்கன், கும்பகோணம்

படிப்பதற்கு எளிதாகவும், விற்பனைக்கு பரபரப்பாகவும் இருப்பது போல ஒரு புத்தகம் தொகுக்க வேண்டும் என்றால் என்ன தலைப்பு வைக்கலாம்?

Advertisment

அண்ணாமலையும் ஆயிரம் பொய்களும்.

நித்திலா, தேவதானப்பட்டி

அப்பாவுக்குப் பதில் மகன் போட்டி யிட்டுப் பார்த்திருக்கிறோம். மகன் இறந்த தால் அப்பா போட்டியிடு கிறாரே ஈரோடு கிழக்கு தொகுதியில்?

Advertisment

கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி. வசந்தகுமார் இறந்ததால், அவரது மகன் அங்கே நின்று வெற்றி பெற்றிருக் கிறார். தி.மு.க.வில் தங்கம் தென்னரசு, பெரியண்ணன் அரசு போன்றவர்கள் தங்கள் தந்தை இறந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கிற

சாரங்கன், கும்பகோணம்

படிப்பதற்கு எளிதாகவும், விற்பனைக்கு பரபரப்பாகவும் இருப்பது போல ஒரு புத்தகம் தொகுக்க வேண்டும் என்றால் என்ன தலைப்பு வைக்கலாம்?

Advertisment

அண்ணாமலையும் ஆயிரம் பொய்களும்.

நித்திலா, தேவதானப்பட்டி

அப்பாவுக்குப் பதில் மகன் போட்டி யிட்டுப் பார்த்திருக்கிறோம். மகன் இறந்த தால் அப்பா போட்டியிடு கிறாரே ஈரோடு கிழக்கு தொகுதியில்?

Advertisment

கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி. வசந்தகுமார் இறந்ததால், அவரது மகன் அங்கே நின்று வெற்றி பெற்றிருக் கிறார். தி.மு.க.வில் தங்கம் தென்னரசு, பெரியண்ணன் அரசு போன்றவர்கள் தங்கள் தந்தை இறந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்கள். கலைஞர் நின்ற சேப்பாக்கம் தொகுதியில் அவரது பேரன் உதயநிதி போட்டியிட்டு வென்றார். பாரூக் அப்துல்லா வுக்கு பதில் ஒமர் அப்துல்லா, ராஜேஷ் பைலட்டிற்குப் பதில் சச்சின் பைலட் என இந்தியா முழுவதும் இப்படி மகன்கள் போட்டியிடுவது வழக்கம்தான். எனினும், அரசியல் என்பது அதிகாரப் போட்டி நிறைந்த இடம். அதில் நியாய-தர்மங்களைவிட, வியூகமும் வேகமும் முக்கியம். தேர்தல் அரசியல் களத்தில் ஜெயிப்பதற்குத் தந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டும். அது அப்பாவிடம் இருந்தாலும் சரி, மகனிடம் இருந்தாலும் சரி. அதைச் சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். பெரியாரின் கொள்ளுப் பேரன் திருமகன் ஈவெரா இழப்பை பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எப்படி சரி செய்கிறார் என்பதுதான் இந்தத் தேர்தல் களத்தின் முக்கியத்துவம்.

dd

தூயா, நெய்வேலி

குஷ்பு, கங்கணா ரணாவத் தொடங்கி நடிகைகள் பலர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருக்கிறார்களே... இதுபோல மற்ற கட்சிகளில் உண்டா?

காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருந்த காலத்தில் வைஜெயந்திமாலா அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஜெயசித்ரா அக்கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார். நடிகை தீபா காங்கிரசுக்காக படாதபாடுபட்டார். பின்னர் குத்து ரம்யா காலம் வரை காங்கிரஸ் கட்சிக்கு சினிமா நட்சத்திரங்கள் வந்தபடிதான் இருந்தனர். இப்போது காற்று வேறு திசையில் வீசுகிறது.

உலகநாதன், காஞ்சிபுரம்

பிக்பாஸ் சீசன் 6 முடிவில் அறம் வெல்லவில்லை என ரசிகர்கள் கவலைப்படுகிறார்களே?

முதல் சீசனில் நடிகை ஓவியா ஜெயிக்கவில்லையே என வருத்தப்பட்டவர்கள் உண்டு. அடுத்தடுத்த சீசன்களில் இன்னாருக்குப் பதில் இன்னார் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து வெளிப்பட்டது. 6வது சீசனில், விக்ரமன் செயல்பாடுகள் சமூக அக்கறை சார்ந்தவையாக, மனித உரிமை பேசுபவையாக இருந்தன. அசீம் செயல்பாடுகள் மனித இயல்பைக் காட்டுவதாக இருந்தன. விக்ரமனுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குரல் கொடுத்தார். அரசியல் கண்ணோட்டங்களும் வெளிப்பட்டன. பார்வையாளர்களின் வாக்குகளின் எண்ணிக்கைப்படி அசீமே வெற்றியாளர் என கமல் அறிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வணிகத்தன்மை வாய்ந்தவை. அதில் இயன்ற அளவு சமூக அக்கறை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உருவானதே வெற்றிதான். அதைத் தாண்டி பிக்பாஸில் அறம் வெல்ல வேண்டும் என நினைப்பதோ, அறம் வெல்லவில்லையே என வருத்தப்படுவதோ மனதுக்கு பாரம். ஒருவேளை, அசீமும் தனலட்சுமியும் இறுதிக்கட்டம்வரை வந்திருந்தால் வெற்றியாளர் தேர்வு என்னவாக இருக்கும் என நினைத்துப் பார்த்தால் மனது லேசாகிவிடும்.

தென்னரசு, சிம்மக்கல், மதுரை

கவர்னர் மாளிகையை மருத்துவமனையாக்கலாம் என்கிறாரே வைகோ?

மனநல சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாகவா?

nkn280123
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe