டி.ஜெயசிங், கோயம்புத்தூர்
ஹிந்துக்கள் வீட்டில் கத்தி வைத்திருங் கள் என்கிறாரே மத்திய பிரதேச பா.ஜ.க.. எம்.பி. பிரக்யாசிங் தாக்கூர்?
ஒன்றிய அரசு என்று அதிகாரிகள் சொன் னால் புல்டோசர் வரும் என்கிறார் ஹெச்.ராஜா. கத்தி வைத்திருங்கள் என்கிறார் மத்திய பிரதேச எம்.பி. வெட்டுவோம், குத்துவோம் என்கிறார்கள் பா.ஜ.க.வின் பிரமுகர்கள். வெறுப்பும் கொலை வெறியுமே அரசியல் கொள்கையாகக் கொண்டவர்களிடம் கத்தி, குத்துவாள், புல்டோசர் போன்ற வார்த்தைகளைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
தே.மாதவன், கோயமுத்தூர்-45
கரும்பு விசயத்தில் எதிர் கட்சிகள் எறும்பாக செயல்பட்டு வெற்றிபெற்றுவிட்டார்களே?
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலத்தில், “வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது” என்று தி.மு.க.வை உருவாக் கிய அண்ணா முழக்க மிட்டார். மேடைகளில் மட்டுமின்றி, நாடாளு மன்ற மாநிலங்களவை வரை அந்த முழக்கம் உரக்கக் கேட்டது. தேர்தல் களத்திலும் தி.மு.க.வின் வாக்குபலம
டி.ஜெயசிங், கோயம்புத்தூர்
ஹிந்துக்கள் வீட்டில் கத்தி வைத்திருங் கள் என்கிறாரே மத்திய பிரதேச பா.ஜ.க.. எம்.பி. பிரக்யாசிங் தாக்கூர்?
ஒன்றிய அரசு என்று அதிகாரிகள் சொன் னால் புல்டோசர் வரும் என்கிறார் ஹெச்.ராஜா. கத்தி வைத்திருங்கள் என்கிறார் மத்திய பிரதேச எம்.பி. வெட்டுவோம், குத்துவோம் என்கிறார்கள் பா.ஜ.க.வின் பிரமுகர்கள். வெறுப்பும் கொலை வெறியுமே அரசியல் கொள்கையாகக் கொண்டவர்களிடம் கத்தி, குத்துவாள், புல்டோசர் போன்ற வார்த்தைகளைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
தே.மாதவன், கோயமுத்தூர்-45
கரும்பு விசயத்தில் எதிர் கட்சிகள் எறும்பாக செயல்பட்டு வெற்றிபெற்றுவிட்டார்களே?
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலத்தில், “வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது” என்று தி.மு.க.வை உருவாக் கிய அண்ணா முழக்க மிட்டார். மேடைகளில் மட்டுமின்றி, நாடாளு மன்ற மாநிலங்களவை வரை அந்த முழக்கம் உரக்கக் கேட்டது. தேர்தல் களத்திலும் தி.மு.க.வின் வாக்குபலம் உயர்ந்து, அந்த முழக்கத்திற்கு வலிமை சேர்ந்தது. அன் றைய முதலமைச்சர் காமராஜர், இதனை அன்றைய பிரதமர் நேருவின் கவனத் திற்கு கொண்டு சென்றபடியே இருந்தார். அதன் விளைவாக, தமிழ்நாட்டிற்கு வைகை அணை கிடைத்தது. சாத்தனூர் அணை கிடைத்தது. சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் கிடைத்தது. ஆவடி டாங்கி தொழிற்சாலை அமைந்தது. பெரம்பூர் ஐ.சி.எஃப். அமைந்தது. திருச்சி பெல் நிறுவனம் உருவானது. சென்னை அம்பத்தூர் தொழிற் பேட்டை அமைக்கப்பட்டது. அப் போது அண்ணா சொன்னார், எதிர்க்கட்சியின் பணி என்பது மக்கள் நலனுக்கான கோரிக் கைகளை முன்வைத்துப் போராடுவது. ஆளுங்கட்சி யின் பணி அந்தக் கோரிக் கைகளை செயல்படுத்தி மக்க ளின் நலனைப் பாதுகாப் பது” என்று! காமராஜர் ஆட்சிக்காலத் திட்டங்கள் பலவும் இப்படித்தான் எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான கோரிக் கைகள், போராட் டங்கள் மூலம் வந்த வையே. ஜனநாயகத் தின் சிறப்பம்சமே அதுதான். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றார் அண்ணா. பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்வதற்கு காரணம் எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கை. அத்துடன், தி..மு.க..வின் தோழமைக் கட்சிகளும் அதே கோரிக்கையை வைத்த நிலையில், முதல்வரை நெருக்கடி சூழ்ந்தது. மக்களுக்கு இனிப்பான பொங்கல் தொகுப்பு அமைந்தது.
செந்தில்குமார் எம்., சென்னை-78.
"ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின், துரை.வைகோ ஒப்பிடுக?''
2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. காங் கிரஸ் கட்சியால் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக் கூடப் பெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி யை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். அதே தேர்தல் களத் தில், தமிழ்நாட்டின் பல பகுதி களிலும் தி.மு.க. கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார் உதயநிதி. அந்தக் கூட்டணி 40க்கு 39 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளர் ஆனார் உதயநிதி. பின்னர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி, தற்போது அமைச் சரும் ஆகிவிட்டார். ஆளுங்கட்சி யாகத் தனது பொறுப்புகளை நிறைவேற்றவேண்டிய நிலையில் இருக்கிறார் உதயநிதி. இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற் கொண்ட ராகுல்காந்தி, காங்கிரசை மீண்டும் வலிமைப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார். ராகுல் மீதான அவரது அம்மா சோனியாவின் நம்பிக்கையை தேர்தல் களத்தில் வெளிப்படுத்தியாக வேண்டும். உதயநிதி மீதான அவரது அப்பா மு.க. ஸ்டாலினின் நம்பிக்கையை அமைச்சர் பொறுப்பில் செயல்படுத்திக் காட்டவேண்டும். வைகோவின் ம.தி.மு.க.வை எதிர்கால வளர்ச்சிக்கேற்ற வகையில் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பில் இருப்பவர் துரை.வைகோ. உலக வரலாற்றின் பக்கங்களை அறிந்தவர் வைகோ. அவருடைய புதல்வரும் திராவிட இயக்க வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், சவாலான முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கான வழியைக் கண்டு, தன் மீதான நம்பிக்கையை சாதனையாக்கிக் காட்டுவார்.
வாசுதேவன், பெங்களூரு
உலகின் கவனத்தை ஈர்த்த பிரேசில் கால்பந்து வீரர் பீலே மரணம்?
உண்மையாகவே ஏழைத் தாயின் மகன். தேநீர்க் கடையில் வேலை பார்த்து, அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் கால்பந்தாட்டக் கனவுகளை நிறைவேற்றிக் கொண்டவர். வெறுங்காலுடன் மைதா னத்தில் விளையாடிப் பயிற்சிப் பெற்றவர். அவரது அசாத்திய திறமையி னால் 17 வயதிலேயே பிரேசில் நாட்டு அணியில் இடம்பெற்று, மிகக் குறைந்த வயதில் உலகக் கோப்பை போட்டியில் கோல் அடித்தவர். ஹாட் ரிக் கோல்கள் அவருக்கு சர்வசாதாரணம். மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற பெருமைக்குரியவர். மாரடோனா, ரொனால் டோ, மெஸ்ஸி என எந்த நாட்டு விளையாட்டு வீரர்களாக இருந்தாலும் அவர்களின் திறமையைப் பாராட்டியவர். ஐரோப் பாவின் ஆதிக்கத்திலிருந்த கால்பந்து விளையாட்டை தென்அமெரிக்காவின் பக்கம் திருப்பியவர். தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்றுள்ள நிலையில், தனது 82வது வயதில் உயிர் நீத்திருக்கிறார் பீலே.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
மோடியின் தாயார் ஹீராபென் மறைவு குறித்து?…
நிறை வாழ்வு.