Advertisment

மாவலி பதில்கள்!

dd

மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

கடந்த காலத்தின் தவறுகளை சரி செய்கிறது புதிய இந்தியா என் கிறாரே பிரதமர் மோடி...

Advertisment

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லி ஒரு புதிய இந்தியாவைப் பிறக்க வைத்தார். ஜி.எஸ். டி.யைக் கொண்டுவந்து ஒரு புதிய இந்தியாவைப் பிறக்க வைத்தார். இப்படி எத்த னையோ புதிய இந்தியாக் கள் அவரது அரசின் தவறு களாலேயே பிறந்துள்ளன.

Advertisment

ச.இராமதாசு சடையாண்டி, வானூர்

"சனாதன சக்திகளை முற்றிலுமாக அப்புறப்படுத்துவதுதான் ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணத்தின் நோக்கம்' என்று திருமாவளவன் கூறியிருப்பது பற்றி?

dd

பா.ஜ.க.வை எதிர் கொள்ளாமல் தவிக்கும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு பலத்தை உயர்த்துவதற் காகத்தான் ராகுல்காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார் என்றே அரசியல் களமும் ஊடகமும் கணித்தது. தொடங்கியதன் காரணம் அதுவாகக்கூட இருக்கலாம். தொடர்

மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

கடந்த காலத்தின் தவறுகளை சரி செய்கிறது புதிய இந்தியா என் கிறாரே பிரதமர் மோடி...

Advertisment

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லி ஒரு புதிய இந்தியாவைப் பிறக்க வைத்தார். ஜி.எஸ். டி.யைக் கொண்டுவந்து ஒரு புதிய இந்தியாவைப் பிறக்க வைத்தார். இப்படி எத்த னையோ புதிய இந்தியாக் கள் அவரது அரசின் தவறு களாலேயே பிறந்துள்ளன.

Advertisment

ச.இராமதாசு சடையாண்டி, வானூர்

"சனாதன சக்திகளை முற்றிலுமாக அப்புறப்படுத்துவதுதான் ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணத்தின் நோக்கம்' என்று திருமாவளவன் கூறியிருப்பது பற்றி?

dd

பா.ஜ.க.வை எதிர் கொள்ளாமல் தவிக்கும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு பலத்தை உயர்த்துவதற் காகத்தான் ராகுல்காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார் என்றே அரசியல் களமும் ஊடகமும் கணித்தது. தொடங்கியதன் காரணம் அதுவாகக்கூட இருக்கலாம். தொடர்வதன் காரணம் மாறுபட்டிருக்கிறது. நடைப்பயண நேரத்தில் நடந்த குஜராத் தேர்தலில் காங் கிரஸ் கட்சி முன்பிருந்ததைவிட குறைந்த இடங்களையே பிடித்தது. ஆனால், பயணம் தொடர்ந்த மாநிலங்களில் எல்லாம், இந்தியாவின் பன்முகத்தன்மை வெளிப்பட்டது. தேர்தல் அரசியலில் புதைந்து போய்விட்டதோ என பயந்திருந்த பன்மைத்துவம் ராகுலின் நடைப்பயணத்தில் வெளிப்படத் தொடங்கியது. இது ஒரே நாடல்ல, ஓராயிரம் வேற்றுமைகளை மதித்து ஒற்றுமையாக இருக்கும் நாடு என்பதை ராகுலின் பயணம் எடுத்துக்காட்டியிருக்கிறது. பப்பு என்று அவரைக் கிண்டல் செய்தவர்கள், தப்புக் கணக்குப் போட்டிருப்பதை உணர்ந்து வருகிறார்கள். இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள நிலைமையைப் பார்த்து, "நீங்கள் வளர்ச்சி அடைவதற்கு ஆங்கிலம் படியுங்கள்' என்கிறார் ராகுல். அரை நூற்றாண்டுக்கு முன்பே இதனைச் சொன்னது திராவிட இயக்கம். தாய்மொழியும் ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கையைக் கடைப் பிடித்து இந்தியாவின் முன்னேறிய மாநிலமாகத் திகழ் கிறது தமிழ்நாடு. அண்டை மாநிலங்களும் இன்று அதையே வழிமொழிகின்றன. காலத்தின் வேகத்தை கவனத்தில் கொண்டு, எதிர்கால சமுதாயத்திற்கு சரியான பாதை காட்டுபவர்களே உண்மையான தலைவர்கள். மதவெறி யைத் தூண்டுவதும், சாதி பாகுபாட்டை வளர்ப்பதும், பழமைவாதம் பேசி முன்னேற்றத்தைத் தடுத்து, தங்கள் சுயநலத்தைக் காப்பதும் சனாதனம். அந்த சனாதன சக்திகளை முற்றிலுமாக அகற்ற ராகுலின் நடைப்பயணம் பயன்படும் என திருமாவளவன் எதிர்பார்க்கிறார். அதற் கான தூரம் இன்னும் இருக்கிறது. எனினும், சனாதன பப்பு ரொம்பநாள் வேகாது என்பதைக் காட்டியிருக்கிறார், பப்பு என கிண்டல் செய்யப்பட்ட ராகுல்காந்தி.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

இந்தியாவுக்கு இன்று காந்தி, நேரு தேவை என ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி?

gg

காந்தி பிறந்த மாநிலத்தில் பட்டேலுக்கு சிலை வைக்கிறது பா.ஜ.க. அரசு. கோட்சேவைக் கொண்டாடு கிறார்கள் சங் பரிவாரத்தினர். கர்நாடக சட்டமன்றத்தில் சாவர்க்கர் படம், காந்திக்குப் பக்கத்தில் திறக்கப்படுகிறது. நாட்டின் நிலைமை பற்றி கேள்வி கேட்டால், எல்லா சீரழிவுகளுக்கும் காரணம் ஜவகர்லால் நேரு என்று அவர் மீது பழி போடப்படுகிறது. ஒன்றிய அரசின் விளம்பரங் களில் நேரு படம் திட்டமிட்டுத் தவிர்க்கப்படுகிறது. காந்தியையும் நேருவையும் தவிர்த்துவிட்டு, வரலாற்றைத் திரிக்கப் பார்க்கும் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பத்தாண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தால் எத்தகைய தலைகீழ் மாற்றங்களை செய்ய முடியும் என்பதற்கு தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கால ஆட்சியே சாட்சியாக இருக்கிறது. தலைமுறைதோறும் உண்மை வரலாற்றை உரக்கச் சொல்ல வேண்டி யிருக்கிறது. அதைத்தான் நினைவுபடுத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவரும் எழுத்தாளருமான கோபண்ணா எழுதிய "மாமனிதர் நேரு' புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய முதல்வர், "அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நேருவிடம் இருந்த ஜனநாயகத் தன்மை, தி.மு.க.வின் மொழிக் கொள்கைக்கு அளித்த மதிப்பு, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் காட்டிய அக்கறை' என வரிசையாகப் பட்டியலிட்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலைமையையும் தோலுரித்துக் காட்டினார். "காந்தியின் நேருவின் வாரிசுகளின் குரல் கேட்டால் கோட்சேவின் வாரிசுகளுக்கு கசக்கத்தான் செய்யும்' என்றார் முதல்வர். இன்றைய நிலை அதுதான்.

இரா. அருண்குமார், வாணரப்பேட்டை -புதுச்சேரி

"தமிழ்நாடு அரசு பொங்கலுக்கு 1000 ரூபாய் கொடுப்பது அவமானம்'என்று சீமான் கூறியுள்ளாரே?

"நாம் தமிழர்' கட்சியினர் மானமுள்ளவர்கள். அவர்களில் யாரும் 1000 ரூபாய் வாங்க மாட்டார்கள்.

nkn311222
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe