மாவலி பதில்கள்

ss

செந்தில்குமார் எம்., சென்னை-78

"தந்திர அரசியல் வாதிகளைக் கொண்டது காங்கிரஸா? பி.ஜே.பி.யா?''

எந்தக்கட்சியாக இருந் தாலும் அதில் உள்ள எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் தந்திரங்களை அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும். வெற்றிபெற்று பதவியும் அதிகாரமும் கிடைக்கும்வரை "தந்திரம்' என விமர்சிப்பார்கள். பதவியையும் அதிகாரத்தையும் அடைந்தபிறகு அதுவே "ராஜதந்திரம்' என போற்றப்படும்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

ஆப்கன் பல்கலைகழ கத்தில் பெண்கள் கல்வி பயில தலிபான் அமைப்பு தடை விதித்து இருப்பது பற்றி?

தலிபான்கள் மத அடிப்படைவாதிகள். அதாவது, மதத்தின் பெயரால் மக்களின் முன்னேற்றத்தைத் தடுத்து, பழமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துபவர் கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆ

செந்தில்குமார் எம்., சென்னை-78

"தந்திர அரசியல் வாதிகளைக் கொண்டது காங்கிரஸா? பி.ஜே.பி.யா?''

எந்தக்கட்சியாக இருந் தாலும் அதில் உள்ள எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் தந்திரங்களை அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும். வெற்றிபெற்று பதவியும் அதிகாரமும் கிடைக்கும்வரை "தந்திரம்' என விமர்சிப்பார்கள். பதவியையும் அதிகாரத்தையும் அடைந்தபிறகு அதுவே "ராஜதந்திரம்' என போற்றப்படும்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

ஆப்கன் பல்கலைகழ கத்தில் பெண்கள் கல்வி பயில தலிபான் அமைப்பு தடை விதித்து இருப்பது பற்றி?

தலிபான்கள் மத அடிப்படைவாதிகள். அதாவது, மதத்தின் பெயரால் மக்களின் முன்னேற்றத்தைத் தடுத்து, பழமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துபவர் கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததும் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகம். அவர்களின் நடமாட்டத்திற்கே தடை விதிக்கும் அளவுக்கான கட்டுப்பாடு கள். அதன் தொடர்ச்சிதான், ஆப்கானிஸ்தான் பல்கலைக் கழகங்களில் இனி பெண்களுக்கு இடமில்லை என்கிற தலிபான் ஆட்சியாளர்களின் அறிவிப்பு. இது உலகின் பல நாடுகளிலும் உள்ள பெண்களை அதிர வைத்திருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இது பற்றிய தன் கண்டனத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அவரது முன்னோர்கள் வாழ்ந்த இந்தியாவிலும் பெண்களுக்கான கல்வி, சுதந்திரம் ஆகியவை அத்தனை எளிதாகக் கிடைத்துவிடாதபடி செய் திருந்தவர்கள் இங்குள்ள மத அடிப்படைவாதிகள்தான். இந்தியாவைப் பொறுத்தவரை மதத்தின் பெயரால் மட்டுமின்றி, சாதிரீதியான கட்டுப்பாடுகளையும் விதித்து பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருந் தன. 19ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்ட சிந்தனை மாற்றங்கள், அதற்கு காரணமான சீர்திருத்தவாதிகள், 20ஆம் நூற்றாண்டில் உருவான சமுதாய சீர்திருத்த இயக்கங் கள், அவை ஏற்படுத்திய தாக்கங்களினால் சட்டரீதியாகப் பெண் களுக்கு கல்வி, வேலை, சுதந்திரம் ஆகியவை கிடைத் தன. ஆனால், முன் னோர்கள் சொன்னார் கள் என்று இப்போதும் சிலர் பெண்களை நோக்கியே கேள்வி எழுப்புவார்கள். வாசல் தெளித்து கோலம் போட்ட பெண் களுக்கு நோய் வரவில்லை என்றும், ஆட்டுக்கல்-அம்மிக்கல்லில் அரைத்துப் பழகிய அந்தக் காலத்துப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நடந்தது என்றும், கிணற்றில் நீர் இறைத்து உடல்வலிவோடு இருந்தார்கள் என்றும் சொல்லி, இன்றைய பெண்களைக் கேலி செய்வதுகூட, பெண்களின் கல்வி, வேலை உள் ளிட்ட உரிமைகளை ஏற்றுக்கொள்ள முடியாததை வெளிப்படுத்தும் மறைமுகத் தாக்குதல்கள்தான். ஆண்களுக்கான பழைய அளவுகோல்களை அந்தளவு யாரும் வலியுறுத்துவதில்லை. ஏனெனில், மதங்கள் ஆண்களால் கட்டமைக்கப் பட்டவை. அதனால், மதத்தின் பெயரால் முன்வைக்கப்படும் எதுவும் ஆண்களின் பார்வையிலிருந்து வெளிப்படுபவையாகவே இருக்கும்.

dd

தே.மாதவராஜ், கோயமுத்தூர்

வல்லபபாய் பட்டேலுக்கு உயர்ந்த சிலை எழுப்பிய மோடி, ஏன் மகாத்மா காந்திக்கு சிலை எழுப்பவில்லை?

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் அடையாளம் உண்டு. தமிழ்நாடு என்றால் திருவள்ளுவர்தான் உலக அடையாளம். அதை உறுதிப்படுத்தி, 133 அடி உயரத்தில் சிலை வைத்தது திராவிடம். மராட்டிய மாநிலத்தின் அடையாள மாக சத்ரபதி சிவாஜியை முன்னிறுத்தி அவருக்கு சிலை உள்ளிட்ட நினைவுச் சின்னங்களை அமைத்தது சிவசேனா. வங்காளம் பல சாதனையாளர்களைத் தந்திருக்கிறது. அங்கே விவேகானந்தரை அடையாளமாக முன்வைப்பவர்களும் இருக்கிறார்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை முன்வைப்பவர்களும் இருக்கிறார்கள். குஜராத் என்றால் சட்டென நினைவுக்கு வருபவர் காந்திதான். அவர் இந்தியாவின் தந்தையாக உலகம் முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார். இந்தியாவை காந்தி தேசம் என்கிறார்கள் வெளிநாட்டவர்கள். இதனை, காந்தியின் கொள்கைக்கு மாறான சாவர்க்கர், கோட்சே வழிமுறையைக் கையாண்ட இயக்கத் தின் வழிவந்தவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அதனால்தான், குஜராத்தின் அடையாளமாக காந்தி இருக்கக்கூடாது என்று வல்லபபாய் பட்டேலுக்கு சிலை எழுப்பி இருக் கிறார்கள். காந்தியை தலைவராக ஏற்றுக்கொண்ட பட்டேல், நேருவுடன் கருத்து மோதல்கள் கொண்டவர் என்கிற அரசியலும் இதில் அடக்கம்.

nkn281222
இதையும் படியுங்கள்
Subscribe