Advertisment

மாவலி பதில்கள்

ss

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

ராகுல் யாத்திரையின்போது முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டது பற்றி?

Advertisment

dd

இன்றைய ஆட்சியாளர்களால், பொருளாதார நிலையில் இந்தியாவை எழுந்து நடக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்துவிட்டார் போலும். அதனால் ராகுல் காந்தியுடன் நடக்கலாம் எனத் தீர்மானித்திருப்பார்.

பா.ஜெயப்பிரகாஷ் -அரண்மனைப்புதூர் -தேனி

குஜராத் தேர்தலில் பா.ஜ.க. வாங்கிய வாக்குகள் 1,67,07,967- ஆனால் எதிராக விழுந்த வாக்குகள் 3,23,81,808- இந்த தேர்தல் கணக்கு பற்றி?

Advertisment

இப்படித்தான் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் 1967க்கு முன்பு காங்கிரஸ் கட்சி இருந்தது. ஆனாலும், பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது. தி.மு.க.வை உருவாக்கிய அண்ணாதான், ஆளுங்கட்சி வாங்குகிற வாக்குகளை விட, எதிர்க்கட்சிகளின் ஒட்டு மொத

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

ராகுல் யாத்திரையின்போது முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டது பற்றி?

Advertisment

dd

இன்றைய ஆட்சியாளர்களால், பொருளாதார நிலையில் இந்தியாவை எழுந்து நடக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்துவிட்டார் போலும். அதனால் ராகுல் காந்தியுடன் நடக்கலாம் எனத் தீர்மானித்திருப்பார்.

பா.ஜெயப்பிரகாஷ் -அரண்மனைப்புதூர் -தேனி

குஜராத் தேர்தலில் பா.ஜ.க. வாங்கிய வாக்குகள் 1,67,07,967- ஆனால் எதிராக விழுந்த வாக்குகள் 3,23,81,808- இந்த தேர்தல் கணக்கு பற்றி?

Advertisment

இப்படித்தான் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் 1967க்கு முன்பு காங்கிரஸ் கட்சி இருந்தது. ஆனாலும், பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது. தி.மு.க.வை உருவாக்கிய அண்ணாதான், ஆளுங்கட்சி வாங்குகிற வாக்குகளை விட, எதிர்க்கட்சிகளின் ஒட்டு மொத்த வாக்குகள் அதிக மாக இருப்பதை உணர்ந்து, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதாவது, ஒவ்வொரு கட்சியும் பெறு கிற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அவற்றுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பிரதி நிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் அண்ணா முன் வைத்த வாதம். தி.மு.க.வின் தேர் தல் அறிக் கையிலும் அது இடம்பெற்றது. நாடாளுமன்றத்திலும் இது பற்றிப் பேசினார். ஆனால், இந்திய தேர்தல் முறை என்பது, எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் அதிக வாக்குகள் பெறுகிறதோ அந்தக் கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றவர் என்கிற வகையில் அமைந்துள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற கட்சிகளின் வேட்பாளர்களின் ஒட்டு மொத்த வாக்குகள் அவரைவிட கூடுதலாக இருந்தாலும் அது எந்த விதத்திலும் அவரது வெற்றியை பாதிக்காது. இந்த முறையை இன்று வரை மாற்றவில்லை. அதனால்தான், அண்ணா 1967லேயே இதனை எதிர்கொள்வதற்கான வியூகம் வகுத்து, அன்றைய ஆளுங் கட்சியான காங்கிரஸ் வாங்குகிற வாக்குகளை விட, எதிர்க்கட்சிகளின் வாக்குகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கை கூடுதலாக இருப்பதை கணக் கிட்டு, வெற்றிகரமான தேர்தல் கூட்டணியை அமைத்தார். காங்கிரஸை எதிர்த்த தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுதந்திரா கட்சி, தமிழரசு கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகக் களம் கண்டன. தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தின. அண்ணா கற்றுத்தந்த வழியில் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் என பலரும், கூட்டணி அமைத்து வெற்றி கண்டுள்ளனர். குஜ ராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. செல்வாக்குள்ள மாநிலங்களில் அண்ணாவைப் போல ஒரு தலைவர் இல்லை. அதனால், இந்திய அளவில் பா.ஜ.க.வின் வெற்றிக்கொடி பறந்து கொண்டிருக்கிறது.

கார்த்திகா வினோத், துவரிமான் -மதுரை

dd

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகத்தில் அவரது தந்தையார் போல் அடக்கம் அதிகமாக தெரிகிறதே? தாத்தா கலைஞர் போல் பிரச்னைகளை சமாளிப்பாரா?

தாத்தாவின் வேகமும், தந்தை யின் பொறுமையும் கலந்தவராகத்தான் அவரது அரசியல் செயல்பாடுகள் வெளிப்படுகின்றன. அமைச்சரவை செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை இனிமேல்தான் கவனிக்க வேண்டும்.

சுந்து ஞானதேசிகன், சுவர்க்கபுரி -இமாச்சலப் பிரதேஷ்

மழை கொட்டு கொட்டென்று கொட்டியும் சென்னை மாநகரம் வெள்ளத்தில் சிக்கவில்லையே என்ன காரணம்?

வடகிழக்கு பருவமழை என்பது நவம் பர்- டிசம்பர் மாதங்களில் இயல்பானது. அதற்கேற்ற வகையில் பேரிடர் மேலாண்மைப் பணிகளைத் திட்டமிட்டால் பெரியளவில் பாதிப்பின்றி சென்னை யைக் காப்பாற்ற முடியும் என்பதை தமிழ்நாடு அரசு+ சென்னை மாநகராட்சி கூட்டணி நிரூபித்துள்ளது. சென்னை மக்களைப் பொறுத்தவரை தங்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்படா மல் இருந்ததையும், மழை விட்டபிறகு தண்ணீர் வேகமாக வடிந்ததையும், காற்றில் விழுந்த மரங்களை இரவு முதலே மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதையும் அனுபவப்பூர்வ மாக உணர்ந்தனர். எனினும், முந்தைய புயல் சின்னங்கள் போல மாண்டோஸ் புயல் வேக மாக இல்லை என்றும், பெரிய மழையாகப் பெய்யவில்லை என்றும், கடற்கரையில் மரப்பாதை சீரழிந்துவிட்டது என்றும், மேயர் பிரியா தொங்கிக் கொண்டு சென்றார் என்றும் எதிர்க்கட்சிகளின் இடி-மின்னல்- மழைக்கு மட்டும் குறைவேயில்லை.

ஐஸ்வர்யா, வேளச்சேரி

ஜெ.தீபா அ.தி.மு.க.வின் ரன்னிங் ரேஸ் போட்டியில் உள்ளாரா?

எடப்பாடி பழனிசாமி கையில்தான் அ.தி. மு.க நிர்வாகம் உள்ளது. ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன், சசிகலா உள்ளிட்டோர் அதைத் தட்டிப் பறிப்பதற்கான ரேஸில் உள்ளனர். இந்த ரேஸில் ரொம்ப ஸ்லோவாக ஓடி வருபவர் ஜெ.தீபா. அதுவும், நின்ற இடத்தி லேயே ஓடிக்கொண்டிருக்கிறார்.

nkn211222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe