மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண், குடும்பத்தினர் அல்லது காதலரால் கொல்லப்படுகிறார் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் சொல்லியிருப்பது பற்றி?
பெண்கள் தங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குடும்பத்தினர் (இதில் சக பெண்களும் அடக்கம்), காதலன், அலுவலக மேலதிகாரிகள், அரசியல் களம் என எல்லாத் தரப் பிலும் நினைக்கிறார்கள். எங்கெல்லாம் பெண் தன் சுதந்திரத்தை வெளிப் படுத்துகிறாரோ அங்கே ஏதேனும் ஒரு வகையில் வன்முறையை எதிர் கொள்கிறார்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
சில நடிகை கள் மட்டும் இன் னொரு ரவுண்டு வரும் அதிர்ஷ்டத்துடன் இருப் பது எப்படி?
அதிர்ஷ்டம் மட்டுமல்ல, திறமையும் அதற்கு முக்கிய காரணம். குஷ்பு, நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், ஷோபனா, பானுப்ரியா என தமிழ் சினிமாவிலே யே இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கியவர்கள் நிறைய பேர் உண்டு.
க.முத்து, சைதாப்பேட்டை.
ரயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்தாலும், அதற்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை ரத்துசெய்ய முடியாதென மத்திய அரசு கூறுவது சரியான அணுகுமுறையா?
"அதெல்லாம் தெரியாது... வார்டன்னா அடிப்போம்' என்கிற சினிமா டயலாக் போல, "ஜி.எஸ்.டி.ன்னு வசூல் பண்ணிட்டா திருப்பித் தரமாட்டோம்' என்பதை பயணிகள், வணிகர்கள், மாநில அரசுகள் என அனைவரிடமும் பாரபட்சம் இல்லாமல் செயல்படுத்துகிறது மத்திய அரசு.
த.சத்தியநாராயணன், அயன்புரம்.
சிறந்த கேள்விகளுக்கு புத்தாண்டு முதல் புத்தகம் பரிசளிக்கலாமே?
வாசகர்களால் கேட்கப்படும் கேள்விகள் எல்லாமே சிறந்த கேள்விகளாகத்தானே இருக் கின்றன. சொல்லப்படும் பதில்களில் சிறப்பானதாக ஏதேனும் இருந்தால் வாசகர்கள் பரிசு தரலாமே!
திலகர் ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் பா.ஜ.க. தயார் என்கிறாரே அண்ணாமலை?
தேர்தல் வரும்வரை இதுபோன்ற டயலாக்குகள் அரசியலில் சாதாரணமப்பா.
எஸ். கதிரேசன், பேர்ணாம்பட்டு.
ஆர்.எஸ்.எஸ். காபி, பா.ஜ.க. வெறும் நுரை என பிரசாந்த் கிஷோர் சொல்வது சரிதானா?
ஊகும்.. ஆர்.எஸ்.எஸ் என்பது டிகாஷன். பா.ஜ.க. என்பது பால். காபி ஸ்ட்ராங்கா இருக் கணுமா, லைட்டா இருக்கணுமா என்பதை டிகாஷனே முடிவு செய்யும். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் லைட்டாக இருந்தது. மோடி ஆட்சிக்காலத்தில் ஸ்ட்ராங்காக இருக்கிறது.
பிரார்த்தனா, கும்பகோணம்.
கலாச்சார காவல் பிரிவை நீக்கிய ஈரான், போராட்டத்தில் பங்கேற்ற இருவரைத் தூக்கி லிட்டுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மரண தண்டனை என்பதும், அதை பொதுவெளியில் நிறைவேற்றுவதும் மக்களை அச்சுறுத்தும் அரச பயங்கரவாதம். போராட்டக் காரர்களுக்கு மரண தண்டனை என்பது மானுடத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்.
தே.அண்ணாதுரை, கம்பம்
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி டி உஷா, விளையாட்டு வீரர்களை நேர்மையாக தேர்வு செய்வாரா?
கிரிக்கெட்டைப் போல ஒலிம்பிக் பந்தயத்திற்கான தேர்வுகளில் ஜெய்ஷாக்கள் இல்லாமல் இருந்தால், இந்தியாவின் தங்க மங்கையால் இன்னும் பல தங்க மனிதர்களையும், மங்கைகளையும் உருவாக்க முடியும்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
ஆந்திராவில் ஜெகன் தங்கை ஷர்மிளா, தெலுங்கானாவில் சந்திரசேகர் மகள் கவிதா மூலம் இருவருக்கும் பிரச்சினைதானே?
ஜெகனும் அவர் தங்கையும் பா.ஜ.க.வின் விருப்பத்திற்குரியவர்கள். ஆந்திரா அரசியலைத் தாண்டி, தெலுங்கானாவில் ஷர்மிளா நடத்தும் போராட்டங்கள் பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக கை கொடுக்கும். தெலுங்கானா சந்திரசேகர் மகள் கவிதா டெல்லிவரை சென்று, தொழில் உறவுகளை ஏற்படுத்தியதால் பா.ஜ.க. அதை விவகாரமாக்கி, தெலுங்கானா அரசியலை தனக்கு சாதகமாக்கும் முயற்சியை வேகப்படுத்துகிறது.
மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"பா.ஜ.க. ஒரு பெரிய யானை. அனைவரும் சேர்ந்து எதிர்த்து சண்டையிட்டால் மட்டுமே அதனை வீழ்த்த முடியும்'' என்று பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் கூறியுள்ளாரே?
"யாராலும் வீழ்த்தமுடியாதவர் ஜெயலலிதா' என அவரது கட்சியினர்போல மக்களும் நினைத் திருந்த காலத்தில், உள்ளூர் தி.மு.க. வேட்பாளர் சுகவனம் என்பவர் ஜெ.வைத் தோற்கடித்தார். அப்போது கலைஞர் சொன்னது, “"இவர் யானை காதில் புகுந்த எறும்பு!'” எறும்புகள் வரிசை மாறா மல் இருந்தால் யானைகள் வீழ்த்தப்படும்.
வாசுதேவன், பெங்களூரு
பற்ற வைப்பது, கொளுத்திப் போடுவது -வித்தியாசம்!
இருப்பதை பற்றவைக்க முடியும் திருச்சி சூரியாவைப் போல! இல்லாததையும் கொளுத்திப் போடமுடியும். அண்ணாமலையைப் போல!