மாவலி பதில்கள்

modi

ஜியார் சந்திரன், லக்காபுரம், ஈரோடு-2

மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டிய மத்திய-மாநில அரசுகள் மக்களுக்காகப் போராடும் தலைவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளுவது இழிவான செயலாகத் தெரியவில்லையா?

மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டியது அரசுகளின் கடமை. குறைகளை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சித் தலைவர்களின் கடமை. அரசாங்கம் தன் கடமையைச் செய்யாதபோது, எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டும் செய்தால் கோபம் வரத்தானே செய்யும்!

modi

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுக்குப் பதில், விஞ்ஞான வளர்ச்சியில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தியே மிரட்டி காரியம் சாதிக்கிறார்களே?

அடுத்தவரை மிரட்டப் பயன்படுத்தும் அதே ஆயுதம் நமக்கும் ஆபத்தாக முடியும். கத்தி, அரிவாள் போன்றவற்றால் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு இறந்தவர்களும் உண்டு. அதுபோல அடுத்தவரை மிரட்டுவதற்கான வாட்ஸ்ஆப், டப்மேஷ் போன்றவற்றிற்கு தானும் அடிமையாகி, தன்னைத்தானே சிக்க வைத்துக்கொள்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

ஜியார் சந்திரன், லக்காபுரம், ஈரோடு-2

மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டிய மத்திய-மாநில அரசுகள் மக்களுக்காகப் போராடும் தலைவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளுவது இழிவான செயலாகத் தெரியவில்லையா?

மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டியது அரசுகளின் கடமை. குறைகளை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சித் தலைவர்களின் கடமை. அரசாங்கம் தன் கடமையைச் செய்யாதபோது, எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டும் செய்தால் கோபம் வரத்தானே செய்யும்!

modi

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுக்குப் பதில், விஞ்ஞான வளர்ச்சியில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தியே மிரட்டி காரியம் சாதிக்கிறார்களே?

அடுத்தவரை மிரட்டப் பயன்படுத்தும் அதே ஆயுதம் நமக்கும் ஆபத்தாக முடியும். கத்தி, அரிவாள் போன்றவற்றால் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு இறந்தவர்களும் உண்டு. அதுபோல அடுத்தவரை மிரட்டுவதற்கான வாட்ஸ்ஆப், டப்மேஷ் போன்றவற்றிற்கு தானும் அடிமையாகி, தன்னைத்தானே சிக்க வைத்துக்கொள்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

எஸ்.பூவேந்தஅரசு, பொன்நகர்

அரசியல் சாசனப்படி "அமைச்சகம்' என்று இருக்கும்போது, "வாரியங்கள்' தனித்தனியாக இருந்தால்தான் காரியங்களை சாதிக்க முடியுமா?

வாகனங்களை கம்பெனிகள் தயாரித்தாலும், டீலர்களிடம்தானே வாங்க வேண்டியிருக்கிறது. அமைச்சகம் வகுக்கும் திட்டங்களை பகுத்துப் பிரித்து செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவைதான் வாரியங்கள். அதன்மூலம் அடித்தட்டு மக்கள் வரை பயன்பெற்றதை எஸ்.நாராயண், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி உழ்ஹஸ்ண்க்ண்ஹய் வங்ஹழ்ள் என்ற பெயரில் புத்தகமாகவே எழுதியிருக்கிறார். பின்னர், கட்சிக்காரர்களை சமாதானம் செய்ய வாரியப் பதவி என்றான பிறகு, சாமி வரம் கொடுத்தாலும் பூசாரியும் குருக்களும் பிடுங்கித் தின்பதுபோல ஆகிவிட்டன வாரியங்களின் நிலைமை.

லட்சுமிதாரா, வேலூர் (நாமக்கல்)

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியைவிட தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை எல்லோரும் விரும்புகிறார்களே?

தமிழக மக்களிடம் மோடி அரசு மீது கடுமையான அதிருப்தி இருக்கும்போது தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி எடுபடுமா என்றொரு கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. உங்கள் கேள்விக்கு அந்தக் கேள்வியே பதிலாகிறது.

சீ.எழில்பாபு, வானமாதேவி

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குச்சாவடி முகாமின் பள்ளி வகுப்பறை திறக்கப்படாததால், தரையில் அமர்ந்து மனுக்களைப் பெற்ற அலுவலர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்போதே அலுவலர்களான நமக்கு இதுதான் நிலைமை என்றால், வாக்களித்த பிறகு வாக்காளர்களின் நிலைமை எப்படி இருக்கும் என யோசித்திருப்பார்கள்.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"பியூனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது' என்கிறாரே அமைச்சர் வேலுமணி?

கொள்ளைச் சொத்துக்கு கூட்டுசேரும் பினாமிகளைவிட, பிடித்த இடத்தில் கிடைத்த வேலையை செய்யும் பியூன்கள் மேலானவர்கள். அது மட்டுமல்ல, அமைச்சர்கள்-எம்.எல்.ஏக்கள் எல்லோரும் மக்களின் பியூன்கள்தான். அவர்களுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைவரும் இல்லை, கொள்கையும் இல்லை' என்கிறாரே பிரதமர் மோடி?

பா.ஜ.க.வின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்பது ஒன்றுதான் எங்கள் கொள்கை என்கின்றன எதிர்க்கட்சிகள். மக்கள் விரோத செயல்பாடுகளை பா.ஜ.க. அரசு பெருக்கிக் கொண்டே போவதன்மூலம் தலைமை இல்லாத எதிர்க்கட்சிகளுக்கும் தன் தலைமை மூலம் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார் 68-வது பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி.

___________________

ஆன்மிக அரசியல்

வி.கார்மேகம், தேவகோட்டை

"தமிழக அரசின் இடையூறுகளை எதிர்த்து விநாயகர் சதுர்த்திக்கு வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம்' என அறிவித்தாரே இந்து முன்னணி நிர்வாகி?

விநாயகர் சதுர்த்திக்கு என்ன இடையூறு வந்தது? தமிழக அரசு வழக்கம்போல விடுமுறை அளித்து, கொண்டாடத்தானே செய்தது. அதுவும் இந்த ஆண்டு வியாழக்கிழமையில் விநாயகர் சதுர்த்தி வந்ததால், அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஒருநாள் கூடுதல் விடுப்பு எடுத்து, சனி-ஞாயிறையும் சேர்த்து 4 நாட்கள் ஊருக்குக் கிளம்பும் வாய்ப்பையும் விநாயகர் பெயரால் அரசாங்கம் கொடுத்துவிட்டது. இடையூறு செய்வது அரசாங்கம் அல்ல, இந்து முன்னணி போன்ற அமைப்பினர்தான், விநாயகர் பெயரால் ஊர்வலம் நடத்தி இடையூறு செய்கிறார்கள்.

அரசமரத்தடிகளில் இருந்த புத்தர் சிலைகள்தான் தலை வெட்டப்பட்டு, புராணக் கதை சுமத்தப்பட்டு யானை முகத்துடன் கூடிய விநாயகர் ஆக்கப்பட்டார் என்கிறார்கள் பவுத்த அறிஞர்கள். பல்லவ மன்னன் நரசிம்மன் வாதாபி மீது படையெடுத்து வென்றபோது, அவரது படைத்தலைவர் பரஞ்ஜோதி எடுத்து வந்த விநாயகர் சிலையால்தான் தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு தொடங்கியது என்கிறார்கள் தமிழறிஞர்கள். வழிபடத் தொடங்கிய பிறகுதான் எல்லா கோயில்களிலும் முழுமுதற் கடவுளானார் விநாயகர். தனிக்கோயில்களும் நிறைய உண்டு. கோயில்களில் அருள் வழங்கும் பிள்ளையார்களால் ஒருபோதும் பிரச்சினையில்லை. அதனை பிரம்மாண்ட வடிவில் மத அரசியல் வண்ணம் பூசி ஊர்வலம்விடும் வழக்கம் தொடங்கிய பிறகுதான் மதக் கலவரங்கள் அதிகமாயின. சென்னையில் தொடங்கி செங்கோட்டை வரை பதட்டம்தான். கலவரம் வராமல் அரசாங்கமும் காவல்துறையும் செயல்படுவதைத்தான் இடையூறு என்கின்றன இந்துத்வா அமைப்புகள். அவற்றின் அடாவடிக் குரல்தான் எச்.ராஜா.

nkn210918
இதையும் படியுங்கள்
Subscribe