பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"செய்தியாளர்கள் எதிர்க்கட்சிகளிடம் கேள்விகள் கேட்பது கோழைத்தனம் ஆட்சி யாளர்களிடம் (மோடி) கேட்க மறுப்பது அவர்களுடைய கூட்டாளி என்பதால்தான் "என்று பிரசாந்த் பூஷன் கூறியுள்ளது பற்றி?
எல்லாத் தரப்பிடமும் கேள்வி கேட்க செய்தியாளர் களுக்கு உரிமை உண்டு. மோடி யிடம் கேட்கவும் அவர்கள் ரெடி தான். அவர்தான் மீடியாக்கள் என்றாலே 8 ஆண்டுகளாகத் தலைமறைவாகிவிடுகிறாரே!
வாசுதேவன், பெங்களூரு
பின்னணிக்குரல், பின் பாட்டு வசதிகள் இல்லாமல் இருந்திருந்தால் சினிமா துறை எப்படியிருக்கும்?
திரைப்பட யுகம் தொடங்கியபோது பின்னணிக் குரல், பின்பாட்டு மட்டுமல்ல, பேச்சு-பாட்டு எதுவுமே இல் லாமல் மவுனப் படங்களாகத் தான் வெளிவந்தன. கதையை விளக்குவதற்கு அரங்குகளில் தனி ஆள் இருப்பார்கள். பின்னர், பேசும் படங்கள் வந்த போது மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். என்னது, படம் பேசுதா என்று மிரண்டு போனவர்கள் உண்டு. சொந்தக் குரலில் பாடினால் மட்டுமே நடிக்க முடியும் என்ற காலத்
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"செய்தியாளர்கள் எதிர்க்கட்சிகளிடம் கேள்விகள் கேட்பது கோழைத்தனம் ஆட்சி யாளர்களிடம் (மோடி) கேட்க மறுப்பது அவர்களுடைய கூட்டாளி என்பதால்தான் "என்று பிரசாந்த் பூஷன் கூறியுள்ளது பற்றி?
எல்லாத் தரப்பிடமும் கேள்வி கேட்க செய்தியாளர் களுக்கு உரிமை உண்டு. மோடி யிடம் கேட்கவும் அவர்கள் ரெடி தான். அவர்தான் மீடியாக்கள் என்றாலே 8 ஆண்டுகளாகத் தலைமறைவாகிவிடுகிறாரே!
வாசுதேவன், பெங்களூரு
பின்னணிக்குரல், பின் பாட்டு வசதிகள் இல்லாமல் இருந்திருந்தால் சினிமா துறை எப்படியிருக்கும்?
திரைப்பட யுகம் தொடங்கியபோது பின்னணிக் குரல், பின்பாட்டு மட்டுமல்ல, பேச்சு-பாட்டு எதுவுமே இல் லாமல் மவுனப் படங்களாகத் தான் வெளிவந்தன. கதையை விளக்குவதற்கு அரங்குகளில் தனி ஆள் இருப்பார்கள். பின்னர், பேசும் படங்கள் வந்த போது மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். என்னது, படம் பேசுதா என்று மிரண்டு போனவர்கள் உண்டு. சொந்தக் குரலில் பாடினால் மட்டுமே நடிக்க முடியும் என்ற காலத்தில் எம்.கே.தியாகராஜபாகவத ரும், பி.யூ.சின்னப்பாவும் ஹீரோக்களாக இருந்தார்கள். பின்பாட்டு பாடும் வசதி வந்தபோது எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஹீரோவானார்கள். பிறகு, ஒரு மொழியில் எடுக்கப்பட்ட படம் இன்னொரு மொழியில் டப்பிங் செய்யப்பட்டபோது, ஒரிஜினல் படத்தின் கதாபாத்திரங்களுக்கு வேறு நபர் குரல் கொடுக்க வேண்டியிருந்தது. பிறகு, ஹீரோ- ஹீரோயின்களுக்கே சொந்தக் குரலைவிட பின்னணிக் குரல் வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்றபோது மோகன் உள்ளிட்ட நடிகர்களும் ஏராளமான நடிகைகளும் மக்களைக் கவரும் நட்சத்திரங்களாயினர். இப் போது திரையுலகம் எவ்வள வோ முன்னேறிச் சென்றுவிட் டது. இல்லாத காலத்தைப் பற்றி, இருக்கும் காலத்தில் யோசிப்பதற்கு யாரும் தயாராக இல்லை.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
மோடியை இராவணனுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியது சர்ச்சையாகி உள்ளதே?
எல்லாவற்றுக்கும் மோடியையே முன்னிறுத்துவது குறித்துதான் மல்லிகார்ஜூன கார்கே அப்படிப் பிரச்சாரம் செய்திருக்கிறார். மோடிக்கு என்ன இராவணன் போல பத்து தலை (முகம்) இருக்கிறதா, திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருப்பதற்கு? என்று கேட்டிருக்கிறார் கார்கே. மீடியாக்களும், பா.ஜ.கவினரும் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டுவிட்டதாக சர்ச்சையைக் கிளப்புகிறார்கள். அதாவது, இராவணன் வில்லன். அவனுடன் ஒப்பிடலாமா என்பது தான் சர்ச்சைக்கு காரணம். வடமாநிலங்களில் உள்ள கிராமப்பகுதிகளிலும், கோண்டுவானா வனப்பகுதியிலும் இப்போதும் ராவணனை வணங்கும் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் திரா விட இன வழி வந்தவர்கள். அவர்களைப் பொறுத்தவரை இராவணன் என்பவன் திராவிட மன்னன். மக்களுக்கு நன்மை செய்தவன். அவனை ஆரியர்கள் சூழ்ச்சியால் கொன்று விட்டார்கள் என் பதுதான். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு, “இராமாயணம் என்பது ஆரிய-திராவிடப் போர்” என்பதை விளக்கியிருக்கிறார். இன்றைய பிரதமர் மோடியின் ஆதரவுக் கூட்டத்திற்கு அதெல்லாம் தெரியாது. நேரு மீது பழி போட மட்டுமே தெரியும்.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77
ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் பேச்சு பற்றி?
எம்.ஜி.ஆர். இருந்த காலம்வரை ஜானகி அம்மையார் அரசியலில் நேரடியாக ஈடுபட வில்லை. எம்.ஜி.ஆரின் உடல்நலனைக் காப்பதில் மிகுந்த அக்கறையுடன் இருந்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. கோஷ்டிப் பூசலால் ஜானகி அம்மையார் முதல்வரானார். தமிழ்நாட் டின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை எதேச்சையாக அவருக்கு அமைந்துவிட்டது. அவரது நூற்றாண்டு என்பது அவ ரது குடும்பத்தினருக்கு நினைவு போற்றும் கொண் டாட்டம். பொதுமக்கள் விழா அல்ல. எம்.ஜி.ஆர். தான் சினிமாவிலும் அர சியலிலும் வெற்றிகரமாக இருந்தவர். காங்கிரஸ்காரராக இருந்த அவர், கலைவாணர் மூலம் பெரியாரின் குடிஅரசு பத்திரிகையைப் படித் திருக்கிறார். கலைஞர் மூலம் திராவிட இயக்கப் புத்த கங்கள் பலவற்றைப் படித்திருக்கிறார். அதன்பின், திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாவின் மதிப்புக்குரியவராக ஆனார். கலைஞருக்கு நெருக்க மான நண்பராக இருந்தார். 20 ஆண்டுகாலம் தி.மு.க. வில் இருந்தார். தேர்தலிலும் வெற்றி பெற்றார். 1972ல் தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டதால் அ.தி.மு.க என்ற தனிக்கட்சி தொடங்கி 77ல் ஆட்சி யைப் பிடித்து, 87ல் முதல்வராகவே இறந்தார். கணக்குப்படி பார்த்தால், அ.தி.மு.க.வை விட, தி.மு.க.வில்தான் எம்.ஜி.ஆர். அதிக காலம் இருந் தார். அவருக்கு கலைஞர் குடும்பத்திலும் ரசிகர்கள் உண்டு. கலைஞர் குடும்பத்தினர் மீது ஜானகி அம்மையாருக்கு மதிப்பு உண்டு. ஜெயலலிதா இந்த இரு தரப்பையும் மதித்ததேயில்லை. இவற்றை உணர்த்துவதுபோல, அந்த விழாவில் மு.க.ஸ்டா லின் பேசியதுதான் அரசியல் டோர்னமென்ட்..
நித்திலா, தேவதானப்பட்டி
ஆச்சரியப்பட வைக்கும் அரசியல் தலைவர் யார்?
அவர் பிரதமராகவோ, முதல்வராகவோ பதவியில் இல்லை. கவுன்சிலர் கூட ஆகப் போவ தில்லை. தேர்தல் அரசியல் களத்தைப் புறக்கணித்த சமுதாய சீர்திருத்த இயக் கத்தின் தலைவர். 80 ஆண்டுகால பொதுவாழ்வு. 60 ஆண்டுகால பத்திரிகை ஆசிரியர். வயது 90. இப்போதும் சுறுசுறுப்பு. செயல்வேகம். அவர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.