Advertisment

மாவலி பதில்கள்

ss

மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பிரதமர் மோடியின் பணி நியமன ஆணை என்பது தேர்தல் நேர விளம்பர யுக்தி என்கிறாரே மல்லிகார்ஜுன் கார்கே?

Advertisment

ஆண்டுக்கு 2 கோடி என போன தேர்த லில் வாக்குறுதி அளித்துவிட்டு இந்த தேர்தல் நெருங்கும்போது, 75 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கு கிறேன் என்பது தேர்தல் நேர விளம்பர யுக்தி என்பது மல்லிகார்ஜூன கார்கே சொல்லித்தானா தெரியவேண்டும்?

mm

தே மாதவராஜ், கோயமுத்தூர் 45

சீமான், கமல், அன்புமணி, ஜி கே வாசன் திருமாவளவன், துரை வைகோ, டி.டி.வி. இவர் களில் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் யார்?

Advertisment

சீமான், கமல் இருவரும் தேர்தல் களத்தை நேரடியாக சந்தித்தவர்கள். வெற்றி இன் னும் கனியவில்லை. அன்புமணி அவரது அப்பா காலத்திலிருந்து அரசியலை கவனித்ததுடன், தேர்தலில் வெற்றி-தோல்வி இரண்டையும் சந்தித் தவர். ஜி.கே.வாசன் அவரது அப்பா மாதிரி. தேர்தல் அரசியல் களத்திற் கும் அவர

மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பிரதமர் மோடியின் பணி நியமன ஆணை என்பது தேர்தல் நேர விளம்பர யுக்தி என்கிறாரே மல்லிகார்ஜுன் கார்கே?

Advertisment

ஆண்டுக்கு 2 கோடி என போன தேர்த லில் வாக்குறுதி அளித்துவிட்டு இந்த தேர்தல் நெருங்கும்போது, 75 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கு கிறேன் என்பது தேர்தல் நேர விளம்பர யுக்தி என்பது மல்லிகார்ஜூன கார்கே சொல்லித்தானா தெரியவேண்டும்?

mm

தே மாதவராஜ், கோயமுத்தூர் 45

சீமான், கமல், அன்புமணி, ஜி கே வாசன் திருமாவளவன், துரை வைகோ, டி.டி.வி. இவர் களில் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் யார்?

Advertisment

சீமான், கமல் இருவரும் தேர்தல் களத்தை நேரடியாக சந்தித்தவர்கள். வெற்றி இன் னும் கனியவில்லை. அன்புமணி அவரது அப்பா காலத்திலிருந்து அரசியலை கவனித்ததுடன், தேர்தலில் வெற்றி-தோல்வி இரண்டையும் சந்தித் தவர். ஜி.கே.வாசன் அவரது அப்பா மாதிரி. தேர்தல் அரசியல் களத்திற் கும் அவருக்கும் ரொம்ப தூரம். திருமாவளவன் தேர்தல் களத்தில் சளைக்காமல் போராடி வெற்றியை நிலைநாட்டிய கட்சித் தலைவர் என்றாலும் அவர் சித்தாந்த தலைவராக முன்னிற்கிறார். அப்பா வழி யில் துரைவைகோ இப்போது தான் அடியடுத்து வைத்திருக் கிறார். இடைத் தேர்தல் களத்தில் பெற்ற வெற்றியால் இரண்டு பெரிய கட்சிகளை யும் அதிர வைத்த டி.டி.வி. தினகரன் அரசியல் மார்க்கெட் சரிந்து கிடக்கிறது. இவர்களில் முதல்வராக அவரது கட்சி யினரால் அதிகம் முன்னிறுத் தப்படுபவர்கள் சீமானும் அன்புமணியும். தொண்டர்கள் விருப்பம் நிறைவேற வேண்டு மானால் மக்களின் நம்பிக்கை யை வென்றாக வேண்டும்.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77

பா.ஜ.க.வின் வளர்ச்சி பற்றி துரை முருகன்... பயப்படுகிறார்.. அதே சமயம், தங்கள் கட்சியில் கூட்டுறவு துறையில் ஊழல் என்கிறார் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன். ஏன்? இவர்கள் இப்படி பேசுகிறார்கள்?

ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் என்றால் வாய் திறக்க முடியாதவர்கள் என்ற நிலை உருவாகிவிட்டது. அதிலேயே பழகிவிட்ட மக்க ளுக்கும் இன்றைய தி.மு.க அமைச்சர்கள் பேசுவது ஒவ்வொன்றும் அதிர்ச்சியாக வும் ஆச்சரியமாகவும் இருக் கிறது. கலைஞர் ஆட்சியில் மின்வாரியத் துறை அமைச்ச ராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. அப்போது மின்வெட்டு இருந்த நிலையில், முதல்வர் கலைஞரை மேடை யில் வைத்துக் கொண்டே, வரும் தேர்தலில் தி.மு.க தோற்றால் அதற்கு மின்வெட்டு காரணமாகிவிடுமோ என்று பயப்படுகிறேன் என்று பேசினார் ஆற்காடு வீராசாமி. பேராசிரியர் அன்பழகன் ஒவ்வொரு மாநாட்டிலும் தி.மு.க எதிர்கொள்ளக் கூடிய சாதக பாதகங்களை பேசுவார். ஊடகங்கள்-சமூக ஊடகங்கள் இந்தளவில் வளர்ச்சி இல்லாத காலத்தில் அவை பரபரப்பை ஏற்படுத்தவில்லை. பா.ஜ.க. பற்றி துரைமுருகன் இப்போது பேசினால் பயம் போல பார்வையாளர்களுக்குத் தெரி கிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும் கூட்டுற வுத் துறை நடைமுறைகள் மாறாதது பற்றி பழனிவேல் தியாகராஜன் பேசுவது கட்சிக்குள்ளேயும் வெளியே யும் அதிர வைக்கிறது.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

தேர்தல் கமிஷன் தேர்வு கமிட்டியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம் பெற வேண்டும் என உச்ச நீதிமன்ற கருத்து பற்றி?

தேர்தல் கமிஷன் அதிகாரம் எவ்வளவு வலிமையானது என்பதை இந்திய அரசியல்வாதிகளுக்குப் புரிய வைத்தவர் டி.என்.சேஷன். கள்ள ஓட்டுகளைத் தடுக்கும் வகையில் வாக்காளர் அடை யாள அட்டை, செல்லாத ஓட்டுகள் இல்லாத வகையில் வாக்குப் பதிவு இயந்திரம், தேர்தல் செலவுக் கணக்கு வரம்பு, பிரச்சார நேரக் கட்டுப்பாடு இவற்றின் முன்னோடி அவர். அதனால் தான் அவருக்குப் பிறகு எந்த வொரு தலைமைத் தேர்தல் ஆணையரும் முழுமையான காலம் பதவியில் இல்லாதபடி, மிகக் குறைந்த காலப் பதவியையே அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதிலும், மோடி ஆட்சியில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வெளிப்படையாகவே ஒரு தலைபட்சமாக இருந்தது. குஜராத் தேர்தலுக்கு தேதியைத் தீர்மானிக்க வேண்டுமென்றாலும் மோடி அரசின் கடைக்கண் பார்வை தேவைப்படும். இதையெல்லாம் கவனித்து தான், ஆமாம் சாமிகளை தேர்தல் ஆணையராக நியமிக்கும் போக்கைக் கண்டித்து, தேர்வுக் கமிட்டி யில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர் நீதிபதிகள்.

சங்கர சுப்பிரமணியன், பாளையங்கோட்டை

பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் உறுதி யாக இருக்கிறோம் என்கிறாரே உள்துறை அமைச்சர் அமித்ஷா?

பா.ஜ.க. ஆட்சி அமைந்ததே ஆர்.எஸ்.எஸ். ஸின் மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்து வதற்காகத்தான். 1.அயோத்தி யில் ராமர் கோயில், 2.காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து. 3.பொது சிவில் சட்டம். முதல் இரண்டையும் நிறை வேற்றி விட்டார்கள். மூன்றாவதுதான் அவர்களின் இலக்கு. மற்றபடி, நாட்டின் பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு பற்றி அவர்கள் பேசுவதெல்லாம் வெற்று அரசியல்.

nkn301122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe