மாவலி பதில்கள்!

dd

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

"அறநிலையத்துறை தேவையற்றது' என்று பொன்.மாணிக்கவேல் கூறியிருக்கிறாரே?

ரிடையர்டு ராணுவ அதிகாரிகள் பா.ஜ.க.வில் சேர்ந்து மந்திரிகளாகியிருக்கிறார்கள். ரிடையர்டு போலீஸ் அதிகாரியான பொன்.மாணிக்கவேல் என்ன எதிர்பார்த்து, பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். குர லில் பேசுகிறாரோ. இந்து சமய அறநிலையத்துறை தேவையற்றது என்றதுடன், "காணிக்கையை உண்டியலில் போடாதீர்கள். அர்ச்சகர்களின் தட்டில் போடுங்கள்' என்றும் சொல்லி இருக்கிறாரே. போலீஸ் உயரதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேல் இதே அளவுகோலை கடைப்பிடித்து, குறைந்த ஊதியம் வாங்கும் போலீஸ் கான்ஸ்டபிள்கள் பொதுமக்களிடம் 100, 200 வாங்கட்டும் என்றும் சொல்வாரா? விளம்பரம் தேடும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள் ஓதும் வேதம் சட்டத்திற்கும், மக்களுக்கும் புறம்பான தாகத்தான் இருக்கும்.

ff

மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"இந்தியாவில் மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு ஓங்கி வளர்ந்து நிற்பதற்கு அடித்தளம் அமைத்ததே நீதிக்கட்சி அரசுதான்'

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

"அறநிலையத்துறை தேவையற்றது' என்று பொன்.மாணிக்கவேல் கூறியிருக்கிறாரே?

ரிடையர்டு ராணுவ அதிகாரிகள் பா.ஜ.க.வில் சேர்ந்து மந்திரிகளாகியிருக்கிறார்கள். ரிடையர்டு போலீஸ் அதிகாரியான பொன்.மாணிக்கவேல் என்ன எதிர்பார்த்து, பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். குர லில் பேசுகிறாரோ. இந்து சமய அறநிலையத்துறை தேவையற்றது என்றதுடன், "காணிக்கையை உண்டியலில் போடாதீர்கள். அர்ச்சகர்களின் தட்டில் போடுங்கள்' என்றும் சொல்லி இருக்கிறாரே. போலீஸ் உயரதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேல் இதே அளவுகோலை கடைப்பிடித்து, குறைந்த ஊதியம் வாங்கும் போலீஸ் கான்ஸ்டபிள்கள் பொதுமக்களிடம் 100, 200 வாங்கட்டும் என்றும் சொல்வாரா? விளம்பரம் தேடும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள் ஓதும் வேதம் சட்டத்திற்கும், மக்களுக்கும் புறம்பான தாகத்தான் இருக்கும்.

ff

மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"இந்தியாவில் மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு ஓங்கி வளர்ந்து நிற்பதற்கு அடித்தளம் அமைத்ததே நீதிக்கட்சி அரசுதான்' என வைகோ கூறியுள்ளது குறித்து....

ffஇந்தியாவுக்கு முன்னோடியான பல திட்டங்களைத் தந்தது 1920ல் அமைந்த நீதிக்கட்சி ஆட்சி தான். அப்போது பிரிட்டிஷார் இந்தியாவை ஆட்சி செய்தார்கள். மாகாணங்களுக் குத் தேர்தல் நடைபெற்றது. எல்லாருக்கும் வாக்களிக்கும் உரிமை கிடையாது. பணக்காரர்கள் -பட்டதாரிகள் -செல்வாக்கு மிக்கவர்களுக்கு மட்டும்தான். பெரிய அதிகாரமும் கிடையாது. கவர்னர் கையில் செங்கோல். ஒரு நகராட்சி அளவுக்குத்தான் மாகாண அரசுக்கு அதிகாரம். அப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு பெண்களுக்கு வாக்குரிமை, சட்டமன்றத்தில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட மக்கள் பொதுஇடங்களில் புழங்குவதற்கு இருந்த தடைகள் நீக்கம், இழிவான சொற்களில் அவர்களைக் குறிப்பிடுவதைத் தடுத்தல், அனைத்து சமூகத்தினரும் கல்வி -வேலைவாய்ப்பு பெறுவதற்கு வகுப்புவாரி இட ஒதுக்கீடு, டாக்டருக்குப் படிக்க சமஸ்கிருதம் கட்டாயம் என்ற அநியாய விதிமுறை அகற்றம், கோவில் நிலங்களைக் கடவுளின் ஏஜெண்டுகள் போலக் கூறிக்கொண்டு அனுபவித்து வந்தவர்களை அகற்றிய இந்து அறநிலையச் சட்டம், கோயில் பெயரால் கடைப்பிடிக் கப்பட்ட தேவதாசி முறை ஒழிப்பு, அரசு வேலைகளுக் கான தேர்வாணையம் என அனைத்து நிலை களிலும் சமத்துவத் தையும் சமூக நீதியையும் முன் னெடுப்பதில் இந்தியாவுக்கே முன்னோடி நீதிக்கட்சி ஆட்சி. தமிழ்நாடு இன்று பல துறைகளிலும் வளர்ந்திருப்பதற்கு அடித்தளமிட்டவர்கள் நீதிக்கட்சித் தலைவர்கள்.

பி.மணி, குப்பம் -ஆந்திரா

தமிழக மீனவர்களுக்கு இலங்கையால் தொடர்ந்து ஏற்பட்டுவரும் இன்னல்களுக்கு மத்திய அரசால் ஏன் நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியவில்லை?

பக்கத்து நாடான பாகிஸ்தான் மீதுள்ள பகைப் பார்வை, அருகில் இருக்கும் இலங்கை மீது இந்தியாவுக்கு எப்போதும் இருந்ததில்லை, அதனால்தான்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்

விஷவாயு தாக்கி இறக்கும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு விஷ வாயு இருப்பதை கண்டறிய உரிய உபகரணங்கள் கொடுக்கலாமே?

மனித குலம் பல துறைகளிலும் மிகப் பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், துப்புரவுத் தொழிலில் மனித சக்தியே நேரடியாகப் பயன்படுத்தப்படுவதும், கழிவு நீர் குழிகள்-தொட்டிகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் இறங்கி, உயிர் விடுவதும் மிகப் பெரிய சாபக்கேடு. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இது தொடர்கிறது. வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழ்நாட்டிலும் இந்த நிலைமை மாறவில்லை. 1970களிலேயே மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்ஷாவை ஒழித்த தமிழ்நாட்டில், துப்புரவுத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறப்பது தடுக்கப்படாவிட்டால்... சீரான வளர்ச்சி என்பது முழுமையடையாது.

வாசுதேவன், பெங்களூரு

வசனகர்த்தா ஆரூர்தாஸ் மரணம்..?

திருவாரூர் மூன்று அருமையான வசன கர்த்தாக்களைத் திரைக்குத் தந்திருக்கிறது. ஒருவர், கலைஞர். மற்றொருவர், ரத்தக்கண்ணீர் திருவாரூர் தங்கராசு. அடுத்தவர், எம்.ஜி.ஆர்- சிவாஜி காலத்திலிருந்து வசனம் எழுதிய ஆரூர் தாஸ். "பாசமலர்' போன்ற படங்களில் அவரது வசனம் எளிமையான தமிழில் வலிமையாக இருக்கும். பின்னாட்களில் டப்பிங் படங்கள் என்றால் ஆரூர்தாஸ் என்கிற அளவுக்கு அவருடைய வசனம் இருந்தது. எல்லாவற்றையும்விட அவருக்கான அடையாளத்தை பொதுமக்களிடம் பெற்றுத் தந்தது, "விதி' திரைப்படம். அதன் ஆடியோ அன்றைய காலகட்டத்தில் டேப்ரெக்கார்டரில் சுழலாத வீடுகளே இல்லை. கறுப்பு-வெள்ளை காலம் முதல் கம்ப்யூட்டர் டெக்னாலஜி காலம்வரை திரைப்படங்களைப் பேச வைப்பவ ராக அவர் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

எம். நிர்மலா, வாணரப்பேட்டை, -புதுச்சேரி

"தமிழ் மொழியை காக்கத் தவறினால் நாட்டுக்கு இழப்பு' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சை எப்படி பார்க்கிறீர்கள்?

பேரிழப்புதான். பா.ஜ.க. அரசின் புறக்கணிப்பிலிருந்து தமிழ்மொழியைக் காக்காவிட்டால்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

இப்போதும் நீதிமன்றத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நடை முறைகளே கடைப்பிடிக் கப்படுகிறதே?

அரசியல் சட்டமே பிரிட்டிஷ் அரசின் நடைமுறையிலிருந்து ஒரு சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டது தான். அவ்வழியே நீதிமன்ற நடை முறைகளும். அதற்கு முன்பு இருந்த மனு தர்மம், அர்த்தசாஸ்திரம் போன்றவற்றை சட்டமாக்கினால் சாதிக்கொரு நீதிதான் மிஞ்சும்.

nkn261122
இதையும் படியுங்கள்
Subscribe