எஸ்.மோகன், கோவில்பட்டி
விவசாயிகளுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமா?
உடலைக் காத்து, உயிரை வளர்க்கும் உணவுக்கான தானியத்தை விளைவிக்கும் விவசாயிகளை பணத்தால் மதிப்பிட முடியாது. அதே நேரத்தில், பல்வேறு தொழில்களும் தொழில்நுட்பங்களும் வளர்ந்துவிட்ட உலகில் உணவுக்கான தானியத்தை விளைவிப்பது மற்ற தொழில்களைப் போல இல்லை என்பதே உண்மை நிலவரம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mavali_210.jpg)
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.
இப்போதுள்ள திரைப்பட இயக்குநர்கள் திரைக்கதையில் கவனம் செலுத்தாமல், திரையரங் கில் ரசிகர்களை நெளியவைக்கிறார்களே?
ஹரிதாஸ் எடுத்த எல்லீஸ் ஆர் டங்கன் போல உண்டா என்றார்கள். அடுத்து வந்த இயக்குநர்களின் படங்களைப் பார்த்தவர்கள். எஸ்.எஸ்.வாசனோட சந்திரலேகா படம்போல வருமா என்றார்கள். அவருக் குப் பிறகு வந்த இயக்குநர்களின் படங்களைப் பார்த்த வர்கள். என்னதான் சொல்லுங்கள், பீம்சிங், ஸ்ரீதர் போல டைரக்டர்கள் வரவே முடியாது என்று சிலர் அங்கலாய்த்தபோதுதான் பாலசந்தரும், பாரதி ராஜாவும் கொடிகட்டிப் பறந்தார்கள். அவர்களுக் குப் பிறகு மணிரத்னமும், ஷங்கரும் வந்தார்கள். இந்திய அளவில் திரைக்கதையில் பாக்யராஜ்தான் பெஸ்ட் என்ற பெட் கட்டிய காலம் ஒன்றும் இருந் தது. எல்லாருக்கும் நடுவே தனித்துவமாகத் திகழ்ந் தார்கள் இயக்குநர்கள் மகேந்திரனும், பாலு மகேந்திராவும். இப்போது ல்ஹய் ண்ய்க்ண்ஹ என்று பிற மொழி இயக்குநர்கள் தமிழிலும், தமிழ் இயக்குநர் கள் பிற மொழிகளிலும் கலக்குகிறார்கள். ரசனை என்பது காலந்தோறும் மாறக்கூடியது. திரைப் படங்களை அந்தந்த காலத்திற்கான ரசிகர்கள் விரும்புகிறார்கள். இப்போது pan india எனப்படும் முன் பின்னான திரைக்கதைகளின் காலம்.
எஸ்.அஜீம், உடையார்பாளையம்.
கவர்னரின் செயல்பாடுகள் முழுவதும் மதம் குறித்தும், சர்ச்சைக் கருத்து கள் குறித்துமே உள்ளதே, இதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?
எந்த கவர்னரால் எந்த மாநிலத்திற்குத்தான் என்ன பலன் கிடைத்து விடப்போகிறது? எல்லா கவர்னர்களும் ஒன்றிய ஆளுங்கட்சியின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள். ஒரு காலத்தில், சொந்தக் கட்சி அரசியலில் ஓரங்கட்டப்பட்டவர்களையும், ஓரங்கட்டப்பட வேண்டியவர்களையும் கவர் னர்களாக நியமித்தார்கள். இப்போது, தங்கள் மறைமுகக் கொள்கைகளை நேரடியாகப் பரப்பும் பிரதிநிதிகளாக கவர்னர்களைப் பயன்படுத்துகிறார்கள். பா.ஜ.க.வினர் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசினார்கள் என்றால், ஆளுநர் ஆர்.என்.ரவியோ திருக்குறளுக்கும், தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பெருமைகளுக்கும் ஆரியக் காவியைப் பூசி, இதுதான் அழகு என்கிறார். அது அழகல்ல, அலங்கோலம் என்று விமர்சனங்கள் வெளிப்படுகின்றன. காரணம், ஒரு மதத்திற்கு ஆதரவாக ஆளுநர் செய்யும் பிரச்சாரம் என்பது அரசியல் சாசனத்திற்கே எதிரானது என்பதால்.
திலகர் ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.
சமீபத்தில் தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அரசியல் சம்பவம் எது?
அரசியல் செய்யலாம் என நினைத்திருந்தவர்களை சம்பவம் செய்த நிகழ்வு ஒன்று இருக்கிறது. கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக தீபாவளி சமயத்தில் நடந்த கார் சிலிண்டர் தாக்குதல் தமிழ்நாட்டை அதிர வைத்தது. எங்கே இன்னொரு 1998 போல கோவையும் தமிழ்நாடும் ஆகிவிடுமோ என்று பதறினர். ஆனால், மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்களோ, இதுதான் நமக்கு நல்ல சான்ஸ் என்று நினைத்து, கார் சிலிண்டர் வெடிப்பை மீறிய அரசியல் வெடிகுண்டுகளை வீசிக்கொண்டே இருந்தனர். தமிழ்நாடு காவல்துறை, உளவுத்துறை, என்.ஐ.ஏ என்று விவகாரமும் விசாரணையும் தொடர்ந்தது. புதிய புதிய தகவல்கள் வெளியாகின. வெளியாகிக் கொண்டும் இருக்கின்றன. அதை எப்படி அரசியலுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தலாம் எனச் சில தலைவர்கள் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில், கோட்டை ஈஸ்வரன் கோவிலைச் சுற்றியுள்ள பள்ளிவாசல்களைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் நேராகக் கோவிலுக்கு வந்து, அங்குள்ள அர்ச்சகர்களைச் சந்தித்தனர். ஜமாத் நிர்வாகிகளுக்கு பட்டாடை அணிவித்து அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்தனர். கோவிலுக்குள்ளேயே இரு தரப்பினரும் நல்லிணக்கத்துடன் பேசினர். எந்த வகையிலும் மதத் தீவிரவாதத்தை அனுமதிப்பதில்லை என்பதில் இரு தரப்பினரும் உறுதி காட்டினர். அரசியல் செய்ய நினைத்தவர்களை சம்பவம் செய்த இந்த நிகழ்வுதான் ஆச்சரியம் அளித்தது.
க.விவேக், தென்காசி.
ராஜஸ்தானில் நடந்த அரசு நிகழ்ச்சியொன்றில், காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டை பிரதமர் மோடி பாராட்டியிருப்பது எதன் அறிகுறி?
இப்படித்தான் குலாம் நபி ஆசாத்தையும் மோடி பாராட்டினார். அப்புறம் என்ன ஆனது என்று சச்சின் பைலட் அலறுகிறாரே, அதில்தான் அடங்கியிருக்கிறது அறிகுறி.
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர்
பயம் யாருக்கு இருக்கவேண்டும்? மக்களுக்கா?… ஆட்சியாளர்களுக்கா?
ஓட்டுப் போடும் நாளில் மக்களுக்கும், அடுத்த ஓட்டுக் கான நாள் வரும் வரை ஆட்சியாளர்களுக்கும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/mavali-t_0.jpg)