மாவலி பதில்கள்

mavalianswers

அ.குணசேகரன், புவனகிரி

காமக்காதலுக்காக குழந்தைகளைக் கொன்ற அபிராமிக்கு மாவலி கொடுக்கும் தண்டனை என்னவாக இருக்கும்?

மாவலியோ, மக்களோ சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, இப்படிப்பட்ட அபிராமிகள் இனி உருவாகதபடி, அபிராமிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். சமுதாயச் சூழல்களைச் சீர்செய்யும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"சரியான கேள்விகளால் அறிவியலை மட்டுமல்ல, வாழ்க்கைத் தரத்தைக் கூட மாற்ற முடியும்' என்கின்ற மயில்சாமி அண்ணாதுரையின் கூற்றை மெய்ப்பித்த நிகழ்வு ஏதேனும்…?

மரத்திலிருந்து கீழே விழுந்த ஆப்பிளைப் பார்த்த அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் மனதில் தோன்றிய கேள்வி, அறிவியல் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆப்பிள் மேலே செல்லாமல், கீழே விழக் காரணம், புவி ஈர்ப்பு விசை என்பதை அவர் நிறுவினார். அதன் விளைவாக, புதிய ஆராய்ச்சிகள் தோன்றின. புவி ஈர்ப்பு விசையை எதிர்

அ.குணசேகரன், புவனகிரி

காமக்காதலுக்காக குழந்தைகளைக் கொன்ற அபிராமிக்கு மாவலி கொடுக்கும் தண்டனை என்னவாக இருக்கும்?

மாவலியோ, மக்களோ சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, இப்படிப்பட்ட அபிராமிகள் இனி உருவாகதபடி, அபிராமிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். சமுதாயச் சூழல்களைச் சீர்செய்யும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"சரியான கேள்விகளால் அறிவியலை மட்டுமல்ல, வாழ்க்கைத் தரத்தைக் கூட மாற்ற முடியும்' என்கின்ற மயில்சாமி அண்ணாதுரையின் கூற்றை மெய்ப்பித்த நிகழ்வு ஏதேனும்…?

மரத்திலிருந்து கீழே விழுந்த ஆப்பிளைப் பார்த்த அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் மனதில் தோன்றிய கேள்வி, அறிவியல் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆப்பிள் மேலே செல்லாமல், கீழே விழக் காரணம், புவி ஈர்ப்பு விசை என்பதை அவர் நிறுவினார். அதன் விளைவாக, புதிய ஆராய்ச்சிகள் தோன்றின. புவி ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் வகையில் மாற்று விசையைப் பயன்படுத்தி விண்ணில் பறக்கும் வகையில் விமானங்கள் உருவாகின. விண்வெளி ஆராய்ச்சிகளும் நடைபெற்று, நிலவில் மனிதன் கால்தடம் பதிக்கும் அதிசயமே நிகழ்ந்தது. நியூட்டனின் மனதில் தோன்றிய கேள்வி, மனிதர்களின் வாழ்க்கை முறையையே மாற்றியது. அதுபோல தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா என்று பலரது மனதிலும் சந்தேகக் கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழ்வழிக் கல்வி பயின்றவரான மயில்சாமி அண்ணாதுரை, நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பும் இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தின் இயக்குநராக இருந்து, தமிழில் படித்த அறிவியலையும் வாழ்க்கைத் தரத்தையும் மாற்ற முடியும் என மெய்ப்பித்துள்ளாரே!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே குற்றவாளி, ஆதாரங்கள் இல்லாவிட்டால் எந்தக் குற்றச் செயலையும் துணிந்து செய்யலாம்.. இதுதான் ஜனநாயகமா?

ராஜாக்கள் காலத்திலிருந்தே அப்படித்தான்! திருட்டுக் குற்றச்சாட்டுக்குள்ளான கோவலனால் ஆதாரம் காட்ட முடியாததால், அவன் தலையைத் துண்டித்துக் கொன்றான் மன்னன். கண்ணகியிடம் கால்சிலம்பு என்கிற ஆதாரம் இருந்ததால், மன்னன் தன்னைத் தானே தண்டித்துக்கொள்ள வேண்டியதாயிற்றே!

சோ.பூ.அரசு, பெ.ம.கூடலூர் 639 202

ஜெ. மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் இன்னும் எவ்வளவு காலம் விசாரித்து மரண மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும்?

விசாரிக்கப்படுபவர்கள் பலரும் முடிச்சவிழ்க்கிகளாக இருக்கிறார்கள். ஆனால் ஆணையத்தால் முடிச்சை அவிழ்க்க முடியவில்லை.

திராதி, துடியலூர்

"அரசியல்வாதிகள் சரியாகப் பணியாற்றினால் நாங்கள் ஏன் அரசியலுக்கு வருகிறோம்' என்கிறாரே நடிகர் விஷால்?

நல்லவேளை... படம் சரியில்லை என்பதற்காக ரசிகர்கள் யாரும் நடிகர்களாகிவிடுவதில்லை. விஷால்கள் தப்பித்தார்கள்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"கருப்புப் பணத்தை வெள்ளையாக்கத்தான் தினகரன் பொதுக்கூட்டம் நடத்துகிறார்' என்கிறாரே ஜெயக்குமார்?

பாம்பின் கால் பாம்பறியும்!

ஆன்மிக அரசியல்

mavalianswers

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

எம்.ஜி.ஆர். மூகாம்பிகை பக்தராக இருந்தார் என்பதும், சிவாஜி திருப்பதிக்குச் சென்றதைத் தி.மு.க.வினர் கிண்டல் செய்தனர் என்பதும் உண்மையா?

உண்மையே! தி.மு.க.வை நாத்திக கட்சியாக அண்ணா தொடங்கவில்லை. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்கிற நிலைப்பாட்டின்படி, பகுத்தறிவுக் கட்சியாக அவர் வளர்க்க நினைத்தார். தொண்டர்கள் பலர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்றாலும் அண்ணா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் நாத்திகர்களாகவே இருந்தனர். திராவிட இயக்க நாடகங்கள்-திரைப்படங்கள் வாயிலாக மக்களின் மனதில் நிறைந்திருந்த சிவாஜி, தி.மு.க. தலைவர்களிடம் நெருக்கமாக இருந்து கட்சிப் பிரச்சார நாடகங்களில் பங்கேற்று நிதி திரட்டித் தந்தார். அந்த நிலையில் அவர் திருப்பதி கோவிலுக்குச் சென்று வந்தது தி.மு.க.வுக்குள் பெரும் சர்ச்சையானது. சிவாஜிகணேசன் என்ற பெயரை "திருப்பதி கணேசா' என்று கிண்டல் செய்தனர். இதில் உள் அரசியலும் நிறைய உண்டு. அதன் காரணமாக, தி.மு.க.விலிருந்து ஒதுங்கிய சிவாஜி, பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை தனது திரைப்படங்களில் தி.மு.க. கொடி, சின்னம், அண்ணா படம் எல்லாம் காட்டுவார். பக்தி வேடங்களில் நடிக்கமாட்டார். அதேநேரத்தில், கடவுள் மறுப்பு கொள்கையும் பேசமாட்டார். தன் தாயைத் தெய்வமாக வணங்குவார். அ.தி.மு.க.வைத் தொடங்கி, முதலமைச்சரான பிறகு, கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு நேரில் சென்று தங்க வாள் காணிக்கை அளித்தது பெரும் சர்ச்சையானது. அப்போது, "மூகாம்பிகை வடிவில் என் தாயைக் காண்கிறேன்' என்றார் எம்.ஜி.ஆர். அவரையடுத்து, ஜெயலலிதா முதல்வரான பிறகு வெளிப்படையாக யாகம்-ஹோமம் என நடத்த ஆரம்பித்துவிட்டார். தற்போது தி.மு.க. முன்னணியினரும் சளைக்காமல் கோவில் கோவிலாகப் போய்க் கொண்டிருக்கின்றனர். "ஒருவனே தேவன்' என்றார் அண்ணா. அந்த தேவன் யார் என்பதற்காக ஒவ்வொரு கடவுளிடமும் சென்று வேண்டுகிறார்களோ என்னவோ!

nkn180918
இதையும் படியுங்கள்
Subscribe