Advertisment

மாவலி பதில்கள்

mm

சி.கார்த்திகேயன், சாத்தூர்

கேரள மாநில கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது பற்றி?

பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர்களை வைத்து இரட்டை ஆட்சியை நடத்தப் பார்க்கிறது மோடி அரசு. கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகியவை இதனால் பாதிக்கப்படுகின்றன. ஜனநாயகத்தின் உயிரைக் காப்பதற்கு கடைசி வாய்ப்பாக இருப்பவை நீதிமன்றங்கள். எனினும், இத்தகைய சட்டப் போராட்டங்களிலேயே மாநில அரசுகள் காலம் கழிக்க வேண்டிய சூழல் உருவாவது ஜனநாயகத் திற்கு ஆரோக்கியமானதல்ல.

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77

Advertisment

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் வெறும் ஜெயலலிதா இல்லை... அவர் தமிழக முதல்வர். இந்த நிலையில் அவரது சிகிச்சை முறைகளை... தமிழக ஆளுநர் மற்றும் மத்திய அரசு கண்காணித்திருக்க வேண்டுமா?.. இல்லையா?

mavalianswers

ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது கவர்னர் பொறுப்பில் இருந்தவர் வித்யாசாகர் ராவ். அவர் அப்போலோவுக்கு வருகை தந்தபோது, மிகவும் பரபரப்பாக இ

சி.கார்த்திகேயன், சாத்தூர்

கேரள மாநில கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது பற்றி?

பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர்களை வைத்து இரட்டை ஆட்சியை நடத்தப் பார்க்கிறது மோடி அரசு. கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகியவை இதனால் பாதிக்கப்படுகின்றன. ஜனநாயகத்தின் உயிரைக் காப்பதற்கு கடைசி வாய்ப்பாக இருப்பவை நீதிமன்றங்கள். எனினும், இத்தகைய சட்டப் போராட்டங்களிலேயே மாநில அரசுகள் காலம் கழிக்க வேண்டிய சூழல் உருவாவது ஜனநாயகத் திற்கு ஆரோக்கியமானதல்ல.

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77

Advertisment

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் வெறும் ஜெயலலிதா இல்லை... அவர் தமிழக முதல்வர். இந்த நிலையில் அவரது சிகிச்சை முறைகளை... தமிழக ஆளுநர் மற்றும் மத்திய அரசு கண்காணித்திருக்க வேண்டுமா?.. இல்லையா?

mavalianswers

ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது கவர்னர் பொறுப்பில் இருந்தவர் வித்யாசாகர் ராவ். அவர் அப்போலோவுக்கு வருகை தந்தபோது, மிகவும் பரபரப்பாக இருந்தது. ஜெயலலிதா பற்றி உடல்நலன் விசாரித்துவிட்டு அவர் சென்றபோது, பத்திரிகையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அவரது கருத்துகளை எதிர்பார்த்திருந்தனர். ராஜ் பவன் சென்றபிறகுதான் கவர்னரின் அறிக்கை வெளிவந்தது. ஜெயலலிதாவை கண்ணாடிக் கதவு வழியாகப் பார்த்ததாக வும், அவர் தம்ஸ் அப் பாணியில் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார் என்றும் கவர்னர் வித்யாசாகர் ராவ் சார்பில் மீடியாக் களுக்குத் தெரிவிக்கப் பட்டது. ஆனால், பின்னர் டெல்லிக்கு அவர் அனுப்பிய அறிக் கையில் அந்த தம்ஸ் அப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஏன் என்பது பற்றி அவர் தரப்பில் தான் விளக்கியிருக்க வேண்டும். 2016 டிசம்பர் 4ந் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு இதயத்துடிப்பு நின்ற நிலையில், மருத்துவமனைக்கு வந்தவர், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் இந்தியா வின் குடியரசுத் துணைத் தலைவராகப் பின்னர் பொறுப்பு வகித்தவருமான வெங்கையா நாயுடு. டிசம்பர் 5ந் தேதி நள்ளிரவு கடந்து ஜெயலலிதாவின் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படும்வரை அவரும் அங்கே இருந்தார். ஆக, ஆளுநரும் மத்திய ஆளுங்கட்சியின் சார்பிலான பிரதிநிதியும் ஜெ.வின் சிகிச்சை முறைகளை அறிந்த வர்கள்தான். ஜெயலலிதா அந்த சிகிச்சைகளை எந்தளவில் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தார் என்பதுதான் அ.தி.மு.கவின் கடைக்கோடித் தொண் டர்கள் வரையிலான கேள்வியாக அப்போது இருந் தது. அதற்கான விடையை சம்பந்தப்பட்டவர்கள் இப்போதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

ம.தமிழ்மணி, குப்பம் -ஆந்திரா

அ.தி.மு.க உட்கட்சிப் பூசலால் வரும் தேர்தலில் தி.மு.க.விற்கு ஜாக்பாட்தானே?

அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி பிளவுபட்டால் தி.மு.க.வுக்கு சாதகம்தான். ஆனால், எந்தத் தேர்தலும் எவருக்கும் எளிதான ஜாக்பாட்டாக அமைந்துவிடாது. எம்.பி. தேர்தல் என்றாலும், எம்.எல்.ஏ. தேர்தல் என்றாலும் ஆட்சியில் இருப்பவர்களை நீடிக்க விடுவதா, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதா என்பதுதான் மக்களின் மனநிலை சார்ந்த தீர்ப்பாக இருக்கும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது மத்தியில் ஆள்பவர்களை மாற்றுகின்ற தேர்தலாக அமையுமா என்பதுதான். மாநிலத்தில் ஆள்பவர்களின் நிர்வாகத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கான உரைகல்லாகவும் அமையும். அதனால், அ.தி.மு.க.வின் உட்கட்சிப் பூசலைவிட, தி.மு.க தனது ஆட்சி, நிர்வாகம், சொந்தக்கட்சி விவகாரங்களில் சரியாக இருந்தால் மட்டுமே ஜாக்பாட் அடிக்க முடியும்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

மருத்துவப் படிப்பை தமிழில் படிக்க முடியாது என்ற கோணத்தில் அண்ணாமலை கேள்வி உள்ளதே?

மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகள் தமிழிலும் பயில்வதற்கான வாய்ப்பு 1996ல் கலைஞர் ஆட்சியிலேயே மேற்கொள்ளப்பட் டது. அதில் படித்தவர்களும் உண்டு. ஆனாலும், ஆங்கில வழியிலான தொழிற்படிப்புகளே சர்வதேச அளவிலான வேலை வாய்ப்புகளுக்கு உறுதுணை யாக இருக்கின்றன. இந்தியில் மருத்துவம் என அமித்ஷா எடுத்திருக்கும் முயற்சி அந்த மாநில மக்களுக்கு எந்தளவில் பயன்தரும் என்பதைவிட, இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர் களின் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பை எந்தளவு பாதிக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

தமிழக அரசின் கல்வி டிவி சேனலை மத்திய அரசு தடை செய்து இருப்பது குறித்து?இல்லாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை மத்திய அரசு நியமனம் செய்து இருப்பது குறித்து?

அதிகாரங்களை மாநிலங்களுக்குப் பகிர்ந் தளிக்காமல் ஒன்றியமே அதிகளவில் குவித்து வைத்திருக்கும்போது இத்தகைய உத்தரவுகள் வரத்தான் செய்யும். காலத்திற்கேற்ற வகையில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். இந்தியாவில் அது தலைகீழாக இருக்கிறது.

வாசுதேவன், பெங்களூரூ

இங்கிலாந்தின் புதிய பிரதமர் சுனக்..!

அவருடைய தாத்தா பிறந்த ஊர் தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கிறது. அவருடைய அப்பா கென்யா நாட்டுக்காரர். அவருடைய அம்மா டான்சானியா நாட்டவர். ரிஷி சுனக் பிறந்தது இங்கிலாந்தில். அவரை இந்தியராகக் கொண்டாடி மகிழ்கிறோம்!

nkn291022
இதையும் படியுங்கள்
Subscribe