நித்திலா, தேவதானப்பட்டி
மாவலியிடம் நாங்கள் கேள்வி கேட்டு பதில் பெறுகிறோம். விவரம் அறிகிறோம். பதில் கிடைத்ததால் ரசிக்கிறோம். இதுபோல மாவலி ரசித்த கேள்வி-பதில்கள் யாருடையவை?
ஒவ்வொரு பத்திரிகையிலும் இடம்பெறும் கேள்வி-பதில் பகுதிகளுக்கும் தனித்தன்மை உண்டு. குமுதம் இதழின் அரசு பதில்கள் முதல் ராணி இதழின் அல்லி பதில்கள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்கக்கூடியவைதான். அரசியல் -சினிமா -இலக்கியம் பற்றி இவற்றில் பதில்கள் இடம் பெறும். இந்த மூன்று துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியதுடன் உலக நடப்பு, விளையாட்டு என எல்லாவற்றையும் தனது கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளக்க வேண்டும் என்ற அக்கறையுடனும் தனக்கேயுரிய தமிழ்ச்சுவையுட னும் பதில்கள் தந்தவர் கலைஞர்.
நித்திலா, தேவதானப்பட்டி
மாவலியிடம் நாங்கள் கேள்வி கேட்டு பதில் பெறுகிறோம். விவரம் அறிகிறோம். பதில் கிடைத்ததால் ரசிக்கிறோம். இதுபோல மாவலி ரசித்த கேள்வி-பதில்கள் யாருடையவை?
ஒவ்வொரு பத்திரிகையிலும் இடம்பெறும் கேள்வி-பதில் பகுதிகளுக்கும் தனித்தன்மை உண்டு. குமுதம் இதழின் அரசு பதில்கள் முதல் ராணி இதழின் அல்லி பதில்கள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்கக்கூடியவைதான். அரசியல் -சினிமா -இலக்கியம் பற்றி இவற்றில் பதில்கள் இடம் பெறும். இந்த மூன்று துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியதுடன் உலக நடப்பு, விளையாட்டு என எல்லாவற்றையும் தனது கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளக்க வேண்டும் என்ற அக்கறையுடனும் தனக்கேயுரிய தமிழ்ச்சுவையுட னும் பதில்கள் தந்தவர் கலைஞர். நக்கீரன் குழுமம் உள்பட பல இதழ்களுக்கும் அவர் அளித்திருந்த பதில்களிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து, "திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்' என்ற புத்தகமாகத் தந்திருக்கிறார் தி.மு.க. மாணவரணிச் செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வழக்கறி ஞர் சி.வி.எம்.பி.எழிலரசன். இதனை அக்டோபர் 7-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதய நிதி ஸ்டாலின் வெளியிட, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற் றுக்கொண்டார். நக்கீரன் ஆசிரியரும், இயக்குநர் கரு.பழனியப்பனும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அந்தப் புத்தகத்தில் உள்ள கலைஞரின் சுவைமிகு பதில்களிலிருந்து ஒரு சில...
எனக்கு 12 வயது ஆகிறது. இந்த வயதில் அரசியல் பற்றியும் பேச, தெரிந்து கொள்ள ஆசைப்படலாமா?
இந்த வயதில் அரசியல் என்பது அத்தை மகளைப்போல்! பேசலாம் -பழகலாம் -சுற்றி வரலாம். ஆனால் தொட்டுவிடக் கூடாது.
தலையெழுத்துக்கும் கையெழுத்துக்கும் தொடர்பு உண்டா?
மூளைக்கும் கைக்கும் தொடர்பு இல்லாவிட்டால் எப்படி?
பொதுவாழ்வில் முதல் தடவை கைதாகி, போலீஸ்காரர்கள் பின்னால் நடந்தபோது என்ன நினைத்தீர்கள்?
பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்ததற்காக புண்ணியம் பெற்றதாக நினைத்தேன்.
காலம் என்பது சீக்கிரமாக ஓடுகிறதா.. அல்லது நமக்கு நேரம் போதவில்லையா?
ஆர்வமுடன் உழைப்பவன், நேரம் போதவில்லை என்கிறான். அக்கறையற்ற சோம்பேறி, நேரம் போகவில்லை என்கிறான்.
தாஜ்மஹாலுக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
அங்கே ஒரு கொடி மண்ணுக்குள் புதைந் திருக்கிறது. இங்கே ஒரு கொடி விண்ணோக்கிப் பறக்கவிடப்பட்டிருக்கிறது.
ஆண்மை -பெண்மை -வாய்மை-பொய்மை -எந்த மையில் உண்மையில் பெருமை?
உங்கள் கேள்வியே ஒரு புதுமை.
முன்அனுபவம் இல்லாமல் தொழில் ஆரம்பித்தால் வெற்றிபெற முடியுமா?
நீந்தத் தெரிந்த பிறகுதான் நீரில் இறங்கவேண்டும் என நினைத்தால் நீச்சல் கற்றுக்கொள்ளவே முடியாது.
ஒருவேளை நீங்கள் அரசியலில் நுழையாமல் இருந்திருந்தால்?
சிலர் வெறும் வாயை மென்றுகொண்டிருப்பார்கள்.
அடுத்த பிறவியில் நம்பிக்கையில்லாதவர் நீங்கள் என்பதை நன்கு அறிந்தே கேட்கிறேன். அப்படி ஒருவேளை பிறந்தால் என்னவாக பிறந்திட விரும்புகிறீர்கள்?
குழந்தையாக.
திடீரென பேரறிஞர் அண்ணா உங்கள் முன் தோன்றினால் என்ன கேட்பீர்கள்?
பெரியாரை அழைத்து வரவில்லையா அண்ணா என்று கேட்பேன்.
எழுத்துத் துறைக்கு மட்டும் நீங்கள் வராமல் இருந்திருந்தால் உங்கள் அரசியல் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?
அரசியல் களத்தில் நின்று போராட எனக்குத் தேவையான ஒரு படைக்கலன் குறைந்திருக்கும்.
எழுதுவதற்கு மூட் வர வேண்டும் என்று சொல்கிறார்களே, தங்களுக்கு எப்படி?
நான் எழுதுவதே மூட் வரவேண்டும் என்பதற்காகத்தான்.
தாங்கள் சந்திக்க நினைத்து இன்றுவரை சந்திக்க முடியாமல் இருக்கும் நபர் யார்.. சந்தித்தால் அவரிடம் என்ன கேட்பீர்கள்?
அந்த நபர் வேறு யாருமல்ல, கடவுள்தான். அவரைச் சந்தித்தால், நீ உண்டா, இல்லையா என்று உலகில் பெரிய விவாதமே நடந்துகொண்டிருக்கிறது. உடனே நீ எல்லாருக்கும் முன் தோன்றி அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டக்கூடாதா என்று கேட்பேன்.