நித்திலா, தேவதானப்பட்டி

பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். -இந்து முன்னணி ஆட்கள் தொடர்பான வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூகவலைத்தளப் பதிவாளர்களும் இந்துத்வா ஆட்கள் மீதே சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் காரணம் என்ன?

Advertisment

mm

தமிழ்நாட்டில் இந்துத்வா சக்திகளின் நபஉ (வடிவேலு வார்த்தையில் வரலாறு) அப்படித்தான் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்துத்வா அமைப்பினர் மீதான தாக்குதல்கள் தொடர்பான விசா ரணையில் அவர்களோ அவர்கள் தரப்பினரோதான் இந்த தாக்குதல் களை மேற்கொண்டு விளம்பரம் தேடியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. இந்த முறை எதிர்த்தரப்பினர் சிலர் கைது செய்யப் பட்டிருந்தாலும், சொந்தக் கட்சியினரும் சிக்கியிருக் கிறார்கள். இதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் சந்தேகக் கண்களுடன் பார்க்கிறார்கள்.