Advertisment

மாவலி பதில்கள்

ss

கண்ணன் கலா, சாத்தூர்

அமரர் இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையாருக்கும், ஜெயலலிதா அம்மையாருக் கும் என்ன வித்தியாசம்?

Advertisment

dd

முடியாட்சி வழியிலான அரச குடும்பத்தவ ரான ராணி எலிசபெத் 96 ஆண்டுகாலம் வாழ்ந்து, 70 ஆண்டுகள் ராணியாக இருந்து, தன் குடும்பத்தாரிடமும் இங்கிலாந்து நாட்டு மக்களிடமும் உலக நாடுகளிடமும் மரியாதை செலுத்தி மாண்பு காத்தவர் என்பது வரலாறு. ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவராக இருந்த ஜெயலலிதா மனதளவில் மகாராணி. அவரால் பிரதமர் உள்ளிட்டவர்களே மரியாதை கிடைக்காமல் அல்லாடினார்கள் என்பதுதான் வரலாறு.

மஞ்சுவாசுதேவன், பெங்களூரு

பிறந்த குழந்தைக்கு பகோடா என்று பெயரிட்டு அசத்திய தம்பதியினர்.. !

பெயரில் என்ன இருக்கிறது என்று பொதுவாக சொல்வது உண்டு. ஆனால், பெயரில் பலவும் இருக்கிறது. குப்பன், சுப்பன் என்ற பெயர்கள் அடித் தட்டு மக்களுக்கு மட்டுமே வைக்கப்பட்டன. சேஷாத்திரி, அனந்தசயனம் போன்ற பெயர்கள

கண்ணன் கலா, சாத்தூர்

அமரர் இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையாருக்கும், ஜெயலலிதா அம்மையாருக் கும் என்ன வித்தியாசம்?

Advertisment

dd

முடியாட்சி வழியிலான அரச குடும்பத்தவ ரான ராணி எலிசபெத் 96 ஆண்டுகாலம் வாழ்ந்து, 70 ஆண்டுகள் ராணியாக இருந்து, தன் குடும்பத்தாரிடமும் இங்கிலாந்து நாட்டு மக்களிடமும் உலக நாடுகளிடமும் மரியாதை செலுத்தி மாண்பு காத்தவர் என்பது வரலாறு. ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவராக இருந்த ஜெயலலிதா மனதளவில் மகாராணி. அவரால் பிரதமர் உள்ளிட்டவர்களே மரியாதை கிடைக்காமல் அல்லாடினார்கள் என்பதுதான் வரலாறு.

மஞ்சுவாசுதேவன், பெங்களூரு

பிறந்த குழந்தைக்கு பகோடா என்று பெயரிட்டு அசத்திய தம்பதியினர்.. !

பெயரில் என்ன இருக்கிறது என்று பொதுவாக சொல்வது உண்டு. ஆனால், பெயரில் பலவும் இருக்கிறது. குப்பன், சுப்பன் என்ற பெயர்கள் அடித் தட்டு மக்களுக்கு மட்டுமே வைக்கப்பட்டன. சேஷாத்திரி, அனந்தசயனம் போன்ற பெயர்கள் மேல்தட்டு மக்களுக்கு சூட்டப்பட்டன. குப்பனையும் சுப்பனையும் கதிரவன், பகலவன் என்று அழகிய தமிழில் பெயர் சூட்ட வைத்தது திராவிட இயக்கம். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தனது தந்தையார் பெயரை தொல்காப்பியன் என்று மாற்றியதால் இரா.திரு மாவளவன், தொல்.திரு மாவளவன் ஆனார். இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத் தில் மிசா சட்டத்தில் பல தலைவர்கள் கைதானார்கள். அந்த அடிப்படை யில்தான் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மகளுக்கு மிசா பாரதி என்று பெயர் சூட்டப்பட்டது. சிறைச்செல்வன் என்ற பெயர் கொண்ட திராவிட இயக்கத்தினர் உண்டு. சிதம் பரம், பழனி, திருப்பதி என்று பெயர் வைக்கப்பட்ட இந்த மண்ணில் தந்தை பெரியார் அவர்கள் மாஸ்கோ, ரஷ்யா என்று பெயர் வைத்தார். கலைஞர் தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூடடினார். தி.மு.க. ஆட்சியைக் கலைக்க கையெழுத்திட மாட்டேன் என்றவர் அன்றைய கவர்னர் பர்னாலா. சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ உதயசூரியன் மகன் பெயர் பர்னாலா. கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா தேவி, கொரோனாப்ரியா என்று பெயர் சூட்டி யிருக்கிறார்கள். பகோடா என்ற பெயரும் அப்படித் தான். அதற்கு கோயில் என்ற பெயரும் உண்டு.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி -நெல்லை

ரெயில்வே நில குத்தகை காலத்தை 5 ஆண்டில் இருந்து 35 ஆண்டாக உயர்த்தி இருப்பது குறித்து?

ஒரு காலத்தில் ரயில்வேதான் இந்தியாவின் பெருமைக்குரிய பொதுத்துறை நிறுவனம். இந்தியாவுக்கு உலக நாடுகள் கடன் கொடுப்பதே ரயில்வே தண்டவாளம் இரும்பை நம்பித்தான் என்று வேடிக்கையாக சொல்வது உண்டு. அந்த ரயில்வே துறையையே தனியார் மயமாக்குவதில் தீவிரம் காட்டும் மோடி ஆட்சியில் ரயில்வே நிலக் குத்தகை காலத்தை உயர்த்தி இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

பி.மணி, குப்பம் -ஆந்திரா

அரசியல் தலைவர்கள் அவ்வப்போது ஏற்படுத்தும் நடைபயணம் ரத யாத்திரை இவைகளெல்லாம் எதற்காக?

மக்களிடம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு, தங்களுடைய இயக்கத்திற்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். சமய இயக்கத்தினர் காலத்திலிருந்தே இத்தகைய பயணங்கள் தொடங்கிவிட்டன. புத்தர் நடைப்பயணம் செய்திருக்கிறார். ஆதிசங்கரர் நடந்திருக்கிறார். நாயன்மார்கள், ஆழ்வார்கள் நடந்திருக்கிறார்கள். அரசியல் களத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக காந்தி தண்டி யாத்திரை நடத்தினார். சுதந்திர இந்தியாவிலும் வினோபா உள்ளிட்ட பலர் நடைப்பயணம் மேற்கொண் டுள்ளனர். திருச்செந்தூர் கோவிலில் நடந்த படுகொலை தொடர்பாக மதுரையி லிருந்து நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொண்டார் கலைஞர். காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் பல முறை நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். காங்கிர சில் இருந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடைப்பயணம் மேற்கொண்டார். பா.ஜ.க.விலும் இத்தகைய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போது பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும், காங்கிரசுக்கு உயிர்ப்பூட்டவும் ராகுல் காந்தி பயணிக்கிறார்.

அதிதன்சமரன் கிருபளானி, எம்.ஜி.நகர்

எம்.ஜி.ஆரின் நம்பிக் கைக்குரியவராக இருந்த ஆர்.எம். வீரப்பன் ஏன் அர சியலில் சோபிக்க வில்லை?

எம்.ஜி.ஆரின் நம் பிக்கைக்குரியவரான அவர் எம்.ஜி.ஆர். இருந்தவரை அரசியலில் செல்வாக்குடன்தான் இருந்தார். எம்.ஜி.ஆர் அந்த மரியாதையைக் கொடுத்தார். எம்.ஜி.ஆரையே மதிக்காத ஜெயலலிதா தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகு ஆர்.எம்.வீ. உள்ளிட்ட அ.தி.மு.கவின் சீனியர்கள் யாருக்குமே மரியாதை இல்லை. நாவலர் நெடுஞ்செழியனையே உதிர்ந்த ரோமம் என்றவர் ஜெயலலிதா.

லோகு, கல்லுக்குட்டை -பெருங்குடி

ஓணம் பண்டிகை என்றாலே எனக்கு "விண்ணைத் தாண்டி வருவாயா' சினிமாவின் புடவை கட்டிய திரிஷாவும், மலர் டீச்சர் சாய் பல்லவி, நித்தி ரஞ்சிதா நினைவும்தான் வருகிறது ஏன்?

வெள்ளை நிறத்தில் வண்ணத்தைக் காண்கின்ற மனது உங்களுக்கு இருக்கிறது. ஓணம் பண்டிகையில் மாவலியிடம் கேட்கிற கேள்வியா இது?

nkn140922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe