எம்.முகமது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"டி.டி.வி. தினகரனுக்கு கோமாரி நோய் வந்துள்ளது' என்கிறாரே ஜெயகுமார்?
எம்.ஜி.ஆருக்கு ஜானகி அம்மையார் மோரில் விஷம் வைத்துக் கொன்றார் என்பதில் தொடங்கி, நாவலர் நெடுஞ்செழியனை "உதிர்ந்த ரோமம்' என்று சொன்னதில் தொடர்ந்த அ.தி.மு.க.வின் தனிமனித தாக்குதல், கோமாரி நோயாகியுள்ளது. அடுத்தவரை குற்றம்சாட்டும் ஆட்சியாளர்களுக்கோ கோமா நோய் ஏற்பட்டுள்ளது.
சோ.பூ.அரசு, பெ.ம.கூடலூர்
விசாரணைக் கைதியாக ஒருவரை எவ்வளவு காலம் சிறையில் வைத்திருக்க சட்டமும் நீதி மன்றங்களும் அனுமதிக்கும்?
தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்று சொல்லப்பட்டாலும் இந்தியாவில் அதுதான் தொடர்கிறது. 1998-ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பல முஸ்லிம் கைதிகள் 20 ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாக சிறைப்பட்டிருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி ஆட்சி அமைந்தும் நீதி கிடைத்தபாடில்லை.
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118
வா
எம்.முகமது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"டி.டி.வி. தினகரனுக்கு கோமாரி நோய் வந்துள்ளது' என்கிறாரே ஜெயகுமார்?
எம்.ஜி.ஆருக்கு ஜானகி அம்மையார் மோரில் விஷம் வைத்துக் கொன்றார் என்பதில் தொடங்கி, நாவலர் நெடுஞ்செழியனை "உதிர்ந்த ரோமம்' என்று சொன்னதில் தொடர்ந்த அ.தி.மு.க.வின் தனிமனித தாக்குதல், கோமாரி நோயாகியுள்ளது. அடுத்தவரை குற்றம்சாட்டும் ஆட்சியாளர்களுக்கோ கோமா நோய் ஏற்பட்டுள்ளது.
சோ.பூ.அரசு, பெ.ம.கூடலூர்
விசாரணைக் கைதியாக ஒருவரை எவ்வளவு காலம் சிறையில் வைத்திருக்க சட்டமும் நீதி மன்றங்களும் அனுமதிக்கும்?
தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்று சொல்லப்பட்டாலும் இந்தியாவில் அதுதான் தொடர்கிறது. 1998-ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பல முஸ்லிம் கைதிகள் 20 ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாக சிறைப்பட்டிருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி ஆட்சி அமைந்தும் நீதி கிடைத்தபாடில்லை.
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118
வாழை மரம் வெட்டினால் மங்களகர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு, சவுக்கு மரம் துண்டாக்கப்பட்டால் பிரியாணி சாப்பாடு. புறவழிச் சாலைக்காக விவசாய நிலங்களைக் கைப்பற்றினால் மட்டும் பஞ்சம்-பசி என்று கூப்பாடா?
மாட்டின் மடியிலிருந்து பால் கறந்தால் குழந்தைக்கு உணவு. பெரியவர்களுக்கு மருந்து. பால் தருகின்ற மடியை அறுத்தால் மாட்டுக்கு மரணம். அதனால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் துயரம்.
மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
நடிகர் சிவகுமாரைப் போல தனது கலைத்துறையில் பயணித்த தலைவர்கள் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறாரே நடிகர் ராஜேஷ்?
அவர் நடிகர் மட்டுமல்ல, நிறைய படிப்பவர். அரசியல் கட்சிகளின் கொள்கைகள் பற்றிப் புரிந்தவர். தனிப்பட்ட முறையில் பல தலைவர்களிடம் பழக்கம் கொண்டவர். ஒரு காலத்தில் செங்கொடி பிடித்து கம்யூனிஸ்ட்டாக திரையில் "சங்கநாதம்' எழுப்பியவர். இப்போது, கலைஞர் ஏகாதசியில் இறந்து, துவாதசியில் அடக்கம் செய்யப்பட்டதன் பலனைக் கூறும் ஜாதகம்வரை அறிந்தவராக இருக்கிறார்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"கடந்த 4 ஆண்டுகளில் 5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டிருக்கிறார்கள்' என்று பிரதமர் கூறுகிறாரே?
விவசாயிகள், வியாபாரிகள், சிறுதொழில் செய்வோர், சுயதொழில் முனைவோர் எனப் பலகோடி பேர் இந்தியா முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கணக்கையும் பிரதமர் கூறினால் நியாயமாக இருக்கும்.
பி.மணி, குப்பம், ஆந்திரா
"உடல்உறுப்பு மாற்றுச் சந்தையாக தமிழகம் திகழ்கிறது' என பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறாரே?
உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதனைப் பயன்படுத்தி, இதனை உடல் உறுப்பு மாற்றுச் சந்தையாக்கும் வகையில் சில புது வியாபாரிகள் மருத்துவத்துறைக்குள் நுழைந்திருக்கிறார்கள். மதிப்பு உள்ளவற்றைப் பயன்படுத்தி லாபம் பார்ப்பது வழக்கமாகிவிட்டது; சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டை மையமாக வைத்து தேர்தல் அரசியலில் லாபம் பார்த்த கட்சிகளைப் போல!
நித்திலா, தேவதானப்பட்டி
"ஸ்லீப்பர் செல்' என்ற வார்த்தை தமிழக அரசியலில் அதிகமாகப் புழங்குகிறது. தேசிய அரசியலில் ஸ்லீப்பர் செல்கள் உண்டா?
பா.ஜக.வுக்கான ஸ்லீப்பர் செல்லாக இருக்கிறாரே, அமைச்சரவையைக் கலைத்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
______________
ஆன்மிக அரசியல்
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
ஆரோக்கியமான சமுதாயத்தை சீர்குலைப்பவர்கள் நாத்திகர்களா-ஆத்திகர்களா?
ஆத்திகர், தான் நம்புகிற கடவுளை தனக்குத் தெரிந்து-தான் பயிற்றுவிக்கப்பட்ட வழியில் வழிபடுகிறார். நாத்திகர், அந்தக் கடவுளின் இருப்பு குறித்து தன் அறிவின் வழியே கேள்விகளை எழுப்பி, இறை வழிபாட்டை மறுக்கிறார். அவரவர் வழியில் கருத்துகளை எடுத்து வைக்கும்போது ஆத்திகமோ நாத்திகமோ சமுதாயத்தைச் சீர்குலைப்பதில்லை. வள்ளலார் ஆத்திகர். அவர் வகுத்த சமரச சுத்த சன்மார்க்க நெறி என்பது சாதி-மத-சாஸ்திரக் குப்பைகளுக்கு எதிரான ஆன்மிகத்தை முன்வைத்தது. பெரியார் நாத்திகர். அவர் பரப்பிய நாத்திக கருத்து, சமுதாயத்தில் புதிய சிந்தனைகளை உருவாக்கி, சமூக நீதிக்கு வழியமைத்தது. சமுதாயத்தின் ஆரோக்கியம் எந்த வகையிலும் சீர்குலையவில்லை. இதற்கு மாறாக, தனி மனித விரோதத்தையும் மாற்று மதங்களின் மீது வன்முறையையும் வளர்க்கும் மதவெறி சக்திகளால்தான் வன்முறைக் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
தன்னுடைய கடவுளுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று கூறி, இன்னொரு மதத்தாரின் மசூதியை இடித்துத் தகர்ப்பதும், தன்னுடைய மதத்தை வளர்ப்பதாகக் கூறி ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற மதத்தாரைக் குறிவைத்து அந்த மதத்துப் பெண்களின் வயிற்றில் உள்ள குழந்தையைக்கூட குத்திக் கிழித்து வெளியே எடுத்துக் கொல்வதுமான நடவடிக்கைகளே சமுதாயத்தைச் சீர்குலைக்கின்றன. இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மதம் தன்னுடைய நாட்டின் சிறுபான்மையினர் மீது பாய்வதுபோலவே, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மியான்மர் என அந்தந்த நாட்டு பெரும்பான்மை மதங்களும் அங்கே சிறுபான்மையினராக இருப்போர் மீது காட்டுமிராண்டித்தனமாகப் பாய்ந்து நாட்டை சீர்குலைக்கிறது.