Advertisment

மாவலி பதில்கள்

ss

புவனாப்ரியன் கிருபளானி, எம்.ஜி.நகர் -சென்னை

விவசாயி எடப்பாடி பழனிச்சாமி இனி வயலில் இறங்கி விவசாயம் பார்க்க வாய்ப்புள்ளதா?

Advertisment

அரசியலில் சலவை சட்டை கசங்காமல் அமோக சாகுபடி கண்டபிறகு, எதற்கு வயலில் இறங்கி, சேற்றில் கால் புதைய வேண்டும், கை நனைய வேண்டும்?

கார்த்திகா வினோத், துவரிமான் -மதுரை

யார் இந்த மோசடி மன்னன் சுகேஷ். தேடிப் போய் ஏமாறும் ஜாக்குலின் போன்ற அழகிய நடிகை கள் திருந்த வாய்ப் பில்லையா?

திடீர் புகழ், பணம் இவற்றின் மீது நாட்டம் கொண்ட மனது, அதேபோல புகழும் பணமும் அடைந்தவர்களை நாடுவது இயல்பு. வாழ்வது கொஞ்ச காலம் அதை வளமாக வாழ்ந்துவிட்டுப் போவோம் என்று நினைப்பவர்கள் நிறைய பேர் இருக் கிறார்கள். வாழ்க்கை யை அனுபவிக்க நினைக்கும் அத்தகை யவர்களுக்கு சுகேஷ்கள் கிடைக்கிறார்கள். ஆரம்பத் தில் நன்றாக இருக்கலாம்... அப்புறம்தான், அந்த அனுபவம் என்ன என்பது புரிகிறது. வில்லத்தனத்தில் ஹீரோயிசத்தைக் காணும் ஹீரோயின்கள் கறுப்பு-வெள்ளை காலம் முதல், டிஜிட்

புவனாப்ரியன் கிருபளானி, எம்.ஜி.நகர் -சென்னை

விவசாயி எடப்பாடி பழனிச்சாமி இனி வயலில் இறங்கி விவசாயம் பார்க்க வாய்ப்புள்ளதா?

Advertisment

அரசியலில் சலவை சட்டை கசங்காமல் அமோக சாகுபடி கண்டபிறகு, எதற்கு வயலில் இறங்கி, சேற்றில் கால் புதைய வேண்டும், கை நனைய வேண்டும்?

கார்த்திகா வினோத், துவரிமான் -மதுரை

யார் இந்த மோசடி மன்னன் சுகேஷ். தேடிப் போய் ஏமாறும் ஜாக்குலின் போன்ற அழகிய நடிகை கள் திருந்த வாய்ப் பில்லையா?

திடீர் புகழ், பணம் இவற்றின் மீது நாட்டம் கொண்ட மனது, அதேபோல புகழும் பணமும் அடைந்தவர்களை நாடுவது இயல்பு. வாழ்வது கொஞ்ச காலம் அதை வளமாக வாழ்ந்துவிட்டுப் போவோம் என்று நினைப்பவர்கள் நிறைய பேர் இருக் கிறார்கள். வாழ்க்கை யை அனுபவிக்க நினைக்கும் அத்தகை யவர்களுக்கு சுகேஷ்கள் கிடைக்கிறார்கள். ஆரம்பத் தில் நன்றாக இருக்கலாம்... அப்புறம்தான், அந்த அனுபவம் என்ன என்பது புரிகிறது. வில்லத்தனத்தில் ஹீரோயிசத்தைக் காணும் ஹீரோயின்கள் கறுப்பு-வெள்ளை காலம் முதல், டிஜிட்டல் யுகம் வரை தொடர்கிறார்கள்.

மஞ்சுளா சிவலிங்கம், முகப்பேர்

Advertisment

இந்திய கடல் எல்லையை ஒட்டி யுவான் வாங் 5 சீனக் கப்பல் வந்ததும் திரும்பியதும் எதற்காக?

சீனாவின் கடல் எல் லையை ஒட்டிய தைவான் நீரிணைப்பில் அமெரிக்கப் படையின் சாகசங்கள் எதற்காக நடந்தன வோ, அதுபோலத் தான் இந்தியக் கடல் எல்லையை ஒட்டி, இலங்கைப் பகுதியில் சீனா வின் யுவான் வாங் கப்பல் பயணித்தது. தனது வலிமையைக் காட்டி, இன் னொரு நாட்டை அச்சுறுத்துவது வல்லரசுகளின் வழக்கம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் போர் நடந்த போது, அமெரிக்காவின் கடற்படை இந்தியப் பெருங் கடலில் பயணிக்கத் தொடங்கியது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக, இந்தியாவை எதிர்த்து அமெரிக்க கப்பல் வருகிறது என்ற அச்சம் பரவியது. அந்த நேரத்தில், சோவியத் யூனியனின் (ரஷ்யா) கடற்படையும் அதே கடல்பகுதியில் பயணிக்கத் தொடங்கியது. அதை அறிந்ததும், அமெரிக்க கடற்படைக் கப்பல் திரும்பிச் சென்றது. இந்தியா -பாகிஸ்தான் போர் உலகப் போராக மாறிவிடுமோ என்ற பதற்றம் தணிந்தது. பாகிஸ்தான் பணிந்தது. இந்தியாவின் உதவியுடன் பங்களாதேஷ் என்ற புதிய நாடு பிறந்தது. இவையெல்லாம் காலம் காலமாகத் தொடரும் ராஜதந்திரங்கள்.

சுந்து, சுவர்க்கபுரி இமாச்சலப் பிரதேசம்

தமிழக அரசு அபகரிப்பு நிலங்களை மீட்பதும், போலி நில பத்திரப்பதிவு தடுப்பு சட்டமும் எவ்வகையில் நன்மை அளிக்கும்?

இந்தியாவில் நிலங்கள் யாருக்கு உரிமையுடையவை என்பது பாரம்பரிய அடிப்படையில் வரையறுக்கப்பட்டு சோழப் பேரரசு, மௌரியப் பேரரசு போன்றவற்றின் நிர்வாகத்தில் அவை அளவிடப்பட்டு, பின்னர் மொகலாயர் ஆட்சிக் காலத்திலும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் முறைப்படுத்தப் பட்டன. தனித்தனி சமஸ்தானங்களாக இருந்த பகுதிகளில் அங்கிருந்த மன்னர்களின் ஆளுகையில் நிலங்கள் இருந்தன. சுதந்திர இந்தியாவில் நில அளவீடுகளுக்கும், பதிவுகளுக்கும் பத்திரப்பதிவுத் துறை வலிமைப்படுத்தப் பட்டது. தமிழ்நாட்டிலும் அந்தத் துறை தன் பணிகளை மேற்கொண்டது. ஆட்சியாளர்களின் செல்வாக்கு பெற்றவர்களும் அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டவர்களும் பாரம்பரிய நிலங்கள் பலவற்றைத் தங்கள் வசமாக்கி போலியாகப் பத்திரப் பதிவு செய்வது தொடர்ந்தது. ஆன்லைன் முறை வந்தபிறகு, ஓரளவு வெளிப்படைத்தன்மை ஏற்பட்டாலும் நிர்வாகக் குளறுபடிகளைப் பயன்படுத்தி, போலிப் பதிவுகள் தொடர்ந்தபடிதான் இருந்தன. இதில் கோயில் நிலங்கள், அனாதீன நிலங்கள், அடுத்தவரின் நிலங்கள் எனப் பலவும் மோசடிக்குள்ளாயின. காமராஜர் ஆட்சிக்காலத்தில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்கிற நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் ஓரளவு நிலம் மீட்கப்பட்டு, ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப் பட்டாலும், அப்போதும், வரம்புக்கு மீறிய நிலங்களை பினாமிகள் பெயரில் பங்கிட்டு, பதிவு செய்து தப்பிக்கப் பார்த்தனர். சட்டங்கள் காலந்தோறும் உருவாக்கப்படுகின்றன. அதில் உள்ள ஓட்டைகளில் புகுந்து பெருச்சாளிகள் தப்பித்துக்கொண்டேயிருக்கின்றன.

நித்திலா, தேவதானப்பட்டி

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் பா.ஜ.க. அரசின் நடவடிக்கைக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்புகிறதே?

மோடி முதல்வ ராக இருந்த குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடந்த கல வரத்தின்போது முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கூட்டுப் பாலியல் கொடூரத்திற்குள்ளான பில்கிஸ் பானு கடுமையான சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக 11 பேர் தண்டிக்கப்பட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் சிறைத்தண்டனை விதிக் கப்பட்டது. ஆனால், அவர் களை முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது குஜராத் பா.ஜ.க. அரசு. கொடூரக் குற்றவாளிகளை விடுதலை செய்து, மத வெறியை வெளிப் படையாகக் காட்டி, நீதியைக் குழி தோண்டிப் புதைத்துள்ளது குஜராத் அரசு.

dd

உமா சுரேஷ், டொரொண்டோ -கனடா

புத்தரின் மரணம் கொலை என்ற பேச்சு உள்ளதே உண்மையா?

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் போலத்தான் காலம்காலமாக பல மரணங்கள் மர்ம முடிச்சு முழுமையாக அவிழாமல் இருக்கின்றன.

nkn030922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe