Advertisment

மாவலி பதில்கள்

dd

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

சமீபத்தில் பார்த்து ரசித்த திரைப்படம்?

ஜெய்ஹிந்த் 2.0 சுதந்திர நாளில் மோடி அரசு ரிலீஸ் செய்த புத்தம் புதிய பாலியஸ்டர் பிரிண்ட்.

Advertisment

dd

வாசுதேவன், பெங்களூரு

30 ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய வானொலியில் செய்திகள் வாசித்த சரோஜ் நாராயண சாமியின் மரணம்?

Advertisment

அகில இந்திய வானொலியில் டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகும் செய்திகள், மாநில ஒலிபரப்பு செயதிகள் என இரண்டு வகை உண்டு. அதில், மாநிலச் செய்திகள் ‘ஆல் இண்டியா ரேடியோ’ என ஆங்கிலத் தில் தொடங்கும். டெல்லியிலிருந்து அஞ்ச லான செய்திகள், ஆகாஷ்வாணி என்கிற வடமொழி வார்த்தையுடன் தொடங்கும். அந்த தமிழ்ச் செய்தி அறிக்கையில், சரோஜ் நாராயண்சாமியின் குரல் என்றால் வெகு சாதாரணமான அரசின் அறிவிப்பு சார்ந்த செய்திகள்கூட மனதில் கச்சிதமாகப் பதிந்துவிடும். ஒவ்வொரு சொல்லிலும் அத்த

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

சமீபத்தில் பார்த்து ரசித்த திரைப்படம்?

ஜெய்ஹிந்த் 2.0 சுதந்திர நாளில் மோடி அரசு ரிலீஸ் செய்த புத்தம் புதிய பாலியஸ்டர் பிரிண்ட்.

Advertisment

dd

வாசுதேவன், பெங்களூரு

30 ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய வானொலியில் செய்திகள் வாசித்த சரோஜ் நாராயண சாமியின் மரணம்?

Advertisment

அகில இந்திய வானொலியில் டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகும் செய்திகள், மாநில ஒலிபரப்பு செயதிகள் என இரண்டு வகை உண்டு. அதில், மாநிலச் செய்திகள் ‘ஆல் இண்டியா ரேடியோ’ என ஆங்கிலத் தில் தொடங்கும். டெல்லியிலிருந்து அஞ்ச லான செய்திகள், ஆகாஷ்வாணி என்கிற வடமொழி வார்த்தையுடன் தொடங்கும். அந்த தமிழ்ச் செய்தி அறிக்கையில், சரோஜ் நாராயண்சாமியின் குரல் என்றால் வெகு சாதாரணமான அரசின் அறிவிப்பு சார்ந்த செய்திகள்கூட மனதில் கச்சிதமாகப் பதிந்துவிடும். ஒவ்வொரு சொல்லிலும் அத்தகைய உயிர்ப்புடன் செய்தி யை வாசித்தவர். 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று காலையில் பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்ட பிறகு, அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றது பற்றி செய்தி அறிக்கைதான் மாலை வரை திரும்பத் திரும்ப ஒலிபரப்பானது. வெளிநாட்டுப் பயணத்தி லிருந்த அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில்சிங், தாயகம் திரும்பிய பிறகு, அவரது ஒப்புதல் கையெழுத்துடன், பிரதமர் இந்திராவின் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எப்படியாவது இந்திரா அம்மையார் பிழைத்துக்கொள்ள மாட்டாரா என காலையிலிருந்து பரிதவித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி யடையும் வகையில், பிரதமரின் மரணச் செய்தியை அறிவித்தவர் சரோஜ் நாராயண்சாமி. இறந்த வரைப் பற்றிய உயிரோட்டமான அவரது உச்சரிப்பு, செய்தி அறிக்கையைக் கேட்டவர்களின் கண்களை ஈரமாக்கி, பிரதமருக்கு எளிய மனிதர்களையும் அஞ்சலி செலுத்த வைத்தது. பாமர மக்களுக்கான செய்தி ஊடகமாக வானொலி மட்டுமே இருந்த காலத்தில் ஊராட்சி மன்றங் களிலும், தேநீர்க் கடைகளிலும் கூடி நின்று மக்கள் கேட்ட குரல், சரோஜ் நாராயண்சாமியினுடை யது.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

குஜராத் போதை பொருட்களின் சுரங்கமாக மாறியது எப்படி?

காந்தி பிறந்த மாநிலம் என்ப தால் குஜராத் தில் மட்டும் மதுவிலக்கு தொடர்ந்து நீடிக்கிறது. சட்டத்தின்படி மதுவிலக்கு என்றாலும், நடை முறையில் வீட்டுக்கு வீடு குவார்ட்டர் பாட்டில் டோர் டெலிவரி செய்யப்படும் நிலையில்தான் அங்கே மதுவிலக்கு சட்டத்தின் லட்சணம் உள்ளது. அத்துடன், கள்ளச்சாராயத்திற்கும் பஞ்சமில்லை. காந்தி பிறந்த போர்பந்தரிலேயே 30 ஆண்டுகளுக்கு முன் குழாய் மூலம் சாராயம் சப்ளை செய்த சாதனை வரலாறு குஜராத்துக்கு உண்டு. அண்மையில் 40க்கும் அதிகமானவர்கள் குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சாராயத்தால் மரணமடைந்தார்கள். இவை உள்ளூர் போதை நிலவரம். இயற்கையாகவே கடற்கரையும் துறைமுகங்களும் கொண்ட குஜராத்தில் இப்போது அவை அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. உள்ளூர் சரக்கைத் தாண்டி, வெளிநாட்டு கொக்கேய்ன் போன்றவை கப்பலில் கன்டெய்னர் கன்டெய்னராக வந்தபடி இருக்கின்றன. ஒரே நாடு.. ஒரே போதை என்கிற நிலைமைக்கு கொண்டு போய்க் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசு.

தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45

கல்விக்கும், மருத்துவத்திற்கும் கட்டண நிர்ணயம் சட்டத்தில் கொண்டுவர முடியாதா?

இரண்டுக்கும் சட்டப்படி கட்டணம் உண்டு. தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் சட்டத்தின் சந்து பொந்துகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஓட்டைகளும் உண்டு. கட்டணமே இல்லாமல் படிப்பதற்கும், சிகிச்சை பெறுவதற்கும் அரசாங்கப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உண்டு. நம் கண்கள் அதனைக் கண்டும் காணாமல் செல்வதும் உண்டு.

dd

ப.தினேஷ்குமார், சின்னசேலம்.

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆத்திகரா நாத்திகரா?

"நீங்கள் கோவில்களுக்குச் செல்வதில்லையா?' என்று நேருவிடம் கேட்டபோது, "இந்த நாட்டின் வளர்ச்சிக்காக அமைக்கப்படும் ஹிராகுட், பக்ராநங்கல் போன்ற அணைகள்தான் எனக்கு கோவில்கள்' என்று பதில் தந்தார் பிரதமர் நேரு.

மஞ்சுளா சிவலிங்கம், முகப்பேர்

தமிழக பா.ஜ.க.வில் சினிமா நடிகைகள் ஜொலிப்பதில்லையே ஏன்?

மார்க்கெட் உதிர்ந்த நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு எப்படி ஜொலிக்க முடியும்? சினிமாவில் மார்க்கெட் இழந்தவர்கள் எல்லாம் ஜெயலலிதா போல அரசியலில் ஜொலிக்க முடியுமா? அல்லது அ.தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர். என்ற மக்களைக் கவர்ந்த தலைவரைப் போல, தமிழக பா.ஜ.க.வில் யாராவது இருக்கிறார்களா, மார்க்கெட் போன நடிகைகளை ஜொலிக்க வைக்க!

nkn240822
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe