நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
மோடி பிரதமராக கிடைத்தது நாம் செய்த அதிர்ஷ்டம் என நிர்மலா சீதாராமன். பேசி இருப்பது பற்றி?
நம்ம அதிர்ஷ்டமா.. நம்மவாளுக்கு அதிர்ஷ்டமா?
பி.மணி, வெள்ளக்கோவில்
இந்தியாவை நல்வழிப் பாதைக்கு அழைத்துச் செல்வாரா புதியதாக பதவியேற்றிருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு?
இந்தியா நல்வழிப் பாதையில் தான் இருக்கிறது. திரௌபதி முர்முவை நாங்கள்தான் ஜனாதிபதியாக்கினோம் என்று உரிமை கொண்டாடும் கட்சி யினர்தான் இந்தியாவில் உள்ள நல் வழிப் பாதைகளின் குறுக்கே நின்று தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மத நல்லிணக்கம் என்ற நல்வழிப் பாதை மதவெறி அரசியலால் தடுக்கப்படுகிறது. பன்முகப் பண்பாடு ஒற்றைக் கலாச் சாரத்தால் தடுக்கப்படுகிறது. பல மொழிகள் பேசும் மண்ணில் ஒரு மொழியைத் திணிப்பதால் தடுக்கப்படு கிறது. தாய்மொழியில் கல்வி தரும் தேசியக் கல்விக் கொள்கை என்பதுகூட வெறும் வெளிப்பூச்சுதான். செஸ் ஒலிம்பியாட்டைத் தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடி, "வணக்கம் சென்னை
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
மோடி பிரதமராக கிடைத்தது நாம் செய்த அதிர்ஷ்டம் என நிர்மலா சீதாராமன். பேசி இருப்பது பற்றி?
நம்ம அதிர்ஷ்டமா.. நம்மவாளுக்கு அதிர்ஷ்டமா?
பி.மணி, வெள்ளக்கோவில்
இந்தியாவை நல்வழிப் பாதைக்கு அழைத்துச் செல்வாரா புதியதாக பதவியேற்றிருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு?
இந்தியா நல்வழிப் பாதையில் தான் இருக்கிறது. திரௌபதி முர்முவை நாங்கள்தான் ஜனாதிபதியாக்கினோம் என்று உரிமை கொண்டாடும் கட்சி யினர்தான் இந்தியாவில் உள்ள நல் வழிப் பாதைகளின் குறுக்கே நின்று தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மத நல்லிணக்கம் என்ற நல்வழிப் பாதை மதவெறி அரசியலால் தடுக்கப்படுகிறது. பன்முகப் பண்பாடு ஒற்றைக் கலாச் சாரத்தால் தடுக்கப்படுகிறது. பல மொழிகள் பேசும் மண்ணில் ஒரு மொழியைத் திணிப்பதால் தடுக்கப்படு கிறது. தாய்மொழியில் கல்வி தரும் தேசியக் கல்விக் கொள்கை என்பதுகூட வெறும் வெளிப்பூச்சுதான். செஸ் ஒலிம்பியாட்டைத் தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடி, "வணக்கம் சென்னை' என்று தமிழில் சொல்கிறார். அவர் அமைச்சரவையில் இணை யமைச்சராக உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் ‘"ஜெய் ஹிந்த்.. ஜெய் பாரத்'’ என்று அடித் தொண்டை யிலிருந்து குரல் கொடுக்கிறார். "பூ... புஷ்பம்' என்பதுபோல இரண்டும் ஒன்றுதான். அதன் அர்த்தம்கூடத் தெரியாமல் பா.ஜ.க ஊட்டிய மதவெறியுடன் இந்தியில் முழங்குகிறார். "வாழ்க இந்தியா! வாழ்க பாரதம்!' என்று சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளுமா என்ன?
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
உ.பி.யில் 6 வயது சிறுமி, மோடிக்கு பென்சில் ரப்பர், நூடுல்ஸ் விலைவாசி ஏறியதை கடிதம் மூலம் தெளிவு படுத்தியது பற்றி?
ஒன்றிய அரசும் பா.ஜ.க., உத்தரபிரதேச மாநில அரசும் பா.ஜ.க.தான். அதனால் உத்தரபிரதேச மாநிலத்தை "இரட்டை இன்ஜின் அரசு' என்று மோடியும்-யோகியும் பெருமையாகச் சொல்லிக் கொள்வது வழக்கம். பா.ஜ.க.வினரும் அதை வழி மொழிவார்கள். டபுள் இன்ஜின் ஆட்சியில் ஒரு சிறுமியின் மனது எத்தனை பெரிய உண்மையை கடிதம் மூலம் தெரிவித் திருக்கிறது! இந்தியப் பிரதமர்களிலேயே மோடியைப் போல உண்டா என்கிற பா.ஜ.க.வினருக்கு அந்தக் கடிதம் சமர்ப்பணம்.
நித்திலா, தேவதானப்பட்டி
எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரை மிஸ் பண்ணுகிறதா "பொன்னியின் செல்வன்' பட வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் இன்றைய தலைமுறை?
எம்.ஜி.ஆர். தயாரித்து -இயக்கி இரட்டை வேடங்களில் நடித்த மெகா ஹிட் படம் "நாடோடி மன்னன்'. அந்தப் படத்திற்குப் பிறகு திரையுலகில் அவர் மன்னனாகத் திகழ்ந்தார். கல்கியின் "பொன்னி யின் செல்வன்' சரித்திரக் கதையை தனது தயாரிப்பு -இயக்கத்தில் படமாக எடுக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். ஆசைப்பட்டார். அந்த ஆசை நிறைவேறவில்லை. "பொன்னியின் செல்வன்' என்ற பெயர் ராஜராஜசோழனைக் குறிக்கும் பெயர். அந்த ராஜராஜ சோழன் பற்றிய வரலாற்றுத் திரைப்படத்தில் கம்பீரமாக நடித்தவர் சிவாஜி. தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம். போர்க்காட்சிகள், தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டும் காட்சிகள் எல்லாம் அப்போதே பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும். பாடல்களும் அருமையானவை. ஆனால், அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தில் "பாகு பலி' பாணியில் "பொன்னியின் செல்வன்' படத்தை இரண்டு பாகங் களாக எடுக்கிறார் மணிரத்னம். இந்தத் தொழில்நுட்பம் அன் றைக்கே அமைந்திருந்து பொன்னியின் செல்வனாக சிவாஜியும், வந்தியத்தேவனாக எம்.ஜி.ஆரும் நடித்திருந்தால், ஒருவேளை எம்.ஜி.ஆரே, தான் விரும்பியதுபோல தயாரித்து இயக்கியிருந்தால் தமிழ்த் திரையுலகின் போக்குகூட மாறியிருக்கலாம். நடக்காமல் போனதைப் பற்றி இருவரும் இல்லாத காலத்தில் யோசிப்பது பயன் தராது. பரபரப்பான படப்பிடிப்புகளுக் கிடையே பிஸியான ஸ்டார்களாக அவர்கள் இருவரும் இருந்தபோதும், அரசியல் களத்திலும் ஈடுபட்டிருந்த போதும் குடும்பத்திற்கென நேரம் ஒதுக்கி, இனிமையாக வாழ்ந்திருப் பதை ஜானகியம்மையாருடன் எம்.ஜி.ஆரும், கமலா அம்மாளுடன் சிவாஜியும் இருக்கின்ற இந்தப் படங்கள் காட்டுகின்றன.
எம். நிர்மலா, -புதுச்சேரி
அரசு ஊழியர்களின் மூக்கை சொறிந்துவிட்டிருக்கிறாரே நிதி யமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்?
அரசு ஊழியர்கள் எதிர்பார்க் கின்ற பலன்கள் யாவும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள்தான். அரசாங்க கஜானாவின் நிலை என்ன என்பது அமைச்சருக்கும் தெரியும். அரசு ஊழி யர்களுக்கும் தெரியும். ஆனாலும், தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள். நிறைவேற்ற முடியாவிட்டால் கொஞ்சம் அமைதியாக இருக்கலாம் அமைச்சர். அரசு ஊழியர்கள் தற்போது வாங்கும் ஊதியம் மற்றும் சலுகைகளைக் குறிப்பிட்டுப் பேசும்போது, மூக்கை சொறிந்த கதையாகிவிடுகிறது.
மு.முஹம்மதுரபீக், விழுப்புரம்
"மோடி பக்தர்கள் இயல்பிலேயே படிப்பறிவு இல்லாதவர்கள் அல்லது போலி கல்வி சான்றிதழ்கள் கொண் டவர்கள்'' என்கிறாரே சு. சாமி?
சு.சாமியின் வாயை அடைக்க ஒரே வழி, பிரதமர் மோடி தன்னு டைய பட்டப் படிப்புச் சான்றிதழை ஓப்பனாக வெளியிடுவதுதான். பலரும் கேட்டாலும் பட்டத்தை ரகசியமாகவே வைத்திருக்கிறார் பிரதமர்.