பி. மாதவராஜன், கோயம்புத்தூர்

வளமானவர் சசிகலாவா, இ.பி.எஸ்.ஸா சொல்லுங்க?

ஜெயலலிதாவால் வளமானவர் சசிகலா. சசிகலாவால் வளமானவர் இ.பி.எஸ்.

வாசுதேவன், பெங்களூரு

Advertisment

44-வது செஸ் ஒலிம்பியாட் தம்பி பொம்மை?

1982-ல் டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு யானைதான் சின்னம். அந்த யானைக்கு வைக்கப்பட்ட பெயர், அப்பு. இப்போது சென்னையில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னம், குதிரை. அந்தக் குதிரைக் குப் பெயர் தம்பி. தமிழ் நாட்டு அரசியலில் "தம்பி' என்ற உறவுச் சொல்லை உருவாக்கியவர் அண்ணா. திராவிட இயக்கத்தை எதிர்க்கும் சீமான்கள் வரை அந்தத் "தம்பி' என்ற சொல்லைக் கைவிட முடிய வில்லை. செஸ் காய்களில் குதிரை மட்டும்தான் தனக்கு முன்பாக காய் இருந்தாலும் தாவிச் செல்லும் ஆற்றல் கொண்டது. தமிழ்நாடு பல தடைகளைத் தாண்டி முன்னேறிய தம்பிகளைக் கொண்ட மாநிலம். மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம் "ஒரு விஷயத்தை ஊதிப் பெரியதாக்கும் திறன் புதிதாக உருவான ஊடகங்களுக்கு உள்ளது. ஆனால், எது சரி, எது தவறு, எது நல்லது, எது கேட்டது, எது உண்மை, எது பொய் என பிரித்துப் பார்க்கும் திறன் அவர்களிடம் இல்லா மல் இருப்பது போல தோன்றுகிறது'' என்கிறாரே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி? அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்த காலத்தில் ஒரு விவகாரத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தின் புலனாய்வுச் செய்திகள் வெளியாகும். களத்திற்கு நேரடியாகச் சென்று, விளைவுகளை எதிர்கொண்டு உண்மையைக் கொண்டு வரும் துணிவு பேனா பிடித்தவர்களுக்கு உண்டு. அப்போது, பத்திரிகை அலுவலக மேஜையில் உட்கார்ந்து தங்கள் கருத்து மழைகளைப் பொழிந்த சோ ஸ்ரீஹப்ப்ங்க் ஜர்னலிஸ்ட்டுகள் வயிற்றெரிச்சல் தாங்காமல், புலனாய்வு இதழ்களை மஞ்சள் பத்திரிகைகள் என்று சொன்னார்கள். காட்சி ஊடகங்கள் வந்த பிறகு, களத்திற்கு நேரடியாகச் சென் றாலும் புலனாய்வுகள் செய்வது குறைந்துவிட்டது. அவரிடம் கொஞ்ச நேரம் மைக்கை நீட்டுவது, இவரிடம் கொஞ்ச நேரம் மைக்கை நீட்டுவது, இரண்டையும் ஒளிபரப்புவது, அதன்பிறகு ஸ்டுடியோவுக்குள் விவாதம் நடத்துவது, அதையே தீர்ப்பு போல முன்னிறுத்துவது என்ற அளவில் செய்தியின் தன்மை மாறிவிட்டது. இந்தியா முழுவதும் இதுதான் நிலைமை என்பதை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, அப்பல் லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டதிலிருந்து சாதா நியூஸ்களே கிடையாது. எல்லாமும் பிரேக்கிங் நியூஸ்கள்தான். ஆனால், ஜெயலலிதாவுக் கான சிகிச்சை தொடங்கி கள்ளக்குறிச்சி விவகாரம் வரை முழு உண்மையைத் தேடிப் பயணிக்க காட்சி ஊடகங்களால் முடியவில்லை. புலனாய்வு இதழான நக்கீரன் போன்ற அச்சு ஊடகங்கள்தான் இப்போதும் உண்மையின் பக்கம் நிற்கின்றன.

ச.இராமதாசு சடையாண்டி, வானூர் -விழுப்புரம்

Advertisment

தமிழ்நாடு முழுவதும் 10,031 பள்ளிகள் ஆபத்தான கட்டிடங்களாக கண்டறியப்பட்டுள்ள தாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளாரே?

அரசுப் பள்ளிகளில் கட்டடங்கள் ஆபத்தாக இருக்கின்றன. தனியார் பள்ளிகளில் நிர்வாகமே ஆபத்தானதாக இருக்கிறது. கல்வியில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டுக்கு இது மிகப் பெரிய சவால். அமைச்சரும், அவருடைய அரசும் உடனடியாக கவனிக்க வேண்டும்.

டாக்டர் இரா.அருண்குமார், வாணரப்பேட்டை -புதுச்சேரி

"மொழி அரசியல் செய்யும் பலரின் பெயர்கூட தமிழில் இல்லை'’என்று ஆளுநர் தமிழிசை விமர்சித்திருப்பது பற்றி?

ராமசாமி என்ற பெயர் கொண்டவர் பெரியார். அது சாமியின் பெயர். அந்தப் பெயரும் தமிழ் இல்லை. இந்துக் கடவுள்கள் பலவற்றின் பெயரும் தமிழ் கிடையாது. தமிழ்ப் பெயர் கொண்டுள்ள ஆளுநர் இந்துத்வாவுக்காக கொடி பிடிக்கிறார். இந்துக் கடவுளின் சமஸ்கிருதப் பெயர்களைக் கொண்ட வர்கள் தமிழுக்காகப் பாடுபட்டு வருகிறார்கள். அவ்வளவுதான் அரசியல்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

"மெரினா கடலுக்கு நடுவே ரூ 80 கோடி யில் 134 அடி உயர கலைஞர் கருணாநிதியின் பேனா வடிவம் வடி வமைக்கப்படும்' என்ற அரசின் முடிவை அது பேனாவா?!... நாதஸ்வரமா..!? என்று கிண்டல் செய்தவர்கள் பற்றி?

தன்னை மலிவாக விமர்சனம் செய்தவர்களை அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஊதித் தள்ளியதுதான் கலைஞரின் பேனா. கேடுகெட்டவர்களின் விமர்சனங்கள் தொடர்ந்தாலும், அந்தப் பேனா கையெழுத்திட்டு நிறைவேற்றிய திட்டங்களால்தான் தமிழ்நாடு பல துறைகளிலும் முன்னேறியிருக்கிறது. கலைஞரின் பேனா, நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய உளி.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

"சுதந்திர தினத்தன்று எல்லோர் வீட்டிலும் கொடி ஏற்ற வேண்டும்' என மோடி கூறி இருப்பது பற்றி?

மோடியின் தாய் வீடான ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இதுவரை எத்தனை முறை தேசியக் கொடி ஏற்றியிருக்கிறார்கள் என்பதையும் பிரதமர் நினைவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

mm

சி.கார்த்திகேயன், சாத்தூர்

கமல்ஹாசன், விக்ரம், பிரகாஷ்ராஜ், தனுஷ் வரிசையில் சூர்யா இடம் பெற்றுள்ளது பற்றி?

சிறந்த நடிகர் வரிசையில் இடம்பெற்ற சூரரைப் போற்று.