Advertisment

மாவலி பதில்கள்

mavali-answers

ஃபிலோமினா பிரபாகரன், காரைக்கால்

நிழலோட அருமை வெயில்ல போனாத்தான் தெரியும், இதற்கு அரசியல் கருத்து என்ன?

மன்மோகன் சிங் அரசின் மீதான வெறுப்பினால் நரேந்திர மோடிக்கு வாக்களித்த இந்திய மக்கள்.

Advertisment

எஸ்.பூவேந்தஅரசு, பொன்நகர், சின்னதாராபுரம்

"மனமறிந்து தவறு செய்வோர் மாளிகையில் இல்லையோ... புது மலர்களுக்கு ஆளனுப்பும் மன்னவர்கள் இல்லையோ' என்று கவியரசு கண்ணதாசன் அன்று பாடியது இன்றும் மெய்யாகிக்கொண்டிருக்கிறதே?

Advertisment

அனுபவ உணர்வுகளை பாடல்களாக்குவதில் கவியரசர் வல்லவர். அது தொலைநோக்குப் பார்வையுடனும் அமைந்திருக்கும். மன்னவர்கள் என்பதை "வேந்தர்கள்' என்றும் சொல்லலாம். மாளிகை என்பதை வடமொழியில் "பவன்' என்கிறார்கள். எத்தனை தீர்க்கதரிசனமான வரிகள்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

இரட்டைக் குழல் துப்பாக்கி என அ.தி.மு.க-பா.ஜ.க. உறவு பற்றி கட்சிப் பத்திரிகையில் கட்டுரை எழுதியவர்களை பணிநீக்கம் செய்துவிட்டார்களே?

ஃபிலோமினா பிரபாகரன், காரைக்கால்

நிழலோட அருமை வெயில்ல போனாத்தான் தெரியும், இதற்கு அரசியல் கருத்து என்ன?

மன்மோகன் சிங் அரசின் மீதான வெறுப்பினால் நரேந்திர மோடிக்கு வாக்களித்த இந்திய மக்கள்.

Advertisment

எஸ்.பூவேந்தஅரசு, பொன்நகர், சின்னதாராபுரம்

"மனமறிந்து தவறு செய்வோர் மாளிகையில் இல்லையோ... புது மலர்களுக்கு ஆளனுப்பும் மன்னவர்கள் இல்லையோ' என்று கவியரசு கண்ணதாசன் அன்று பாடியது இன்றும் மெய்யாகிக்கொண்டிருக்கிறதே?

Advertisment

அனுபவ உணர்வுகளை பாடல்களாக்குவதில் கவியரசர் வல்லவர். அது தொலைநோக்குப் பார்வையுடனும் அமைந்திருக்கும். மன்னவர்கள் என்பதை "வேந்தர்கள்' என்றும் சொல்லலாம். மாளிகை என்பதை வடமொழியில் "பவன்' என்கிறார்கள். எத்தனை தீர்க்கதரிசனமான வரிகள்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

இரட்டைக் குழல் துப்பாக்கி என அ.தி.மு.க-பா.ஜ.க. உறவு பற்றி கட்சிப் பத்திரிகையில் கட்டுரை எழுதியவர்களை பணிநீக்கம் செய்துவிட்டார்களே?

உண்மைகளைச் சொல்ல வேண்டும் என்பது பத்திரிகை தர்மம். உண்மைகளை எப்போது சொல்ல வேண்டும் என்பது அரசியல் கட்சி சார்ந்த தர்மம். கட்சிப் பத்திரிகையாளர்கள் அவசரப்பட்டுவிட்டார்கள். தண்டனை அனுபவிக்கிறார்கள்.

south-north-korea-president

தூயா, நெய்வேலி

வடகொரிய அதிபர் "உன்'னும் தென்கொரிய அதிபர் "இன்'னும் கை குலுக்கியிருக்கிறார்களே... ஆசிய கண்டத்தில் அமைதி நிலவுமா?

தன் கை ஓங்கி இருக்கும் நிலையில், எதிரியுடன் சமாதானம் பேசினால்தான் அரசியல் ரீதியாக பலன் தரும். அணுஆயுதச் சோதனைகள் மூலம் அமெரிக்காவையே பதற வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், 60 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, தென்கொரிய அதிபர் மோன் ஜே இன்னுடன் கை குலுக்கியிருக்கிறார். இருநாடுகளுக்குமான எல்லையில் நின்று, இடதுகாலை எடுத்து வைத்து தென்கொரியாவுக்குள் நுழைந்த வடகொரிய அதிபர், பின்னர் தென் கொரிய அதிபரை தன் நாட்டுக்குள் கால் வைக்கச் செய்து நட்புறவை நிலை நாட்டியிருக்கிறார். இரு நாடுகளுக்கிடையிலான பதற்றத்தை தணித்து, பொருளாதார மேம்பாடுகளை உருவாக்குவது உள்ளிட்ட பல நல்ல அம்சங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பில் நிகழ்ந்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதனை வரவேற்றுள்ளன. இந்தச் சூழலில் வட-தென் கொரிய நாடுகள் கவனமாக இருக்க வேண்டும். சோவியத் யூனியனுடனான பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக சமாதானம் பேசிய அமெரிக்கா, தன் கைங்கர்யத்தால் சோவியத் யூனியனை சிதறடித்த வரலாற்றுச் சுவடுகளும் இன்னும் மறையவில்லை.

விசுவநாதன், செந்துறை

தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் திறப்பது தார்மீகத் தவறு என்றும் அதனைத் தடுக்க சட்டம் எதுவுமில்லை என்றும் ஜெ. படம் பற்றி உயர்நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளதே?

ஜெ. உயிருடன் இருந்தபோது டான்சி வழக்கு, ஜெ. இறந்தபிறகு படத்திறப்பு வழக்கு. எல்லா காலத்திலும் நன்னடத்தை -தார்மீகம் இதையெல்லாம் காலில் மிதித்துவிட்டு சட்டத்தின் சந்துகளில் நுழைந்து தப்பிப்பது தொடர்கிறது.

----------------------------------------------------

ஆன்மிக அரசியல்

ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்

mavalianswers

"சட்ட மாமேதை' டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு பவுத்த மதத்திற்கு மாற ஆன்மிக அரசியல்தான் காரணமா?

"இந்துவாகப் பிறந்தேன்... ஆனால் இந்துவாக சாகமாட்டேன்' என சட்டமேதை அம்பேத்கர் சொன்னதுடன், 1956-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள் அவரும் அவருடன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மகர் மக்களும் பெருந்திரளாக பவுத்த மதத்திற்கு மாறுவதற்குக் காரணமாக அமைந்தது ஆன்மிக அரசியலையும் உள்ளடக்கிய வருணாசிரம ஒடுக்குமுறைதான். 1935ஆம் ஆண்டிலேயே, இன்றைய குஜராத் மாநிலத்தில் கவிதா என்ற கிராமத்தின் பள்ளிக்கூடத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் பிள்ளைகள் படிப்பதற்கு அனுமதிக்காத ஆதிக்க சாதியினர், தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கவேண்டும் எனக் கோரிய பெற்றோருக்கு எதிராகவும் செயல்பட்டனர். இதனை அறிந்த அம்பேத்கர், ‘"நாம் வேறொரு மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் இவர்களால் நம்மை தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கியிருக்க முடியுமா? அதனால் சம அந்தஸ்தும் சம மரியாதையும் அளிக்கும் எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்து மாறிவிடுங்கள்' என்றார். எனினும், இஸ்லாம்-கிறிஸ்தவம் போன்ற வெளிநாட்டு மதங்களுக்கு மாற அம்பேத்கர் விரும்பவில்லை. சீக்கிய மதம் இந்தியாவைச் சேர்ந்தது என்றாலும் அதிலும் சாதிப்பிரிவுகள் இருப்பதை அறிந்த அம்பேத்கர், 1940 முதல் புத்த மதத்தின் மீது கவனம் செலுத்தினார். 1954-ல் பர்மாவில் (மியான்மர்) நடந்த உலக புத்த மாநாட்டில் பங்கேற்றார். (இந்த மாநாட்டில் பெரியாரும் கலந்துகொண்டார்). 1956-ல் "புத்தமும் தம்மமும்' என்ற நூலை அம்பேத்கர் எழுதினார். அதே ஆண்டு அக்டோபர் 14-ல் நாக்பூரில் அம்பேத்கரும் அவர் மனைவி சவிதாபாயும் 3 லட்சம் மக்களுடன் புத்த மதத்திற்கு மாறினர். அம்பேத்கர் சொன்னதுபோலவே, தீண்டாமைக் கொடுமை நிறைந்த இந்துவாக பிறந்த அவர், 1956 டிசம்பர் 6-ல் மரணமடைந்தபோது இந்துவாக இல்லை.

mavali answers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe