Advertisment

மாவலி பதில்கள்

m

நித்திலா, தேவதானப்பட்டி

இந்து மதம் பற்றி திராவிட இயக்கத்தினர்-பகுத்தறிவுவாதிகள் விமர்சிக்கவில்லையா? இஸ்லாமிய மதத்தின் இறைத்தூதுவரான நபிகள் நாயகத்தை பா.ஜ.க.வின் நுபுர் சர்மா விமர்சித்தது மட்டும் ஏன் இத்தனை பெரிய இஷ்யூவாகியுள்ளது?

Advertisment

பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அந்தந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் மதக்கோட்பாடுகள் பற்றிய விமர்சனங்களை வைப்பது வழக்கம். அமெரிக்காவின் இங்கர்சால் அந்நாட்டின் கிறிஸ்தவ மதம் பற்றிய விமர்சனங்களை வைத்தவர். தமிழ்நாட்டில் பெரியாரும் அவரது இயக்கத்தினரும் இந்து மதப் புராணங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். எந்த மதத்தில் பிறந்தார்களோ அதை நோக்கி கேள்வி எழுப்புவது சீர்திருத்தத்திற்கான தொடக்கம். பிற மதத்தின் நம்பிக்கைகளை மட்டும் குத்திக் கிளறி விமர்சனம் செய்வது வெறுப்பின் உச்சம். மதவெறி வன்மம். நுபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சு இதில் இரண்டாவது வகை என்ப

நித்திலா, தேவதானப்பட்டி

இந்து மதம் பற்றி திராவிட இயக்கத்தினர்-பகுத்தறிவுவாதிகள் விமர்சிக்கவில்லையா? இஸ்லாமிய மதத்தின் இறைத்தூதுவரான நபிகள் நாயகத்தை பா.ஜ.க.வின் நுபுர் சர்மா விமர்சித்தது மட்டும் ஏன் இத்தனை பெரிய இஷ்யூவாகியுள்ளது?

Advertisment

பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அந்தந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் மதக்கோட்பாடுகள் பற்றிய விமர்சனங்களை வைப்பது வழக்கம். அமெரிக்காவின் இங்கர்சால் அந்நாட்டின் கிறிஸ்தவ மதம் பற்றிய விமர்சனங்களை வைத்தவர். தமிழ்நாட்டில் பெரியாரும் அவரது இயக்கத்தினரும் இந்து மதப் புராணங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். எந்த மதத்தில் பிறந்தார்களோ அதை நோக்கி கேள்வி எழுப்புவது சீர்திருத்தத்திற்கான தொடக்கம். பிற மதத்தின் நம்பிக்கைகளை மட்டும் குத்திக் கிளறி விமர்சனம் செய்வது வெறுப்பின் உச்சம். மதவெறி வன்மம். நுபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சு இதில் இரண்டாவது வகை என்பதாலும், அவர் பொறுப்பு வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி முழுக்க முழுக்க வெறுப்பு அரசியலை நடத்திக்கொண்டிருப்பதாலும்தான் அந்தப் பேச்சு இவ்வளவு பெரிய இஷ்யூ ஆனது.

சாரங்கன், கும்பகோணம்

நுபுர் சர்மா பேசியதற்கு கட்சி சார்பில் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகும் போராட்டம், வழக்கு என்று தொடர்ச்சியான துரத்தல்கள் எந்த வகையில் நியாயம்?

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதுபோலத்தான் நுபுர் சர்மா வெளிப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்த கட்சியின் கொள்கையே இத்தகைய மதவெறி வெறுப்பு அரசியல்தான். அதனால்தான், தங்கள் இறைத்தூதரை விமர்சித்தவர் குறித்து போராட்டம் நடத்தியவர்களின் வீடுகளை புல்டோசரை வைத்து இடித்தது உத்தர பிரதேசத்தில் ஆட்சி செய்யும் யோகி ஆதித்யநாத் தலைமை யிலான பா.ஜ.க. அரசு. முஸ்லிம் மக்கள் மீதும், அரசை விமர்சிப்பவர்கள் மீதும் குறிவைத்து அவர்களின் இருப்பிடங்களை புல்டோச ரால் தகர்ப்பது என்பது உ.பி., அசாம், டெல்லி எனத் தொடர்கிறது. இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், ஜனநாயகத்தின் அடித் தளத்தையும் புல்டோசரைக் கொண்டு நசுக்கும் வேலைக ளை பா.ஜ.க. ஆட்சியாளர்கள் தொடர்ந்து கொண்டிருப்பதால்தான் போராட்டமும் வழக்குகளும் தீவிரமெடுத்தன.

Advertisment

ff

தூயா, நெய்வேலி

நுபுர் சர்மாவின் விமர்சனக் கருத்துகளைப் பரப்பினார் என்று ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கண்ணையா லால் என்ற டெய்லரைக் கழுத்தறுத்துக் கொன்று, அதை வீடியோவாக வெளியிட்ட காட்டுமிராண்டி செயலை ஆதரிக்கிறீர்களா?

மதவெறி எந்தப் பக்கம் இருந்தாலும் அது உடனே கிள்ளி எறி யப்பட வேண்டும். அதுவும், ஓர் உயிரைக் கொல்வதை வீடியோ பதிவாக்கி, அதை வைரலாக்கு வது மனிதத்தன்மை யின் மீது நடத்தப் படும் கொடூரத் தாக்குதல். இதற்கு காரணமானவர்கள், யார் என்பது பற்றி உண்மையான விசாரணையை நடத்தி, உயிரைப் பறித்தவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண் டும். பா.ஜ.க. பிரமுகரின் ஜன நாயகக் கழுத்தறுப் பும், அதற்குப் பதிலடியாக டெய்லர் கழுத்து அறுக்கப்பட்டதும் இந்தியா எந்தத் திசை நோக்கிச் செல்கிறது என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.

சு.வெங்கடேஷ், கோட்டயம்

நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் சூரியகாந்த், பார்த்திவாலா கோடைக்கால அமர்வு கடுமையாக எச்சரித்துள்ளதே?

மதவெறி நெருப்பு எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை ர(த்)த யாத்திரை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இந்தியா அனுபவித்து வருகிறது. அதனை உச்சநீதிமன்றம் உணர்ந்துள்ளதால்தான் நீதிபதிகள், நாங்கள் அந்த விவாதத்தையும், நுபுர் சர்மா எப்படித் தூண்டி விட்டார் என்பதையும் பார்த்தோம். எல்லாவற்றை யும் அவர் சொல்லிவிட்டு, தன்னை ஒரு வக்கீல் எனச் சொன்னது வெட்கக்கேடானது. ஒரு அரசியல் கட்சியின் செய்தி தொடர்பாளர் டெலிவிஷனில் கருத்துகளை வெளியிட்டு, அவற்றால் நாடெங்கும் உணர்ச்சி தீப்பற்றி எரிகிறபோது, அதை ஒரு பத்திரிகையாளரின் சுதந்திரத்திற்கு இணையாகப் பார்க்க முடியாது. நாட்டில் இன்றைக்கு என்ன நடக்கிறது என்பதற்கு இந்தப் பெண் மட்டுமே பொறுப்பு. அவரது கருத்துகள், அவரது பிடிவாதத்தையும், திமிரையும் காட்டுகின்றன என்றனர். நுபுர் சர்மாவின் வக்கீல் என் னென்னவோ சொல்லிப் பார்த்த போதும், அனைத்துமே சேம் சைடு கோல்களாகவே மாறின. உதய் பூர் படுகொ லைக்கு நுபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சுதான் தூண்டு கோல் என்பதைச் சுட்டிக்காட்டி, டி.வி. மூலமாக நுபுர் சர்மா மன்னிப்பு கேட்டிருக்க வேண் டும்” என்று நீதி பதிகள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார்கள். மத வெறியைத் தோலுரித்துக் காட்டிய நீதிபதி களின் கருத்துகளால் அலறிப்போயிருக்கிறது இந்துத்வா கூட்டம். அதனால்தான், இந்த விசாரணையின்போது நுபுர் சர்மா பற்றி தெரிவித்த கருத்துகளை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும் என்று கவ் மகாசபா தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் மனு அளித்தார். நுபுர் சர்மாவும், அவரை வளர்த்து பொறுப்பு அளித்த கட்சியும் பேசிய கருத்துகளை எப்படித் திரும்பப் பெறுவது?

nkn060722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe