த.சத்யநாராயணன், அயன்புரம் -சென்னை

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரில் யார் கில்லாடி?

இவருக்கு அவரும்... அவருக்கு இவரும்.

ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில்

Advertisment

அ.தி.மு.கவில் கட்சித் தலைமை பிரச்சனையால் கட்சி உடையுமானால் அது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம் என்பதை ஓ.பி.எஸ்,மற்றும் இ.பி.எஸ் உணர்வார்களா?

dd

Advertisment

எம்.ஜி.ஆர். தனக்குப் பிறகு இந்தக் கட்சி என்ன ஆகும் என்பது பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ளவில்லை. ஒருவேளை, கட்சி இரண்டாக உடையுமானால் அதற்கான சொத்துகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிட வேண்டும் என்றுதான் உயில் எழுதி வைத்தார். அவர் உயிருடன் இருந்தபோதே ஜெய லலிதா, ஆர்.எம்.வீரப்பன் என்ற இரண்டு அணிகள் கட்சிக்குள் இருந்தன. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஆர்.எம்.வீரப்பன் தனது அணிக்கு ஜானகி அம்மையாரைத் தலைமை தாங்க வைத்து, முதல்வர் ஆக்கிவிட்டார். ஜெயலலிதாவோ "நாவலர் நெடுஞ்செழியனைத்தான் முதல்வராக்க வேண்டும்' என்று சொல்லி, தனி அணியை உருவாக்கி னார். எம்.ஜி.ஆருக்கு ஜானகி அம்மையார் மோரில் விஷம் வைத்துக் கொன்றுவிட்டார் என்று ஜெயலலிதா சொன்னார். தனக்கும் எம்.ஜி. ஆருக்குமான உறவு பற்றி சொல் லும்போது, எம்.ஜி.ஆர் இறந்ததும் உடன்கட்டை ஏற நினைத்தேன் என்றார். எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும்போதே தன்னை முதல்வ ராக்க வேண்டும் என்று பிரதமர் ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதி யவர்தான் ஜெயலலிதா. அ.தி.மு.க. வில் துரோகம் என்பது எம்.ஜி.ஆர் காலத்திலேயே ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு விட்டது. இப்போது எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் சேர்த்து துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ச.இராமதாசு, வானூர் -விழுப்புரம்

பா.ஜ.க. கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின தலைவர் திரௌபதி முர்மு தேர்வு செய்யப் பட்டிருப்பது பற்றி...?

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் இந்தியாவின் உயர்ந்த பொறுப்புக்கு வருவது பெருமைக் குரியது. அவர் கோயில் வளாகத்தைக் கூட்டிப் பெருக்குவது போன்ற படம் வெளியிடப்பட்டிருப்பது, இந்தியாவில் பழங்குடி மக்களின் வாழ்நிலை எப்படி உள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. மனிதர்களை பிறப்பிலேயே சாதிரீதியாக ஒடுக்கிவைக்கும் சனாதன -வருணா சிரம முறைதான் இந்தியாவின் சிறப்பு என்று பேசிக்கொண்டு, பழங்குடி சமுதாயத்தவர் ஜனாதிபதியாகிறார் என்பது வெறும் பூச்சு வேலைதான். சனாதனக் கொள்கைக்கு நேர் எதிரான சமூக நீதிக் கொள்கை நிலைநாட்டப்பட்டால்தான் இந்தியாவில் ஒடுக்கப்பட்டோர் -பழங்குடியினரின் உண்மையான முன்னேற்றமும் விடுதலையும் சாத்தியமாகும்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

"ஆர்டர்லி முறையை திரும்பப் பெறவேண்டும்' என ஐகோர்ட் கூறியுள்ளதே?

நமது சட்டமும் அதன் நடைமுறைகளும் இன்னமும் வெள்ளைக்காரர் காலத்து பாணியில் தொடர்கின்றன. எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தபோதும், இன்னும் மாறவேண்டிய அம்சங்கள் இருக்கின் றன. அதில் ஒன்று இந்த ஆர்டர்லி முறை. மக்களைக் காக்க வேண்டிய கடமையில் உள்ள போலீசாரை, உயரதிகாரிகள் வீட்டுப் பணியாளாக வைத்துக்கொள்ளும் இந்தப் போக்கு குறித்து, பல முறை உத்தரவுகள் வந்துவிட்டன. நடைமுறையில்தான் இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர், "பெண் காவலர்களை பந்தோபஸ்து பணியில் போடவேண் டாம் என்றும், காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு அளிக்கப்பட வேண்டும்' என்றும் கூறினார். அவை சரியாக நடைமுறைப்படுத்தப்படு கின்றனவா என்பதைக் கவனிப் பதுடன், ஆர்டர்லி முறையை நீக்குவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.

வாசுதேவன், பெங்களூரு

மஹாராஷ்டிரா அரசியலில் என்ன நடக்கிறது?

பா.ஜ.க-சிவசேனா பங்காளிச் சண்டை விஸ்வரூபமெடுத்திருக் கிறது. சிவசேனாவை விழுங்கிவிட லாம் என பா.ஜ.க. திட்டமிடுகிறது.

இரா.அமிர்தவர்ஷினி, வானரப்பேட்டை -புதுச்சேரி

அ.தி.மு.க.வின் 50 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக பொதுக்குழு தீர்மானங்கள் அனைத் தும் நிராகரிக்கப்பட்டிருப்பது பற்றி?

என்ன தீர்மானங்கள் என அறிவிக்கும் முன்பே மேடையின் ஒருபுறம் உள்ள மைக் முன் வந்து, "தீர்மானங்கள் நிராகரிக்கப்படு கின்றன' என்றார் சி.வி.சண்முகம். கூட்டம் ஆர்ப்பரித்தது. தீர்மானங்கள் நிராகரிக்கப்படுகின்றன என அறி வித்த பிறகு, கட்சிக்காக இறந்தவர் களுக்கான இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. "எதற்காக பொதுக்குழு கூடியதோ அதைவிட்டு விட்டு, அடுத்த பொதுக்குழுவுக்குத் தேதி குறிப்பதற்காகவா இவ்வளவு அலப்பறை' என்று தொண்டர்களே யோசித்த நிலையில்... இன்னொ ருபுறம் இருந்த மைக்கில், பொதுக் குழுவைக் கண்டித்து ஓ.பி.எஸ்.ஸூம் அவரது ஆதரவாளர்களும் வெளி யேறினார்கள். சட்டை கிழியாத சண்டையை ஊடகங்கள் வழியே ஊரே வேடிக்கை பார்த்து ரசித்தது.

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ் "கிழியாத ஆடை, ஆறாத சோறு, ஒழுகாத குடிசை' -இந்த மூன்றும் காமராஜர் கனவு. இந்த மூன்றையும் இன்றுவரை திராவிடக் கட்சிகள் 100 சதவீதம் நிறைவேற்றவில்லை என் பதையாவது ஒப்புக்கொள்கிறீர்களா? நீங்கள் சொல்வதைப் பார்த்தால், பெருந்தலைவர் காமராஜர் தன்னுடைய கனவுகளை தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றவில்லை என்பது போலல்லவா இருக்கிறது?