தினேஷ்குமார், அ.வாசுதேவனூர்
இலங்கையின் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், ராஜபக்சேவுக்கும் பெரிதாக என்ன வித்தியாசம்?
ராஜபக்சே கொரோனா மாதிரி. அப்பட்ட மான சிங்கள வெறியோடு மொத்தமா தமிழினத் தைத் தாக்கியவர். ரணில் கொசு மாதிரி. நைட்டுல நைசா வந்து தமிழனோட ரத்தத்தை உறிஞ்சிட்டுப் போகக்கூடியவர். கொரோனாவுக்கு கொசு பரவா யில்லை என்பது இலங்கையின் தற்போதைய நிலை.
செந்தில்குமார் எம்., சென்னை-78
"பா.ஜ.க. காக்கைக் கூட்டம், அ.தி.மு.க. கொள்கைக் கூட்டம்' என செல்லூர் ராஜூ நேரடியாக பா.ஜ.க.வை தாக்குவது ஆச்சரியமாக உள்ளதே?
அ.தி.மு.க. தன் பெயருக்கேற்ப கொள்கையை வளர்த்திருந்தால் இந்த ஆச்சரியம் இருந்திருக்காது. ஆரம்பத்திலிருந்தே தி.மு.க. எதிர்ப்பு, கலைஞர் குடும்ப எதிர்ப்பு இவை மட்டும் தான் அ.தி.மு.க.வின் கொள்கையாக வளர்க்கப்பட்டு வந்தது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மக்களின் ஆதரவைப் பெற்றவர்களாக இருந்ததால், திராவிடக் கட்சி என்ற அடையாளம் மிச்சமிருந்தது. ஆனால், ஜெயலலிதா மறைவுக
தினேஷ்குமார், அ.வாசுதேவனூர்
இலங்கையின் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், ராஜபக்சேவுக்கும் பெரிதாக என்ன வித்தியாசம்?
ராஜபக்சே கொரோனா மாதிரி. அப்பட்ட மான சிங்கள வெறியோடு மொத்தமா தமிழினத் தைத் தாக்கியவர். ரணில் கொசு மாதிரி. நைட்டுல நைசா வந்து தமிழனோட ரத்தத்தை உறிஞ்சிட்டுப் போகக்கூடியவர். கொரோனாவுக்கு கொசு பரவா யில்லை என்பது இலங்கையின் தற்போதைய நிலை.
செந்தில்குமார் எம்., சென்னை-78
"பா.ஜ.க. காக்கைக் கூட்டம், அ.தி.மு.க. கொள்கைக் கூட்டம்' என செல்லூர் ராஜூ நேரடியாக பா.ஜ.க.வை தாக்குவது ஆச்சரியமாக உள்ளதே?
அ.தி.மு.க. தன் பெயருக்கேற்ப கொள்கையை வளர்த்திருந்தால் இந்த ஆச்சரியம் இருந்திருக்காது. ஆரம்பத்திலிருந்தே தி.மு.க. எதிர்ப்பு, கலைஞர் குடும்ப எதிர்ப்பு இவை மட்டும் தான் அ.தி.மு.க.வின் கொள்கையாக வளர்க்கப்பட்டு வந்தது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மக்களின் ஆதரவைப் பெற்றவர்களாக இருந்ததால், திராவிடக் கட்சி என்ற அடையாளம் மிச்சமிருந்தது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பா.ஜ.க. எனும் பல்லக்கைத் தூக்கும் தமிழகக் கட்சியாக அ.தி.மு.க. வை, ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ்.ஸும் மாற்றிவிட்டார் கள். "மோடி எங்கள் டாடி' என்று சொல்லக்கூடிய அளவுக்கு அன்றைய அமைச்சர்கள் இருந்தார்கள். இதை அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களே ரசிக்கவில்லை. ஜெயலலிதாவும் கலைஞரும் இல்லாத தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் எதிர்காலம் பற்றிய உள்ளுணர்வு பற்றி அ.தி.மு.க. தொண்டர்கள் சிலரும் சிந்தித்தார்கள். கலைஞர் இல்லாத நிலையிலும் தி.மு.க.வுக்கு வலிமையான தலைமை அமைந்ததையும் யோசித்தார்கள். எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா பெயரைச் சொல்லி அ.தி.மு.க.வை வலிமைபெறச் செய்யவேண்டும் என்பது அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பமாக இருந்தது. அது நடக்கவில்லை. தங்கள் தோளில் ஏறி, 4 சீட் வாங்கிய பா.ஜ.க. செய்யும் அலப்பறைகளை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அந்தக் கொதிப்பு அவர்கள் மனதில் இருக்கிறது. செல்லூர் ராஜூ போன்றவர்கள் லோக்கல் தொண்டர்களின் துணையால் ஜெயிப்ப வர்கள். அதனால்தான் தொண்டர்களின் குரலை எதிரொலித்திருக்கிறார். கொள்கை எனும் கல் உறுதியாக இருந்திருந்தால், அதை வீசியிருந்தாலே காக்கைக் கூட்டம் சிதறியிருக்கும்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்-தேனி
"உதயநிதி (ஸ்டாலின்) -அன்புமணி (ராமதாஸ்) -துரை வையாபுரி (வைகோ) -ரவீந்திர நாத்குமார் (ஓ.பி.எஸ்.) -மிதுன் குமார் (இ.பி.எஸ்.) ஒப்பிடுங்க ளேன்?
வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு மக்களிடம் ஓட்டு வாங்கி வெற்றி பெற்று, பதில் தந்தவர்கள் உதயநிதியும், ரவீந்திரநாத்தும். இருவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரவர் தொண்டர்களிடம் உண்டு. ரவீந்திரநாத்துக்கான சான்ஸ் குறைந்துள்ள நிலையில், உதய நிதிக்கான எதிர்பார்ப்பு அதிக மாகியுள்ளது. அவரது அப்பா அதனைத் தீர்மானிக்க வேண்டும். அமைச்சரான பிறகு, ராஜ்யசபா எம்.பி.யாகி, பிறகு நாடாளு மன்றத் தேர்தலையும் சந்தித்த அன்புமணி, தன் அப்பாவின் வாழ்த்துகளோடு கட்சித் தலை வரும் ஆகிவிட்டார். துரை வைகோ தன் அப்பாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் அரசியலுக்கு வந்திருக்கிறார்... போகப் போகத்தான் தெரியும். மிதுன் குமார் ஸ்லீப்பர் செல். அவரது அப்பாவும் தனக்குப் பதவி கிடைக்கும்வரை அப்படித் தான் இருந்தார்.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.
நம்மைப் பாதுகாக்க இன்னொருவரை எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கி றோமே அது சரியா?
நாம் பிறப்பதற்கு இருவர் தேவை. நம்மைப் புதைப்பதற்கு நால்வர் தேவை. இடைப்பட்ட வாழ்க்கையை வாழ நாம் மட்டும் போதும் என்று நினைத்தால் எப்படி? யாரும் யாரையும் முழுமையாகப் பாதுகாத்து விட முடியாது. ஆனால், யாருடைய ஆதரவுமின்றி வாழ்ந்துவிடவும் முடியாது.
ம.ரம்யா மணி, வெள்ளக்கோவில்
பஞ்சாப், டெல்லி மாநிலங்களின் அமைச்சர்களை கைது செய்ததைப்போல நாடெங்கும் உள்ள மாநிலங்களில் ஊழல் செய்யும் அமைச்சர்களை ஏன் கைது செய்யக்கூடாது?
பஞ்சாபில் ஆம் ஆத்மி தன் ஆட்சி நிர்வாகத் தூய்மையை நிலைநாட்ட நடவடிக்கையை எடுத்தது. டெல்லியில் நடந்தது ஆம் ஆத்மி மீதான பா.ஜ.க.வின் சதிப் பின்னல். லாலு பிரசாத்தை ஒவ்வொரு வழக்காகத் தண்டித்து சிறைவாசத்தை நீடிக்கச் செய்வதும், ஜெயலலிதா இறக்கும்வரை தீர்ப்பு வராமல் இருந்து, மரணத்திற்குப் பிறகு அரசு செலவில் அவருக்கு நினைவிடம் கட்டி சிலை வைப்பதுமான பாரபட்சம் இருக்கும்வரை ஊழல்தான் ஆட்சி செய்யும்.
சந்தியா கார்த்திக், எம்.ஜி.நகர் -சென்னை
தி.மு.க. அரசு நல்லது செய்தாலும் தவறு செய்தாலும் அதைச் சுட்டிக்காட்டுவது பத்திரி கைகளின் வேலை. பத்தி ரிகையாளர்கள் மீது குற்றம் சுமத்துவது, வழக்கு போடுவது தவறு. இதனை தி.மு.க. அரசு திருத் திக்கொள்ள வேண் டும் என்ற சசிகலாவின் புலம்பல் பற்றி?
ஜெயலலிதா ஆட்சியில் நக்கீரன் மீதான கொலைவெறித் தாக்குதல் களுக்கும், பொடா கைது நடவடிக் கைக்கும், போராடிய பத்திரிகை யாளர்கள் மீது வழக்குகள் போட்டதற்கும், போலீசைக் கொண்டு தாக்கியதற்கும் உடன் பிறவா துணையாக நின்றவர், இப்போது மு.க. ஸ்டாலின் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் என்று புலம்பும் அளவுக்கு புத்தி வந்திருக்கிறது போலும்.