Advertisment

மாவலி பதில்கள்

dd

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

அன்புமணி பா.ம.க. தலைவ ரானது எதைக் காட்டுகிறது?

டாக்டர் ராமதாஸ் எடுத்துக்கொண்ட அக்கறையை!

பா.ஜெயப்பிரகாஷ், -தேனி

காங்கிரஸ் கட்சி நமக்கு நிறைய கொடுத்திருக்கிறது. இப்போது கட்சிக்கு நாம் திருப்பிக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ்காரர்களுக்கு சோனியா காந்தி விடுத்த வேண்டுகோள் பற்றி?

Advertisment

ஆனந்த பவனம் வீட்டை நாட்டுக்குக் கொடுத்துவிட்டு, நாட் டையே தங்களுடைய ஆனந்த பவனமாக ஆக்கிக்கொண்டது நேரு குடும்பம் என்று ஒரு காலத்தில் எதிர்க்கட்சியினர் வேடிக்கையாக விமர்சிப்பார்கள். அப்போது, காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். காங்கிரசால் மட்டும்தான் இந்தியாவை ஆட்சி செய்ய முடியும் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருந்த காலம். 1977 தேர்தல் அதனைப் புரட் டிப் போட்டது. பிரதமர் இந்திரா காந்தியும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் தோல்வி யடைந்தனர். அதன்பின்,

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

அன்புமணி பா.ம.க. தலைவ ரானது எதைக் காட்டுகிறது?

டாக்டர் ராமதாஸ் எடுத்துக்கொண்ட அக்கறையை!

பா.ஜெயப்பிரகாஷ், -தேனி

காங்கிரஸ் கட்சி நமக்கு நிறைய கொடுத்திருக்கிறது. இப்போது கட்சிக்கு நாம் திருப்பிக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ்காரர்களுக்கு சோனியா காந்தி விடுத்த வேண்டுகோள் பற்றி?

Advertisment

ஆனந்த பவனம் வீட்டை நாட்டுக்குக் கொடுத்துவிட்டு, நாட் டையே தங்களுடைய ஆனந்த பவனமாக ஆக்கிக்கொண்டது நேரு குடும்பம் என்று ஒரு காலத்தில் எதிர்க்கட்சியினர் வேடிக்கையாக விமர்சிப்பார்கள். அப்போது, காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். காங்கிரசால் மட்டும்தான் இந்தியாவை ஆட்சி செய்ய முடியும் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருந்த காலம். 1977 தேர்தல் அதனைப் புரட் டிப் போட்டது. பிரதமர் இந்திரா காந்தியும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் தோல்வி யடைந்தனர். அதன்பின், தவறுகளை உணர்ந்து -குறைகளைக் களைந்து, கட்சி யைப் பலப் படுத்தி, 1980-ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது காங்கிரஸ். 1989லும் ராஜீவ் தலைமையிலான காங்கிரசுக்கு சறுக்கல். பிறகு, நரசிம்மராவ் தலைமையில் 1991ல் ஆட்சி அமைந்தது. 1996 முதல் 2004 வரை காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாகத்தான் இருந்தது. அதன்பிறகே 10 ஆண்டுகள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் ஆட்சி நடந்தது. இப்போது காங்கிரஸ் நிலைமை ஐ.சி.யூ.வில் இருக்கிறது. சோனியா, ராகுல் ஆகியோரின் முயற்சிகள் பலிப்பதில்லை. பல மாநிலங்களில் கட்சிக்கு வலுவான அமைப்பு இல்லை. இந்திரா, ராஜீவ் பின்னடைவை சந்தித்த நிலையிலும், சோனியா தலைமை யேற்ற போதும், காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு மாநில அளவிலும் பிரபலமான தலைவர்கள் இருந்தார்கள். இப்போ தோ, மாநிலத் தலைவராக டெல்லியால் நியமிக்கப்பட்டால் மட்டுமே பிரபலமடைகிறார்கள். கட்சி என்ன கொடுத்தது, நாம் என்னென்ன திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி யாரும் யோசிப்பதில்லை. இன்றைய நிலையில், பா.ஜ.க.வுக்கு மாற்றாக காங்கிரஸ் வலிமையாக இருக்க வேண்டும் என்று எல்லாரும் நினைக்கிறார்கள், காங்கிரஸ் தலைகளைத் தவிர.

Advertisment

ff

பொன்விழி, அன்னூர்

5 முறை தமிழ்நாட்டின் முதல்வர், தமிழ்நாடு சட்டசபையில் வைரவிழா கண்ட எம்.எல்.ஏ.வான கலைஞர் கருணாநிதி பெயரை சட்டசபை நுழைவாயிலுக்கு சூட்டி கௌரவிக்குமா தமிழ்நாடு அரசு?

தற்போதைய சட்டசபை கட்டட மான செயின்ட் ஜார்ஜ் கோட்டை இந்திய ராணுவத்துக்கும் தொல் பொருள் துறைக்கும் சொந்தமான இடம் என்பதால், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமாக தனியாக ஒரு புதிய தலைமைச் செயலகத்தை அமைத்தவர் கலைஞர். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதை மருத்துவமனையாக்கிவிட்டு, பழைய இடத்திலேயே நெருக்கடியுடன் சட்டமன் றத்தை நடத்தச் செய்தவர் ஜெயலலிதா. அங்கே உள்ள நுழைவாயிலுக்கு கலைஞர் பெயரை வைப்பதைவிட, மருத்துவமனை யாக மாற்றப்பட்டாலும் கம்பீரமாக நிற்கும் புதிய தலைமைச் செயலகக் கட்டட வளாகத்தில் கலைஞருக்கு சிலை அமைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இது, தமிழ்நாட்டை காலத்திற்கேற்ற புதுமை யுடன் மாற்றி அமைத்த சிற்பியான கலைஞருக்கு வழங்கப்பட்டிருக்கும் சரியான கௌரவமும் பிறந்தநாள் பரிசுமாகும்.

த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்

திராவிடக் கட்சிகளின் இலவசத் திட்டங்களை ஒழித்துவிட்டு, கல்வி- மருத்துவம் இரண்டையும் அரசுடைமை யாக்கி, மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வகையில் தரமுடியாதா?

ஹலோ... நீங்கள் குறிப்பிடும் கல்வியும் மருத்துவமும் தமிழ் நாட்டில் இப்போதும் அரசுடைமைதான். கட் டணமில்லா அட்மிஷன் தொடங்கி பாடப்புத்த கம், லேப்டாப், பஸ் பாஸ் வரை எல்லா மும் இலவசம்தான். அதுபோலவே மாநகரங்களில் உள்ள மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முதல் கிராமப் புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை எல்லாவற்றிலும் இலவச சிகிச்சைதான். அதுபோக, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், வீடு தேடி மருத்துவம், 108 ஆம்புலன்ஸ் என்று மக்களைக் காக்கும் பல திட்டங்களும் அரசு சார்பில் செயல் படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு துறை யிலும் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகின்றன என்பதும், அவை லாபகரமாக இயங்குகின்றன என்பதும் சரிதான். அதற்காக அரசாங்கத்துக்கும் இந்தத் துறைகளுக்கும் தொடர்பில்லை என்பது போல திசை திருப்புவது ஒரு ஃபேஷனாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் அட்மிஷன் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. அரசு மெடிக்கல் காலேஜ், இன்ஜினியரிங் காலேஜ் சீட்டுகளுக்குத்தான் கிராக்கி அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு உலகத்தரத்துடன் போட்டி போடுகிறது என்பதுதான் உண்மை நிலவரம்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

ஜெயகாந்தன் இருந்திருந்தால் பா.ஜ.கவுக்கு ஆதரவாகத்தானே பேசிக்கொண்டிருப்பார்?

எதிராகவும்கூட பேசலாம். நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அதிரடி ஆச்சரியம் தரக்கூடியவர் ஜெயகாந்தன்.

nkn040622
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe