Advertisment

மாவலி பதில்கள்!

aa

ஜெய்சிங், கோயம்புத்தூர்

இலங்கை பொருளாதார வீழ்ச்சியினால் இந்தியாவுக்கு பலவீனம் ஏதும் உண்டா?

இலங்கையின் இயற்கை அமைப்பு, அதன் அரசு நிர்வாகம், தமிழ்-சிங்கள மக்கள், துறைமுகங்கள், கடற்பகுதி, பொருளாதார நிலைமை இவை அனைத்துமே இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குட்டி நாடான இலங்கை, இந்தியாவிடம் மட்டுமல்ல, சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடு களிடமும் செல்வாக்கு செலுத்துகிறது. இலங்கையில் தமிழர் களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, ஒடுக்குமுறைகள் அதிகரித்த போது அவர்களுக்காகத் தமிழீழக் கோரிக்கையுடன் போராடிய விடுதலைப்பு-களை வீழ்த்துவதற்காக மேற்சொன்ன நாடுகள் ஒருங்கிணைந்து இலங் கைக்கு ஒவ்வொரு வகையில் உதவின. இப்போது, பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்தி, இந்த நாடுகளிடம் உதவியை எதிர்பார்க்கிறது இலங்கை. உதவிக்கரம் நீட்டுவதில் இந்தியா ஆர்வத்துடன் இருக் கிறது. எல்லா நாடுகளுக்கும் இலங்கை மீது ஒரு கண் உண்டு. மிக அருகி

ஜெய்சிங், கோயம்புத்தூர்

இலங்கை பொருளாதார வீழ்ச்சியினால் இந்தியாவுக்கு பலவீனம் ஏதும் உண்டா?

இலங்கையின் இயற்கை அமைப்பு, அதன் அரசு நிர்வாகம், தமிழ்-சிங்கள மக்கள், துறைமுகங்கள், கடற்பகுதி, பொருளாதார நிலைமை இவை அனைத்துமே இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குட்டி நாடான இலங்கை, இந்தியாவிடம் மட்டுமல்ல, சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடு களிடமும் செல்வாக்கு செலுத்துகிறது. இலங்கையில் தமிழர் களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, ஒடுக்குமுறைகள் அதிகரித்த போது அவர்களுக்காகத் தமிழீழக் கோரிக்கையுடன் போராடிய விடுதலைப்பு-களை வீழ்த்துவதற்காக மேற்சொன்ன நாடுகள் ஒருங்கிணைந்து இலங் கைக்கு ஒவ்வொரு வகையில் உதவின. இப்போது, பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்தி, இந்த நாடுகளிடம் உதவியை எதிர்பார்க்கிறது இலங்கை. உதவிக்கரம் நீட்டுவதில் இந்தியா ஆர்வத்துடன் இருக் கிறது. எல்லா நாடுகளுக்கும் இலங்கை மீது ஒரு கண் உண்டு. மிக அருகில் இருக்கும் நாடு இந்தியா என்பதால், இலங்கை யின் பொருளாதாரச் சூழல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இந்தியாவுக்கு பலவீனம் இல்லை. இலங்கைதான் தொடர்ந்து பலவீனமடைகிறது.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

Advertisment

"பிரதமர் மோடி அலுவலக கோட்சேக்களே, நான் "பூ' அல்ல "நெருப்பு'. எத்தகைய அழுத்தங்களுக்கும் நான் அடிபணியமாட்டேன்'' என்று குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளது குறித்து?

ஜனநாயகத்தின் அடிப் படையே கருத்து சுதந்திரம்தான். ஆனால், ஜிக்னேஷ் மேவானியின் ட்விட்டர் பதிவுக்காக அவர் மீது வழக்குப் போட்டு கைது செய்யப் பட்டு, இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள குஜராத்தி லிருந்து, கிழக்குப் பகுதியில் உள்ள அசாமுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். வலுவற்ற-பொய் யான புகார் என்பதால் மேவானிக்கு பெயில் கிடைத்தது. ஆனால், அவரைக் கைது செய்து வாகனத்தில் அழைத்து வரும் போது, பெண் போலீஸை தொந்தரவு செய்ததாக புது வழக்கு போட்டு சிறைப்படுத் தினர். போலீஸ் காவலில் இருக்கும் மேவானி, எப்படி பெண் போலீசுக்கு தொந்தரவு தர முடியும்? அந்தளவுக்கு அவர் நடந்து கொள்கிறார் என்றால், அவரது செய்கையை அந்த வாகனத்தில் இருந்த மற்ற போலீசார் தடுக்காமலா இருந்தார்கள்? காவல்துறையில் உள்ள பெண்களையே பாதுகாக்க முடியாத நிலையில்தான் பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலப் போலீஸ் இருக்கிறதா என்று கேட் கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

mm

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

ப..சிதம்பரம் டெல்லியில் வழக்கறிஞர்களால் விரட்டப் பட்டது?

Advertisment

காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் மூத்த வழக்கறிஞருமாவார். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில், தனியார் நிறுவனத் துக்கு லாபம் தரும் வகையில் அரசு பால்வள நிறுவனம் நடந்துகொள்வதாக அங்குள்ள காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. கெவின்டர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு திரிணாமூல் அரசு காட்டிய சலுகை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சவுத்ரி தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்ற னர். இந்நிலையில், ஊழல் புகாருக்குள்ளாகியுள்ள தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜரானதால், மேற்கு வங்க காங்கிரசார் கொதிப்படைந்துவிட்டனர். காங்கிரசில் உள்ள வழக்கறி ஞர்கள் உள்பட மூத்த தலைவர்கள், ப.சி.யை முற்றுகை யிட்டு எதிர்ப்பு முழக்கத்தை எழுப்பினர். ஏற்கனவே நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராடியபோது, நீட் ஆதரவுத் தரப்பில் ஆஜராகி வாதாடியவர் ப.சி.யின் மனைவி நளினி சிதம்பரம். அப்போதே அது அரசியலில் சூட்டைக் கிளப் பியது. அரசியல் வேறு, வழக்கறிஞர் தொழில் வேறு என்பது ப.சி. குடும்பத்தின் நிலைப்பாடு. ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டு அரசியல் செய்தவர் ப.சிதம்பரம். அதற்காக, கூட்டணிக் கட்சித் தலைவரான ஜெயலலிதா, மேடையில் ப.சி.க்கு சீட் தராமல் நிற்க வைத்து, ஒரே ஒரு நாற்காலி போட்டு, அதில் ஜெ. மட்டுமே உட்கார்ந் திருந்தார். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் திருச்சி விமான நிலையத்தில் தன் கட்சிக்காரர்களை விட்டே அப்போதைய மத்திய அமைச்சரான ப.சி.யைத் தாக்கச் செய்தார். அதனை நக்கீரன் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களாக வெளியிட்டது. அப்படியிருந் தும்கூட, அ.தி.மு.க. ஆட்சியில் குடவாசல் மார்க்சிஸ்ட் கட்சிப் பிரமுகரைக் கொலை செய்த வழக்கில், தி.மு.க. ஆட்சி வந்ததும் குண்டர் சட்டத்தில் கைதான அ.தி.மு.கவின் பிரதிநிதி குடவாசல் ராஜேந்திரனுக்காக ஆஜரானவர் ப.சிதம்பரம்தான். அவருடைய தொழில் (அ)தர்மம் சொந்தக் கட்சிக்காரர் களிடமிருந்தே எதிர்ப்பை வெளிப் படுத்தியுள்ளது.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

"முதல்வர் பதவியை மூன்று முறை விட்டுக்கொடுத்த நிகழ்கால பரதன் ஓ.பி.எஸ்.'' என்று அவரின் மகன் ஜெய பிரதீப் கூறுவது பற்றி?

மகனுக்கு என்ன கோபமோ! அப்பாவை இப்படி மறைமுகமாக விளாசுகிறார்.

nkn110522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe