தே மாதவராஜ், கோயமுத்தூர்
நாடு தழுவிய வேலை நிறுத்தம் எதற்காக நடத்தப்படுகிறது?
நாடு நம்மிடமிருந்து நழுவி விடக்கூடாது என்பதற்காக.
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
ஓ.பி.எஸ். கூறிய சாட்சியங் களுக்காக சசிகலா பாராட்டுகிறாரே?
ஜெயலலிதாவின் உடல் நிலை என்பது அவர் மருத்துவ மனைக்குப் போவதற்கு முன்பிருந்தே மர்மமானதுதான். 2016 சட்டமன்றத் தேர்தலிலேயே அவர் பழைய ஆரோக்கியத்துடன் இல்லை என்பதைக் காண முடிந்தது. அப்பல்லோவில் 75 நாட்கள் என்ன நடந்தது என்பதை சசிகலா மட்டுமே அறிவார் என்பதால் ஜெ. மரணத்திற்கு அவர்தான் காரணம் என்பது கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணமாக இருந்தது. சசிகலாவுக்கு இதில் சம்பந்தமில்லை என ஓ.பி.எஸ். சாட்சியமளித்துள்ள நிலையில், அவரைப் பாராட்டாமல் இருப்பாரா சசிகலா? கடைசிவரை, ஜெ.வுக்கு என்னதான் நடந்தது என்பதற்கும், அவர் பெயரில் ஒரு கோடி ரூபாய்க்கு எழுதப்பட்ட இட்லியின் கணக்குக்கும் உண்மை யான காரணங்கள் வெளியே வருமா எனத் தெரியவில்லை.
வாசுதேவன், பெங்களூரு
அரிய புத்தகங்கள் பிறர் கைக்கு போனால் ஏன் சுலபத்தில் திரும்பி வருவதில்லை?
அரியவை என்றாலே கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அதி லும் புத்தகங்கள் எப்போதும் நமக்கு நண்பனைப் போல வழிகாட் டக்கூடியவை. அதனால்தான், புத்தக விரும்பிகள் தங்களிடம் உள்ள அரிய புத்தகங்களைத் தருவதற்கு யோசிப்பார்கள். ஏதாவது, காரணம் சொல்லி வாங்கிச் செல்கிறவர்களும் திருப்பித் தருவதில்லை. இவை யெல்லாம் புத்தகங்களின் அருமையை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். சாலை ஓரத்தில் ஒரு செல்போனும், ஒரு புத்தகமும் கிடந்தால் செல்போனை எடுக்கத்தான் போட்டி போடுவார்கள். புத்தகம் பெரும்பாலும் அப்படியே கிடக்கும். யாரோ ஒருவர் அந்தப் புத்தகத்தின் அருமையை உணர்ந்து எடுத்துச் செல்வார். அந்தப் புத்தகமும் அது உருவாக்கிய சிந்தனையும் எல்லா செல்போன்களிலும் வாட்ஸ்ஆப் செய்திகளாக வரலாம்.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி
இலங்கையின் நிலைக்கு யார் காரணம்?
கடந்த 40 ஆண்டுகாலமாக இலங்கையில் சிங்கள இனவெறி யைத் தூண்டிவிட்டு, தமிழர்கள் தங்கள் நிலப்பரப்பில் நிம்மதியாக வாழ முடியாமல், ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுக்க காரண மாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயகா, ஜெயவர்த்தனே, பிரேமதாசா, சந்திரிகா, ரணில், மைத்ரி, ராஜபக்சே, கோத்தபாய உள்ளிட்ட ஆட்சி யாளர்கள் அனைவருமே இன்றைய நிலைக்கு அடிப்படைக் காரண மானவர்கள். நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்களைத் தீட்டாமல், சின்னஞ்சிறு தீவின் முதன்மைச் செலவே ராணுவத்திற்கான செலவு எனத் தீர்மானித்து செயல்பட்டார்கள். அதில், ராஜபக்சே சகோதரர்களோ ராணுவத் தாக்குதல் தொடங்கி, நாட்டின் மற்ற திட்டங்களுக்கு வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றார்கள். அதில், குடும்பரீதியாக லாபம் பார்த்தார்கள். சொந்தக் காலை இழந்து, வெளிநாடுகளின் ஊன்றுகோல் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பொருளாதாரச் சீரழிவு என்பது அங்குள்ள தமிழர்கள் ஏற்கனவே அனுபவித்ததுதான். இனவெறி ஆட்சியாளர்களை நம்பிய சிங்களர்கள்தான் அதிகம் அனுபவிக்கப்போகிறார்கள்.
வே.அம்பலவாணன், திண்டிவனம்
ராகுலை அழைத்து மு.க.ஸ்டாலின் தனது உங்களில் ஒருவன் புத்தகத்தை வெளியிட்ட ராஜதந்திரம் பற்றிய மாவலி பதிலில், மிசா சிறைக் கொடுமைக்குள்ளான ஸ்டாலினின் உயிரைக் காத்த சிட்டிபாபு பெயர் இடம் பெறவில்லையே?
எமர்ஜென்சி காலத்தில் கலைஞர் தன்னுடைய மருமகன் மாறன், மகன் ஸ்டாலின் ஆகியோருக்கு மிசா சிறையில் நேர்ந்த கொடுமைகளையும் கடந்து, நாட்டின் நிலைத்தன்மை கருதி 1980-ல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததையும், எமர்ஜென்சி கால செயல்பாடுகளுக்காக பொதுக்கூட்ட மேடையில் இந்திராகாந்தி வருத்தம் தெரிவித்ததையும் அந்தப் பதில் சுட்டிக்காட்டியிருந்தது. அப்போது கலைஞருடன் இணைந்து நின்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணியும் சிறைக் கொடுமைக்குள்ளானவர் என்பதால் அவர் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. மு.க.ஸ்டாலின் உயிரைக் காத்து, தன்னுயிர் ஈந்த சிட்டிபாபு 1980 தேர்தலின்போது இல்லை. ஆனாலும், தி.மு.க. வரலாற்றில் சிட்டிபாபுவின் தியாகம் எப்போதும் சுடர்விடும்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
அதிநவீன ஏவுகணை சோதனையை ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரிய ராணுவம் பற்றி?
இந்திய குடியரசு நாள் அணிவகுப்பில்கூட நமது படை பலத்தைக் காட்டும் வகையிலான அணிவகுப்புகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன. மற்ற நாடுகள் வியந்து பார்க்க வேண்டுமென்றால் ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என எல்லா நாடுகளும் விரும்பு கின்றன. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே புரமோஷன் தான். அமெரிக்க ஜனாதிபதி, இந்தியப் பிரதமர், தமிழ்நாடு -ஆந்திரா முதல்வர்கள் என எல் லாத் தரப்பினருக்கும் புரமோ ஷன் டீம் இருக்கிறது. ஜனநாயக நாடுகளில் காலத்திற்கேற்ற புரமோஷன்களில் தலைவர்கள் ஈடுபடுவது வழக்கம்தான். கம்யூனிச நாடுகளோ இரும்புத் திரை நாடு கள் என்று சொல்லக்கூடிய வகை யில் தங்களின் செயல்பாடுகளை கமுக்கமாக மேற்கொண்டு வந்தன. ஆனால், புரமோஷன் உலகத்தில் கம்யூனிச நாடுகளும் விதிவிலக் கல்ல என்பதைக் காட்டியிருக் கிறது வடகொரியாவின் ஏவு கணை சோதனையும் அதற்கு அதிபர் கிம் ஜோங் அன் ஹீரோ போல போஸ் கொடுத்து செய் யப்பட்ட புரமோஷனும்.