Advertisment

மாவலி பதில்கள்

vv

பி.மணி, குப்பம் -ஆந்திரா

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என்கிற தகுதியைத் தவிர சசிகலாவிற்கு என்ன தகுதி இருக்கிறது? ஏன் அ.தி.மு.கவினர் பலர் அவரைப் பெரிதாக நினைத்துக் கொள்கிறார்கள்?

Advertisment

சசிகலாவிற்கு என்ன தகுதி என்பது இருக்கட்டும். ஜெயலலிதா என்ன தகுதியுடன் அரசியலுக்கு வந்தார் என்று ஏன் யாரும் பேசுவதில்லை. எம்.ஜி.ஆருடன் நடித்தார் என்பது மட்டுமே அ.தி.மு.க.வில் அவருக்கு அடுத்தடுத்து பதவிகள் கிடைத்ததற்கான ஒரே தகுதி. அதைத் தாண்டி, அவரே சொன்ன தகுதி என்பது ‘எம்.ஜி.ஆர். இறந்ததும் உடன்கட்டை ஏற விரும்பினேன்’ என்ற அபாரமான தகுதி. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்ந்தவர் ஜெயலலிதா. கட்சித் தொண்டர்களிடமும் மக்களிடமும் செல்வாக்கு பெற்றார். அரசியலுக்கான ஒரே தகுதி இதுதான். அமாவாசைகள் நாகராஜ சோழன்களாக மட்டுமல்ல, சோழ நாச்சியார்களாகவும் ஆகலாம் என ஆச

பி.மணி, குப்பம் -ஆந்திரா

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என்கிற தகுதியைத் தவிர சசிகலாவிற்கு என்ன தகுதி இருக்கிறது? ஏன் அ.தி.மு.கவினர் பலர் அவரைப் பெரிதாக நினைத்துக் கொள்கிறார்கள்?

Advertisment

சசிகலாவிற்கு என்ன தகுதி என்பது இருக்கட்டும். ஜெயலலிதா என்ன தகுதியுடன் அரசியலுக்கு வந்தார் என்று ஏன் யாரும் பேசுவதில்லை. எம்.ஜி.ஆருடன் நடித்தார் என்பது மட்டுமே அ.தி.மு.க.வில் அவருக்கு அடுத்தடுத்து பதவிகள் கிடைத்ததற்கான ஒரே தகுதி. அதைத் தாண்டி, அவரே சொன்ன தகுதி என்பது ‘எம்.ஜி.ஆர். இறந்ததும் உடன்கட்டை ஏற விரும்பினேன்’ என்ற அபாரமான தகுதி. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்ந்தவர் ஜெயலலிதா. கட்சித் தொண்டர்களிடமும் மக்களிடமும் செல்வாக்கு பெற்றார். அரசியலுக்கான ஒரே தகுதி இதுதான். அமாவாசைகள் நாகராஜ சோழன்களாக மட்டுமல்ல, சோழ நாச்சியார்களாகவும் ஆகலாம் என ஆசைப்படுவதுதான் அரசியலின் இயல்பு.

தே.மாதவராஜ், இராமநாதபுரம் -கோயமுத்தூர் 45

ஸ்டாலின் எதைச் செய்தாலும் அண்ணாமலை எதிர்க்கிறாரே?

தி.மு.க. தலைவரான முதல்வர் ஸ்டாலின் செய்வதை பா.ஜ.க. மாநிலத் தலைவரான அண்ணாமலை எதிர்க்கிறார் என்பது அரசியலில் சகஜமானதுதான். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. திட்டங்களை குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்துப் பேசினார். அவர் எதிர்த்ததை அவரே நிறைவேற்றும் சாதனையைவிட அண்ணாமலை பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

தமிழக மாநகராட்சியில் பதவி ஏற்றுள்ள "ஆண் மேயர்கள் -பெண் மேயர்கள்' என்ன வேறுபாடுங்க?

Advertisment

இதுவரை பெண் மேயர்களை மட்டுமே தனியாகக் குறிப்பிட்டு வந்த நிலையில், தற்போது ஆண் மேயர்கள் என்று குறிப்பிடும் சூழல் உருவாகியிருக்கிறதே அதுதான் முதல் வேறுபாடு. தமிழ்நாட் டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 பெண் மேயர்கள். 10 ஆண் மேயர்கள். இவர்களில் ஆண் மேயர்கள் பெரும்பாலும் நேரடி அரசியல் களத்தில் பங்கேற்றவர்கள். பெண் மேயர்கள் பெரும்பாலும் தற்போதைய 50% இடஒதுக்கீட்டினால் அவர்களது குடும்பத்தினர் சார்ந்துள்ள அரசியல் கட்சியின் வேட் பாளராகக் களமிறங்கி யவர்கள். வீட்டை நிர்வகிக்கத் தெரிந்த வர்களால் நாட்டை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகத்தைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள். மேயர் பொறுப்பேற்ற பெண்களில் ஒரு சிலர் மிகத் தெளிவாகத் தங்களின் செயல்பாடு கள் எப்படி இருக்கும் என்பதை விளக்கு கிறார்கள். ஒரு சிலர் தடுமாறுகிறார்கள். தங்களுடைய மாநக ராட்சியின் அடிப் படைத் தேவைகள், தங்களின் அதிகார வரம்பு, அதில் குடும் பத்தார் தலையிடாத நிலை ஆகியவற்றில் தெளிவாக இருந்தால் ஆண் மேயர் என்ன, பெண் மேயர் என்ன? எந்த வேறுபாடுமின்றி மக்களுக்கு சேவை யாற்றி அவர்களின் மனங்களை வெல்ல முடியும்.

ஆர்.எஸ்.மனோகரன், சக்தி நகர் -முடிச்சூர்

அண்ணனும் தம்பியும் நாடகமாடி, எடப்பாடிக்கு காது குத்துகிறார்களா?

சசிகலாவுக்கே காது குத்தியவர் எடப் பாடி. அந்த சசிகலா வை வைத்து எடப் பாடிக்கு காது குத்த லாம் என அண்ணன் -தம்பி முயற்சித்துப் பார்க்கிறார்கள். காது துளை ஆகிறதா, ஊசி வளைந்து போகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

க.ரம்யா, புவனகிரி

கர்நாடகாவில் திரும்பவும் ஹிஜாப் விவகாரம் மேலெழும்புகிறதே?

உக்ரைன் போர்க்களத்தில் இருந்து இந்திய மாணவர்களை மீட்பதில் வடஇந்தியா -தென்னிந்தியா என்ற பாகுபாடு காட்டப்பட்டதை மாணவர்களே அம்பலப்படுத்தினர். புனே மெட்ரோ ரயிலில் மாணவிகளுடன் பிரதமர் பயணம் என்று ஸ்கூல் இல்லாத ஞாயிற்றுக் கிழமையில் யூனிஃபார் முடன் வரவைத்து அம்பலப்பட்டனர். எது செய்தாலும் இப்படியே போனால் அவர்கள் என்ன செய்வார்கள்? ஹிஜாப், மாட்டுக்கறி என்று மறுபடியும் ஆரம்பிக்க வேண்டியதுதானே!

vv

கோகுலவாசன், கடையநல்லூர்

சமீபத்திய படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது... ஏன்?

பிடித்த படம் தானே... சென்னை புத்தகக் காட்சியில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலைக்குப் பக்கத்தில் நின்று காவியுடை அணிந்த சாமியார் எடுத்துக் கொண்ட படம். அதுதான் பிடித்த படம். அதுபோல, நாமம் தரித்த பிராமணர் ஒருவரும் பெரியார் புத்த கங்களை வாங்கிக் கொண்டு அந்த சிலை அருகே படம் எடுத்துக்கொண்டார். உத்தரபிரதேச மாடல் அரசியலை இங்கே வளர்க்கலாம் என நினைப்பவர்களின் வியூகத்தைத் தவிடு பொடியாக்கும் வகையில் பெரி யாரை 360 டிகிரியில் தமிழ்நாடு உணர்ந்து, புரிந்துகொண்டிருப் பதைக் காட்டும் படங்கள் அவை.

ப.தேவராஜ், மேலூர்

விலையேற்றத்தால் சரக்கின் போதை இறங்கி விடுகிறதே, என்ன செய்யலாம்?

இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக செலவு செய்து அரசின் கஜானா பெருக உதவி செய்ய லாமே!

nkn120322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe