நாதன், முல்லைநகர், சென்னை-39
போயஸ் கார்டன் பகுதியில் வீடு வாங்க வேண்டும் என்று ஆசை. நிறைவேறுமா?
உழைப்பால் உயர்ந்தவராக இருக்க வேண்டும். அதிக வருவாய் தரக்கூடிய தொழில் அல்லது பணியில் ஈடுபடக்கூடியவ ராக இருக்கவேண்டும். அதையும்தாண்டி செல்வாக்கும் அதிகாரமும் உள்ளவராக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் போயஸ்கார்டன், போட்கிளப் என எந்த இடத்திலும் வீடு வாங்கலாம்.
த.சிவாஜி மூக்கையா, சென்னை
பணத்தைக் கையாள்வது ஒரு கலைதானே?
சும்மாவா? சின்ன வார்டாக இருந்தாலும், அதில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என் பதைத் தெரிந்திருக்க வேண்டும். எதிராளி யின் பலம் என்ன, அந்தத் தரப்பின் கணக்கு என்ன என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கேற்ப கூடுத லாகவோ குறைவாகவோ திட்டமிட வேண்டும். இவ்வளவு எனத் தீர்மானித்த பிறகு, அதற்கான மொத்த தொகையும் கைவசம் இருக்க வேண்டும். அது, கண்கொத்திப் பாம்புபோல கவனிப்பவர்களின் பார்வைக்குத் தெரியாமல் இருக்க வேண்டும். ஒருவருக்கு இவ்வளவு என்ற கணக்கின் படி ஒவ்வொருவரிடமும் ஒழுங்காகப் போய்ச் சேர வேண்டும். தான் நம்புகிறவர்கள் அதற்கேற்ப பட்டுவாடா செய்ய வேண்டும். பட்டுவாடா பார்ட்டிகளின் பசிக்கும் அன்றாடம் தீனி போட வேண்டும். விதைத்த பணம் வெற்றியாக விளைச்சலாகும் வரை தூங்காமல் இருக்க வேண்டும். வெற்றிக்குப் பிறகு, போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக குறிப்பிட்ட காலத்திற்குள் அள்ள வேண்டும். ரெய்டுகளை சமாளிக்க வேண்டும். அடுத்த முறையும் வார்டுவாரியாகக் கணக்கிட்டு அதே ஃபார்முலாவை சரியாகக் கடைப்பிடிக்க வேண் டும். பணத்தைக் கையாள்வதில் இத்தனை கலைகள் உள்ளன.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் உள்ள எதிர்பார்ப்பு, வேகம் இவை ஒரு சில அமைச்சர்களிடம் இல்லையே?
தண்டவாளத்தில் ஓடும் பெட்டிகளின் உள்ளே சென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். பெட்டிகளை இழுத்துச் செல்கின்ற ரயில் இன்ஜினின் தரமும் வேகமும் எப்படியோ அதற்கேற்ப அத்தனை பெட்டிகளும் சீராக ஓடும். அமைச்சர்கள் ரயில் பெட்டிகள். முதல்வர், இன்ஜின்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
உத்தரபிரதேச முதல்வர் யோகிக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண்ணுக்கு சமாஜ் வாடி கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளித்திருக்கிறார்களே?
இந்தியாவின் பிரதமராக ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றபோது, அவருக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது, துப்பாக்கி கட்டையால் ராஜீவைத் தாக்கிக் கொல்ல முயன்றார் சிங்கள ராணுவ வீரர் ஒருவர். சட்டென சுதாரித்துக் கொண்ட ராஜீவ், மயிரிழையில் உயிர் பிழைத்தார். அண்டை நாட்டின் பிரதமரைத் தாக்கிய ராணுவ வீரருக்கு என்ன தண் டனை தரப் போகிறது இலங்கை அரசு என்ற எதிர்பார்ப்பு இந்தியா விலும் உலகளாவிய அளவிலும் இருந்தது. அந்த ராணுவ வீரர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொன்னது இலங்கை அரசு. சில ஆண்டுகள் கழித்து, அவர் அரசியலில் ஈடுபட்டு தேர் தலில் நின்று எம்.பி.யாக வெற்றி பெற்று, நாடாளுமன்றத்திற்கும் சென்று விட்டார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது உலகளாவிய இலக்கணம்.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
நதிகள் இணைப்பு குறித்து ஒன்றிய அரசின் பட்ஜெட் சொல் கிறதா, இவை எல்லாம் நடக்குமா?
நடந்தாய் வாழி காவேரி என்றுதான் சிலப்பதிகாரம் சொல் கிறது. கங்கை-காவேரி இணைப்பு பற்றி நேரு காலத்தில் பேச்சு தொடங்கியது. இப்போது காவிரி- கோதாவரி இணைப்பு பற்றி மோடி காலத்து பட்ஜெட் தெரிவிக் கிறது. மோடி அரசின் திட்டத் திற்கு தெலங்கானா மாநிலம் எதிர்ப்புக்குரல் தெரிவிக்கிறது. இரண்டு அல்லது அதற்கு மேற் பட்ட மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறுகளை இணைக்கும் போது அந்தந்த மாநில நலனும் முக்கியமானதாகக் கருதப்பட வேண்டும். ஆறுகளின் குறுக்கே உள்ள அணைகளைத் தன் கட்டுப் பாட்டில் கொண்டு செல்ல நினைக்கும் ஒன்றிய அரசு எந்தள வுக்கு மாநிலங்களின் நலனையும் உரிமையையும் மதிக்கிறதோ, அதற்கேற்பத்தான் நதிகள் இணைப்பு நிறைவேறும். ஒரே மாநிலத்திற்குள் இருக்கும் ஆறுகளை இணைக்கும் பணியை முதலில் தொடங்கலாம்.
மல்லிகா, சென்னை-78
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கைகளை வேட்பாளராக்கியுள்ள அரசியல் கட்சிகள் பற்றி?
உள்ளாட்சித் தேர்தல் களத் தில் 33% என்றிருந்த பெண்களுக் கான இடஒதுக்கீடு, 50% என உயர்ந்துள்ள நிலையில், கட்சி களின் ஆண் நிர்வாகிகள் வீட்டுப் பெண்களே வேட்பாளர்களாக நிற் கின்ற நிலைமை பெரும்பாலான இடங்களில் உள்ளது. இந்நிலை யில், தி.மு.க.-அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் ஒன்றிரண்டு திரு நங்கையர் வேட்பாளராக்கப்பட்டி ருப்பது கவனத்திற்கும் வரவேற்புக் கும் உரியது. சமூகத்தால் புறக் கணிக்கப்பட்ட மாற்றுப் பாலினத் தவர் பொதுத் தளத்திற்கு வரும் போது, மக்கள் தொகையில் சரி பாதியாகவும் அதற்கு மேலும் இருக் கக்கூடிய பெண்களும் தனிப்பட்ட முறையில் நேரடி அரசியலில் ஈடு படுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72
தமிழிசை, முருகன், அண்ணாமலை மூவரில் தமிழக பா.ஜ.க. தலைவராக யார் மக்களைக் கவர்ந்தவர்?
மூவருமே தமிழ்நாட்டைக் கவர்ந்துவிட வேண்டும் என நினைத்தவர்கள். மக்கள் அதற்கு இடம் தரவில்லை.