மாவலி பதில்கள்

dd

ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில்

மத்தியில் உள்ள பா.ஜ.க.வின் மதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறதா அல்லது ஏறுமுகத்தில் செல்கிறதா?

ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை. எதிர்க்கட்சிகள் வலிமையாகவும் ஒற்றுமையாகவும் இல்லாத நாட்டில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசுக்கும், ஆளுநருக்கும் வெளிப்படையாக கருத்து மோதல் நடைபெறுவது பற்றி?

ஒன்றிய அரசின் விருப்பத்திற்கேற்ற நபரே ஆளுநராக நியமிக்கப்படுவது வழக்கம். அதனால் மாநில அரசுகளுடனான அவரது உறவு, ஒன்றிய அரசின் மனநிலையைப் பொறுத்தே அமையும். ஒரு சிலர், மாநில முதல்வருடன் நட்புறவில் இருப்பதும் உண்டு. 1976-ல் ஜனவரி தொடக்கத்தில் முதல்வர் கலைஞருடன் நல்லுறவில் இருந்த ஆளுநர் கே.கே.ஷா, அதே ஜனவரி கடைசியில் தி.மு.க. அரசைக் கலைக்கும் இந்திராகாந்தி அரசின் நடவடிக்கைக்குத் துணை போனார். 1991-ல் ஆளுநராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலா தி.மு.க ஆட்சியைக் கலைக்க சம்மதிக்க முடியாது என்று உறுதியாக இர

ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில்

மத்தியில் உள்ள பா.ஜ.க.வின் மதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறதா அல்லது ஏறுமுகத்தில் செல்கிறதா?

ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை. எதிர்க்கட்சிகள் வலிமையாகவும் ஒற்றுமையாகவும் இல்லாத நாட்டில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசுக்கும், ஆளுநருக்கும் வெளிப்படையாக கருத்து மோதல் நடைபெறுவது பற்றி?

ஒன்றிய அரசின் விருப்பத்திற்கேற்ற நபரே ஆளுநராக நியமிக்கப்படுவது வழக்கம். அதனால் மாநில அரசுகளுடனான அவரது உறவு, ஒன்றிய அரசின் மனநிலையைப் பொறுத்தே அமையும். ஒரு சிலர், மாநில முதல்வருடன் நட்புறவில் இருப்பதும் உண்டு. 1976-ல் ஜனவரி தொடக்கத்தில் முதல்வர் கலைஞருடன் நல்லுறவில் இருந்த ஆளுநர் கே.கே.ஷா, அதே ஜனவரி கடைசியில் தி.மு.க. அரசைக் கலைக்கும் இந்திராகாந்தி அரசின் நடவடிக்கைக்குத் துணை போனார். 1991-ல் ஆளுநராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலா தி.மு.க ஆட்சியைக் கலைக்க சம்மதிக்க முடியாது என்று உறுதியாக இருந்தார். அவரது கையெழுத்து இல்லாமலேயே ஆட்சி கலைக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு கவர்னர் பீஷ்மநாராயணசிங் ஆதரவாக இருந்தார். சென்னாரெட்டி சவாலாக இருந்தார். டான்சி வழக்கில் தண்டனை பெற்றிருந்த ஜெயலலிதாவை வலிந்து பதவியேற்கச் செய்து, உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானார் ஆளுநர் ஃபாத்திமா பீவி. கவர்னர்கள் ரோசையா, பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டவர்கள் அவர்களை நியமித்த ஒன்றிய அரசின் மன ஓட்டத்தைப் பிரதிபலித்தார்கள். ஆர்.என்.ரவி அதை இன்னும் வெளிப்படையாகச் செய்கிறார்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

"கசப்பான உண்மை என்னவென்றால் இந்தியர்கள் பலர் பெண்களை மனிதராக கருதுவதில்லை. இந்த வெட்கக்கேடான உண்மை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும், மற்றும் வெளிக்கொணரப்பட வேண்டும்'' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளாரே?

இந்தியாவில் பெண்களைத் தெய்வத்துக்கு இணையாக ஆண்கள் போற்றுவார்கள். அந்த தெய்வத்துக்கு வடிவம் கொடுத்து சிலையாக வடிப்பதும் ஆண்கள்தான். அந்த தெய்வத்தைக் கோயிலுக்குள்ளேயே வைத்திருப்பதும் ஆண்கள்தான். தெய்வத்திற்கு அபிஷேகம் -அலங்காரம் -அர்ச்சனை செய்வதும் ஆண்கள்தான். தெய்வத்தை எப்போது தெருவுக்கு அழைத்து வருவது என்பதைத் தீர்மானிப்பதும் ஆண்கள்தான். பெண்களைத் தெய்வ நிலையில் வைத்து, மனிதத்தன்மையை மறுக்கும் வழக்கம் மாறுகின்ற காலம் உருவாக வேண்டும்.

செந்தில்குமார், சென்னை-78

"மத்திய பட்ஜெட் மக்களின் வாழ்வில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது'' என்கிறாரே கமல்?

பட்ஜெட் என்பது நிதி நிலைமைக்கேற்ப வெளியிடப்படுகிற நிதிநிலை அறிக்கை. திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் நிதியை எப்படித் திரட்டுகிறது அரசு என்பதைப் பொறுத்தே பட்ஜெட்டால் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சத்துணவுத் திட்டம், மருத்துவக் காப்பீடு, 108 ஆம்புலன்ஸ், அம்மா உணவகம், 100 நாள் வேலைத்திட்டம் போன்ற அரசுத் திட்டங்கள் அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கியுள்ளன. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் எளிய மக்களின் நலனைத் தேட வேண்டியிருப்பதைக் கமலும் கண்டறிந்துள்ளார்.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

இங்கிலாந்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடும்போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்கின்றனர்... தமிழகத்தில் நேர் எதிராக நடக்கிறதே?

தேர்தல் ஜனநாயகத்தில் முன்னோடியானது இங்கிலாந்து. காலந்தோறும் அங்கே உரிமைகள் நிலைநாட்டப்படுவது வழக்கம். பதவியேற்பு உறுதிமொழியில் கடவுளின் பெயரால் என்கிற வார்த்தைகளைப் போல, உளப்பூர்வமாக என்ற வார்த்தையையும் சேர்க்க வேண்டும் என்கிற உரிமைப் போராட்டம் நெடுங்காலம் நடந்து நிறைவேறியது. உரிமையை அங்கீகரிக்கின்ற நாடு என்பதால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். மாநில உரிமைகள் -மக்கள் உரிமைகள் இவற்றைப் புறக்கணிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ள இந்திய ஒன்றிய அரசின் நிர்வாகத்தில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் அத்தகைய மரியாதையை எதிர்பார்க்க முடியாது.

mm

வாசுதேவன், பெங்களூரு

லதா மங்கேஷ்கரின் மறைவு?

இந்தித் திரையுலகில் சிறகடிக்கத் தொடங்கி, இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் பாடிய இசைக்குயில், தமிழில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி.யுடன் இணைந்து அவர் பாடிய ‘"வளையோசை கலகல...'’ பாடல் தமிழர்களின் நெஞ்சங்களில் இன்னமும் ஒலிக்கிறது. ஆனால், அதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தி திரையுலகின் இசை ஜாம்பவானான நௌஷத் இசையில் உருவான இந்திப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டபோது, அதிலும் பின்னணி குரல் கொடுத்தவர் லதா மங்கேஷ்கர்தான். வானரதம் என்ற பெயரில் வெளியான டப்பிங் படத்தின் பாடல்கள் நம்மை வானத்தில் மிதக்க வைக்கும். லதா மங்கேஷ்கர் வான ரதத்தில் ஏறிவிட்டார். அவர் மறைந்தாலும்... அவரது குரல் இன்னும் பல தலைமுறைகளுக்கு இங்கே ஒலித்துக் கொண்டிருக்கும்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

உறவுகளை தக்கவைத்துக்கொள்ள நடிக்கத்தான் வேண்டுமா?

வாழ்க்கை ஒரு நாடகம். அதில் ஆளுக்கொரு பாத்திரம். அதற்கேற்ப நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அந்த நடிப்பு இயல்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் உறவுகள் நிலைக்கும். இல்லையென்றால் துறவு நிலையில்தான் வாழ வேண்டும்.

nkn120222
இதையும் படியுங்கள்
Subscribe