மாவலி பதில்கள்

mm

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தவறியதி-ருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே அ.தி.மு.க.வினர் மீது ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்கிறாரே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி?தவறான தகவல்களை பரப்பி வெளிநாடுகளில் இந்தியாவின் பெயரைக் கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கிறது என்கிறாரே பிரதமர் மோடி?

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்களுடைய தவறுகளுக்கு எதிர்த்தரப்பு மீது பழி போடுவது என்பது அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. அதை இம்முறை இவர்கள் இருவரும் செயல்படுத்தியுள்ளார்கள். கொரோனா மூன்றாவது அலையை இந்தியா திறமையாகக் கட்டுப்படுத்தி யுள்ளது எனத் தமிழ்நாட்டையும் சேர்த்துதான் பிரதமர் பேசி வருகிறார். எடப்பாடியோ சேம் சைடு கோல் அடித்திருக்கிறார்.

தா.விநாயகம், ராணிப்பேட்டை

தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தவறியதி-ருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே அ.தி.மு.க.வினர் மீது ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்கிறாரே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி?தவறான தகவல்களை பரப்பி வெளிநாடுகளில் இந்தியாவின் பெயரைக் கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கிறது என்கிறாரே பிரதமர் மோடி?

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்களுடைய தவறுகளுக்கு எதிர்த்தரப்பு மீது பழி போடுவது என்பது அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. அதை இம்முறை இவர்கள் இருவரும் செயல்படுத்தியுள்ளார்கள். கொரோனா மூன்றாவது அலையை இந்தியா திறமையாகக் கட்டுப்படுத்தி யுள்ளது எனத் தமிழ்நாட்டையும் சேர்த்துதான் பிரதமர் பேசி வருகிறார். எடப்பாடியோ சேம் சைடு கோல் அடித்திருக்கிறார்.

தா.விநாயகம், ராணிப்பேட்டை

தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது வரவேற்கத் தக்கதுதானே?

எதுவும் கட்டாயமாக திணிக்கப்படக்கூடாது. அதே நேரத்தில், அரசியலுக்காக இல்லாததையும் திணிக்கக்கூடாது. ஏற்கனவே பா.ஜ.க, சங்கரமடம் பேச்சைக் கேட்டு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி மண்ணைக் கவ்வியதால், மதமாற்றத் தடைச் சட்டத்தை திரும்பப் பெறுவதாக யூ-டர்ன் அடித்த வீராதி வீரமங்கை அவர். அதன்பிறகு, 2006 தி.மு.க ஆட்சியில் அந்த சட்டம் முறையாகத் திரும்பப் பெறப்பட்டது. தமிழ்நாட்டில் மதமாற்றம் கட்டாயமாக்கப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட் டால், சட்டத்திற்குத் தேவை இருக்கும். இப்போதைய தேவை, நீட் எனும் கட்டாய நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்தான். அதனைப் பெற்றுத் தர அண்ணாமலைகள் முன்வருவார்களா?

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

"தீரமிக்க வீரர்களுக்காக எரிந்த அணையாதீபம் அணையப்போவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தேசபக்தியையும் தியாகத்தையும் புரிந்துகொள்ள முடியாது. நமது வீரர்களுக்காக மீண்டும் நாம் அணையாதீபம் ஏற்றுவோம்'' என்று ராகுல்காந்தி கூறியுள்ளது?

பாகிஸ்தானுடனான போரில் பெற்ற வெற்றிக்காகத் தன்னை அர்ப்பணித்த வீரர்களுக்காக புதுடெல்லி இந்தியா கேட் பகுதியில் ஏற்றப்பட்டிருந்த அணையா ஜோதியை, புதிதாகக் கட்டப்பட்டுள்ள நினைவிடத்திற்கு மாற்றியிருக் கிறது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. இந்திராகாந்தி ஆட்சிக்காலத்து அணையாஜோதி என்பதால்தான் அந்த இடமாற்றம். டெல்லிகேட் பகுதியில் லேசரில் நேதாஜி சிலையை மோடி திறந்திருப்பதும், குடியரசு தின அணிவகுப்பில் நேதாஜி உருவம் கொண்ட மேற்குவங்க ஊர்தி அனுமதிக்கப்படவில்லை என்ற மம்தாவின் கோபக்குரலின் வெளிப்பாடுதான். பா.ஜ.க.வுக்கென தியாக வரலாறு கிடையாது. அடுத்தவர் வரலாற்றில் ஸ்டிக்கர் ஒட்டும் அரசியல் மட்டுமே அதன் குணாம்சம்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

தென்கிழக்கு ஆசியாவில் 5 நாட்டு பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கை அமைக்க இருப்பதாக முதல்வர் அறிவித்து இருக்கிறாரே..?

தமிழுக்கு இந்திய ஒன்றிய அரசின் செம்மொழித் தகுதி கிடைத்தபோதே, உலகளாவிய பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் உருவாக்கப்படும் என்பது தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசியல் காரணங்களால் செம்மொழி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் முடக்கப்பட்டிருந்ததால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைக்கான நிதிக்காக தமிழார்வலர்கள் கையேந்த வேண்டிய நிலை இருந்தது. தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றம், செம்மொழி நிறுவனத் தை உயிர்ப்பித் திருப்பதால், ஆசியப் பல்கலைக்கழங்களில் தொடங்கி, தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

mm

வாசுதேவன், பெங்களுரு

பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற தந்தையர்கள் போல் அவர்களது தனயன்களால் புகழ் அடைய முடிவதில்லையே?

கிரிக்கெட்டில் முதல் செஞ்சுரி அடித்த லாலா அமர்நாத்தைப் போல நிதானமாகவும் சிறப்பாகவும் ஆடி பெயர் எடுத்த மொகிந்தர் அமர்நாத், சினிமாவில் சிவகுமாரின் பெயரைக் காப்பாற்றி முன்னேறும் சூர்யா, அரசியலில் கலைஞரின் கொள்கையை நிலைநாட்டி வெற்றிகண்ட மு.க. ஸ்டாலின், வியாபாரத்தில் திருபாய் அம்பானியைத் தூக்கிச் சாப்பிட்ட முகேஷ் அம்பானி என, தந்தை வழியில் சாதித்துப் புகழ்பெற்ற தனயர்களும் உண்டு.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

உதயநிதிக்கு தி.மு.க. அமைச்சரவையில் துணை முதல்வர், அமைச்சர் பதவி அளிப்பது தி.மு.க.வுக்கு பலமா? பலவீனமா?

அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அதன்பிறகு, சித்தப்பா என்று மக்கள் ஏற்றுக்கொள் கிறார்களா, இல்லையா என்பது தெரிந்துவிடும்.

nkn290122
இதையும் படியுங்கள்
Subscribe