மாவலி பதில்கள்

gg

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் மட்டும் பணியில் நீடிக்கலாம், மற்றவர்கள் விலகிக்கொள்ளலாம் என்ற பொதிகை தொலைக்காட்சியின் அறிவிப்பு குறித்து?

பொதிகைக்கு இந்தித் திணிப்பு புதிதல்ல. பொதிகை மட்டுமே இருந்த காலத்தில் டி.வி. பெட்டியை உடைத்துப் போராட்டம் நடத்திய கட்சிக்காரர்கள் இப்போது, பொதிகைக்குப் பதில் வேறு சேனல்களுக்கு ரிமோட் மூலம் மாறிவிடுகிறார்கள். பொதிகையும் அதனை நிர்வகிக்கும் ஒன்றிய அரசும் மாறாமலேயே இந்தியைத் திணித்துக்கொண்டிருக்கிறது. திணிப் பது எதுவுமே வாந்தியாகத்தான் வெளியேறும்.

பி.மணி, குப்பம் -ஆந்திரா

அமெரிக்காவில் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை நிகழ்த்தியிருப்பது குறித்து?

அறிவியல் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது. அந்த அறிவியலைக் கையாள்வது மனித மூளையே. புராணங்களில்கூட உடல் உறுப்பு மாற்றம் பற்றிய கதை கள் உண்டு. அதனை நடைமுறைப்படுத்தியது நவீன மருத்த

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் மட்டும் பணியில் நீடிக்கலாம், மற்றவர்கள் விலகிக்கொள்ளலாம் என்ற பொதிகை தொலைக்காட்சியின் அறிவிப்பு குறித்து?

பொதிகைக்கு இந்தித் திணிப்பு புதிதல்ல. பொதிகை மட்டுமே இருந்த காலத்தில் டி.வி. பெட்டியை உடைத்துப் போராட்டம் நடத்திய கட்சிக்காரர்கள் இப்போது, பொதிகைக்குப் பதில் வேறு சேனல்களுக்கு ரிமோட் மூலம் மாறிவிடுகிறார்கள். பொதிகையும் அதனை நிர்வகிக்கும் ஒன்றிய அரசும் மாறாமலேயே இந்தியைத் திணித்துக்கொண்டிருக்கிறது. திணிப் பது எதுவுமே வாந்தியாகத்தான் வெளியேறும்.

பி.மணி, குப்பம் -ஆந்திரா

அமெரிக்காவில் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை நிகழ்த்தியிருப்பது குறித்து?

அறிவியல் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது. அந்த அறிவியலைக் கையாள்வது மனித மூளையே. புராணங்களில்கூட உடல் உறுப்பு மாற்றம் பற்றிய கதை கள் உண்டு. அதனை நடைமுறைப்படுத்தியது நவீன மருத்துவ அறிவியல். இரத்த தானம் செய்வதற்கே தயங்கிய மனிதர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண் தானம், உறுப்புகள் தானம், உடல் தானம் எனப் படிப்படியாக வளர்ச்சியைக் கண்டது மருத்துவ அறிவியல். மூளைச்சாவு அடைந்த சிறுவன் ஹிதேந்திர னின் இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு சிறுமி அபிராமிக்குப் பொருத்தப்பட்டதைத் தமிழ்நாடு பிரமிப்புடன் பார்த்தது. சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற முக்கியமான உறுப்புகளை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றும்போது ரத்த வகை உள்பட பலவும் பொருத்தமாக இருக்கவேண்டும். நெருங்கிய உறவினர்களிடமிருந்தே இவை பெரும்பாலும் சாத்தியப்படுகின்றன. இந்த நிலையில்தான், மனித உடலுக்குப் பொருந்தக்கூடிய அளவுக்கு பன்றியின் மரபணு மாற்றப்பட்டு, அதன் இதயத்தை உடல் நலிவுற்ற மனிதருக்குப் பொருத்தி, இயங்க வைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். பன்றி என்பதை இழிவாகப் பயன்படுத்துவது மனிதர்களின் வழக்கம். அந்த மனிதர்களுக்காகத் தன்னை தியாகம் செய்துள்ளது பன்றி. சாதனை புரிந்துள்ளது மருத்துவம்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

எம்.ஜி.ஆர். பற்றி சில வார்த்தைகள்..?

வாரி வழங்கிய வள்ளல் -ஏழைகள் மீது அன்பு கொண்டவர் -மக்களைக் கவர்ந்த நாயகர் -திரையிலும் அரசியலிலும் கடைசிவரை வெற்றி பெற்றவர். மரணத்திலும் தன் ஒப்பனை கலையாமல் கச்சிதமாக இருந்தவர்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

சீனாவில் கொரோனா பாதித்த நபர்களை உலோக பெட்டியில் வைத்து அடைக்கிறார்களே?

தன்னுடைய நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதில் சீனா ரொம்ப கவனமாக இருக் கும். தற்போது பரவும் கொரோனா அலை குறித்த அதன் வேகமான நடவடிக்கைகள், வெவ்வேறு செய்தியாக வெளிப்படுகின்றன. வீடு, வீடாகச் சென்று உலோகப் பெட்டியில் அடைக்கிறார்கள் என்று ஒரு செய்தி. வீடு வீடாக காய்கறி, அரிசி, சமையல் எண்ணெய் அடங்கிய பெட்டியைத் தருகிறார்கள் என ஒரு செய்தி. இன்னும் பல செய்திகள். கொரோனா முதல் அலையின்போது, தமிழ்நாட்டில் பல வீடுகளின் வாசல் பகுதி யில் தகரம் வைத்து அடைத்த நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. மாஸ்க் அணியாமல் உண்மையான முகத்துடன் மக்கள் நடமாடும் காலம்வரை கொரோனா காலத்து முகமூடிக் கதைகள் உலவிக்கொண்டுதான் இருக்கும்.

வாசுதேவன், பெங்களூரு

தாய், சேய் என்றதும் கண்முன் தோன்றும் ஓவியம் அல்லது புகைப்படம்?

இயக்குநரும் பத்திரிகையாளருமான கே.பாக்யராஜ் 1990-களின் தொடக்கத்தில் தனது பத்திரிகையின் கேள்வி- பதில் பகுதியில் தாய்-சேய் பாசம் பற்றி ஒரு காட்சியை விளக்கியிருந்தார். ஓர் ஊரில் பூகம்பம் ஏற்படுகிறது. கட்டடங்கள், மனிதர்கள் எல்லாரும் மண்ணுக்குள் புதைகிறார்கள். ஒரே புழுதி மயம். புழுதி அடங்கிய பிறகு பார்த்தால், பூமிக்குள் புதைந்த ஒரு பெண்ணின் கை மட்டும் வெளியே தெரிகிறது. அந்தக் கையில் அவரது குழந்தை இருக்கிறது. தன் உயிர் போகும் நேரத்திலும் குழந்தையைக் காப்பாற்றிய தாயுள்ளத்தை விவரித்திருந் தார் பாக்யராஜ். தாய்-சேய் பாசம் இயற்கையானது. மாறாதது. கவிஞர் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் எழுதி நக்கீரன் ஆசிரியர் அணிந்துரை வழங்கியுள்ள "அம்மாவின் கட்டைப் பை'’ கவிதைத் தொகுப்பில் அம்மாவின் பாசமும் சேயின் நேசமும் அழகான கவிதைகளால் வாசம் வீசுகிறது. கொஞ்சம் இருமினாலே/ பதறிப்போவார் அம்மா/ திப்பிலி வறுத்து பொடி செய்து/ காரவெத்தலை அரைத்து/ தேன்கலந்து குடிக்கக் கொடுப்பார்/ இதுவே அம்மாவுக்கு ஒன்றென்றால்/ அவர் எனக்கு குழந்தை யாவார்/ நான் அவருக்கு அன்னையாவேன்/

mm

வாசுதேவன், பெங்களூர்

பிரபலங்களிடம் அதிகரித்துவரும் விவாகரத்துகள்?

மனிதர்கள் எல்லாருக்கும் பசி, தூக்கம், உணர்ச்சிகள் கொண்ட வாழ்க்கை உண்டு. பிரபலங்களின் திருமண வாழ்க்கையும் எளிய மனிதர் களைப் போன்ற உணர்ச்சிகளைக் கொண்டதுதான். அதைப் பிரபலமாக்கிப் பார்க்கும் மனித மனது, அவர்களின் விவாகரத்தைத் தலைப்புச் செய்தியாகப் பார்க்கிறது. வாழவும் பிரியவும் சுதந்திரம் அளித்துள்ளது சட்டம். அவ்வளவுதான்.

nkn220122
இதையும் படியுங்கள்
Subscribe