மாவலி பதில்கள்!

mm

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

நீட் தேர்வு தேவையற்றது என்று சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறாரே தமிழக கவர்னர்?

சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியின் கொள்கை விளக்கமாக அமையும் உரையைப் படித்த கவர்னர், நீட் தேவையற்றது என்கிறார். ஆளுங்கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் அடங்கிய பெரும்பாலான கட்சிகள் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை இன்னமும் ராஜ்பவனிலேயே பூட்டி வைத்திருக்கிறார் அதே ஆளுநர்.

mm

த.சிவாஜி மூக்கையா, சென்னை-44

கக்கனும் காமராஜரும் உயிரோடு வந்தால்...?

எந்த அதிர்ச்சியும் அடையமாட் டார்கள். ஏனென்றால், அவர்கள் இருந்த காங்கிரஸ் கட்சியில் கோடிக்கணக்கான தொண்டர்கள், லட்சக்கணக்கான நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான தலைவர்கள் இருந்தபோதும் இன்றுவரை ஒரு காமராஜர், ஒரு கக்கனைத்தான் உதாரணமாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். அரசியல் எப்போதும் அப்படித்தான் என்பது அவர்களுக்குத் தெரியும். அத்து டன், அரசியலுக்கு எளிமையை விட, வலிமையே தே

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

நீட் தேர்வு தேவையற்றது என்று சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறாரே தமிழக கவர்னர்?

சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியின் கொள்கை விளக்கமாக அமையும் உரையைப் படித்த கவர்னர், நீட் தேவையற்றது என்கிறார். ஆளுங்கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் அடங்கிய பெரும்பாலான கட்சிகள் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை இன்னமும் ராஜ்பவனிலேயே பூட்டி வைத்திருக்கிறார் அதே ஆளுநர்.

mm

த.சிவாஜி மூக்கையா, சென்னை-44

கக்கனும் காமராஜரும் உயிரோடு வந்தால்...?

எந்த அதிர்ச்சியும் அடையமாட் டார்கள். ஏனென்றால், அவர்கள் இருந்த காங்கிரஸ் கட்சியில் கோடிக்கணக்கான தொண்டர்கள், லட்சக்கணக்கான நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான தலைவர்கள் இருந்தபோதும் இன்றுவரை ஒரு காமராஜர், ஒரு கக்கனைத்தான் உதாரணமாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். அரசியல் எப்போதும் அப்படித்தான் என்பது அவர்களுக்குத் தெரியும். அத்து டன், அரசியலுக்கு எளிமையை விட, வலிமையே தேவை என்பதையும் அறிந்தவர்கள் அவர்கள்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

"இந்திய நாட்டின் முகத்தை மாற்றியவர் மோடி' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவது பற்றி?

இந்திய வரைபடம் என்பது ஒற்றைக் காலில் தவம் செய்யும் மனிதர் போன்ற தோற்றம் கொண்டது. குமரிமுனை அந்த ஒற்றைக் கால் என்றால், மராட்டியமும் குஜராத்தும் வலது கை, வங்காளமும் வடகிழக்கு மாநிலங்களும் இது கை. ஜம்மு-காஷ்மீர்தான் தலையும் முகமும். அந்த முகத்தை மோடி அரசு மாற்றிவிட்டதே! மாநிலமாக இருந்த நிலப்பரப்பை இரண்டு யூனியன் பிரதேசங்களாக சுருக்கிவிட்டது. அதுமட்டுமல்ல, இந்திய எல்லையில் சீனா கட்டிவரும் கட்டடங் களையும் கிராமங்களையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. அப்படியென்றால் இந்திய நாட்டின் முகம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதானே அர்த்தம்! மோடியை, அமித்ஷா இப்படி கலாய்ப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

மஞ்சுளா சிவலிங்கம், தரமணி

பிரதமர் மோடியின் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு பற்றி?

மாநில அரசின் பங்களிப்புடன் கூடிய 11 மருத்துவக் கல்லூரிகளை ஒரே நாளில் திறந்து வைத்து, தனது சாதனையை, தானே முறியடித்திருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார். ஆனால், ஒன்றிய அரசின் நேரடி நிர்வாகத்தில் வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த ஆட்சியில் அடிக்கல் நாட்டியவர், இந்த ஆட்சியிலும் திறந்தபாடில்லை. அவரது இந்த சாதனையை நாம்தான் சொல்ல வேண்டும்.

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர்

முகக் கவசம், தனி மனித இடைவெளி, தடுப்பூசி பற்றி பேசத் தொடங்கினால்... "உன் வேலை என்னவோ அதைப்போய் பாரு' எனச் சொல்கிறார்களே?

அறிவுரைகள் கசப்பானவை. அனுபவங்கள் தரும் படிப்பினைகளே சிலருக்கு உண்மையை உணர்த்தும். "முகக்கவசம் அணியாவிட்டால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்காவிட்டால் ரயிலில், பஸ்ஸில், ரேஷன் கடையில், தியேட்டரில் அனுமதியில்லை' என அரசு அறிவித்தால், உங்கள் அறிவுரையை அலட்சியப்படுத்தியவர்கள் யூ-டர்ன் அடித்துவிடுவார்கள்.

டி. சந்திரன், ஈரோடு

இளம் பருவத்தினர் எண்ண இயலாத அளவு தீய செயல்களை துணிவுடன் செய் கிறார்களே? நாம் எங்கு தவறுகிறோம்?

பண்பாடு என்ற பெயரில் உண்மைகளை மூடி மறைத்தல், நாகரிகம் என்ற பெயரில் தேவையற்றவைகளைப் பழகிக்கொள்தல், வளர்ச்சி என்ற பெயரில் அநாவசியங்களை வாங்கிக் குவித்தல்... இவை இளம் பருவத்தினரின் தீய செயல்களுக்கு எளிய வழிகளாகிவிடுகின்றன. இப்போது மட்டுமல்ல, அந்தந்த காலத்திலும் இளம்பருவத்தினரை திசை திருப்பும் செயல்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருந்தன. காலத்தின் இயல்பினை அறிந்து, நல்வழிப்படுத்த வேண்டியது நம் கடமை.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனை புதூர் -தேனி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது பாதுகாப்பானதா?

அவர் உடல்நலனுக்கு அது மிகவும் பாது காப்பானது. செல்ஃபி எடுக்க விரும்புகிறவர்களுக்கு வசதியானது. மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில் முதல்வருக்குத் தேவை யானது. 68 வயதில் முதல்வரின் சைக்கிள் பயிற்சி, இளைய தலைமுறைக்கு வழி காட்டக்கூடியது. நீங்கள் கேட்கும் பாதுகாப்பை காவல்துறை கவனித்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்.

அயன்புரம் சத்யநாராயணன், சென்னை-72

ஆவலாய் எதிர்பார்த்த புத்தகக் கண்காட்சி தள்ளிப் போடப்பட்டது குறித்து ?

தமிழர் திருநாளான பொங்கலில் தமிழ்நாட் டின் தலைநகரில் மற்றொரு சிறப்பு, அறிவுக் களஞ்சியமான புத்தகக் காட்சி. கொரோனா மூன்றாவது அலை அதனைத் தள்ளிப் போட வைத்துவிட்டது. பதிப்பாளர்கள், புத்தக விற்பனை யாளர்கள், வாசகர்கள் என முத்தரப்புக்குமான பாதிப்பு இது. எனினும், அறிவுச் செல்வத்திற்கு எந்நாளும் பாதிப்பில்லை. ஊரடங்கு தளர்ந்ததும் புத்தகக் பூக்கள் மலர்ந்து மணம் வீசும்.

பொன்விழி, அன்னூர்.

தமிழக நடிகர் சங்கம் செயல்படுகிறதா?

அதன் பெயர் தென்னிந்திய நடிகர் சங்கம். அதில் நடப்பது ஸ்டார் வார்.

nkn190122
இதையும் படியுங்கள்
Subscribe