மாவலி பதில்கள்

mv

எஸ்.மோகன், கோவில்பட்டி

ஒரு கவர்னர் இரண்டு மாநிலங்களைப் பார்த்துக் கொள்வது அவசியமா?

எதற்கு சுற்றி வளைத்து கேட்குறீங்க. எம்.பி. தேர்தலில் தோற்ற தமிழிசை அக்காவுக்கு தெலங்கானா மாநிலத்தை மட்டும் கொடுத்துவிட்டு, எம்.எல்.ஏ. தேர்தலில் தோற்ற அண்ணாமலையை புதுச்சேரி யூனியனுக்கு அனுப்பணும்... அதானே!

ப.பாலா(எ)பாலசுப்பிரமணி, பாகாநத்தம்

காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் இன்னமும் அ.தி.மு.க பாசம் குறையவில்லையாமே?

அ.தி.மு.க. ஆட்சி என்றால் ஆளுங்கட்சிக்காரர்களின் நேரடித் தலையீடு இருக்காது என்கிற பொதுவான பெயர் உண்டு. எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்பதுபோல, எல்லாத்தையும் அம்மா பார்த்துக் கொள்வார் என நம்பப்பட்டது. அதனால், போலீஸ் துறையிலும் மற்ற அரசுத் துறைகளிலும் அதிகாரிகள் காட்டில் அடைமழைதான். பாலியல் புகார்கள், தனிப்பட்ட புகார்கள் என்றால்தான் நடவடிக்கை இருக்கும். மற்றபடி, வருமானங்களில் பர்சன்டேஜ் சரியாக அளக்கும் அதிகாரிகள் நியாயவான்க

எஸ்.மோகன், கோவில்பட்டி

ஒரு கவர்னர் இரண்டு மாநிலங்களைப் பார்த்துக் கொள்வது அவசியமா?

எதற்கு சுற்றி வளைத்து கேட்குறீங்க. எம்.பி. தேர்தலில் தோற்ற தமிழிசை அக்காவுக்கு தெலங்கானா மாநிலத்தை மட்டும் கொடுத்துவிட்டு, எம்.எல்.ஏ. தேர்தலில் தோற்ற அண்ணாமலையை புதுச்சேரி யூனியனுக்கு அனுப்பணும்... அதானே!

ப.பாலா(எ)பாலசுப்பிரமணி, பாகாநத்தம்

காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் இன்னமும் அ.தி.மு.க பாசம் குறையவில்லையாமே?

அ.தி.மு.க. ஆட்சி என்றால் ஆளுங்கட்சிக்காரர்களின் நேரடித் தலையீடு இருக்காது என்கிற பொதுவான பெயர் உண்டு. எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்பதுபோல, எல்லாத்தையும் அம்மா பார்த்துக் கொள்வார் என நம்பப்பட்டது. அதனால், போலீஸ் துறையிலும் மற்ற அரசுத் துறைகளிலும் அதிகாரிகள் காட்டில் அடைமழைதான். பாலியல் புகார்கள், தனிப்பட்ட புகார்கள் என்றால்தான் நடவடிக்கை இருக்கும். மற்றபடி, வருமானங்களில் பர்சன்டேஜ் சரியாக அளக்கும் அதிகாரிகள் நியாயவான்களாகவே சித்தரிக்கப்பட்டார்கள். ஒருநாள் அந்த அம்மா, திடீரென ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார். கல் நெஞ்சக் காய்ச்சல், அவர் மறுபடியும் அம்மாவாக வர முடியாதபடி செய்துவிட்டது. மிச்சமிருந்த 4 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த எல்லாருடைய காட்டிலும் மழை. மேய்ப்பார் இல்லாத ஆடுகளாக மேய்ந்தன. அந்த நன்றி ருசி இன்னமும் நாக்கில் இருக்கிறது. அதற்கேற்ப அசை போடுகின்றன. ஆட்சி வந்தும் நமக்கு இன்னும் சரியாக வந்தபாடில்லையே என தி.மு.க. நிர்வாகிகள் ஜெலுசில் குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

மதச்சாயம் என்றால் என்ன? அதற்கும் நாடகத்தில் பூசப்படும் அரிதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?

நாடக அரிதாரம் மேடைக்கு. மதச்சாயம் ஓட்டு அரசியலுக்கு. ஒரிஜினல் கலர் பளிச்சென இல்லாவிட்டால், மக்களை ஈர்ப்பதற்கு அரிதாரமும் பயன்படும். மதச்சாயமும் பயன்படும். ஒரு நாள் கூத்துக்கான அரிதாரம், பொழுது விடிந்தால் கலைந்துவிடும். ஓட்டுக்கான மதச்சாயம், தலைமுறைகளின் நெஞ்சில் விஷச் செடியாக படரும்.

mavalianswers

த.சிவாஜி மூக்கையா, சென்னை-44

எம்.ஜி.ஆருக்கு சமமாக ரசிகர்களை வைத்திருந்தார் சிவாஜி. ஆனால், அரசியலில் தோற்றது ஏன்?

சிவாஜிக்கு நடிக்கத் தெரியும். அரசியல் நுணுக்கங்கள் தெரியவில்லை. எம்.ஜி.ஆரால் சிவாஜி அளவுக்கு நடிக்க வராது. ஆனால், அரசியலின் சின்னச் சின்ன நுணுக்கங்களையும் நன்றாகக் கற்று வைத்திருந்தார். அண்ணா, கலைஞர் நாடகங்களில் நடித்து பெரியாரால் "சிவாஜி' என்ற பட்டம் பெற்று, திராவிட இயக்கத்தினருடன் பயணித்தவர், ஒரு கட்டத்தில் திருப்பதிக்குப் போனதால் விமர்சிக்கப்பட்டு கட்சியிலிருந்து விலகும் நிலைமைக்கு ஆளானார். எம்.ஜி.ஆரும் கலைவாணர், கலைஞர் உள்ளிட்டவர்களு டன் பழகிய திரைக்கலைஞர்தான். தி.மு.க.வின் கொள்கையையும் அதன் வளர்ச்சியையும் கவனித்தார், கணித்தார்... கட்சியில் இணைந்தார். அண்ணாவின் அன்பைப் பெற்றார். தனது படங்களில் தி.மு.க. கொடியை, சின்னத்தை, கட்சிப் பத்திரிகைகளைக் காட்டினார். ரசிகர் மன்றங்களையும் அரசியல் களத்திற்குப் பயன்படுத்தினார். தலைமையின் நம்பிக்கைக்குரியவராக ஆனார். தேர்தல் களத்தை எதிர்கொண்டார், வென்றார். அண்ணா மறைவுக்குப் பிறகு, கலைஞருடன் ஏற்பட்ட உரசலால், கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டபோது, தனிக்கட்சி தொடங்கினார். ரசிகர் மன்றத்தை கட்சி அமைப்பாக வலுப்படுத்தினார். மரணம் வரை முதல்வராக இருந்தார். திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆரின் சமகாலத்து நாயகரான சிவாஜியோ, தி.மு.க.வுக்குப் பிறகு காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என பயணித்தார். எம்.ஜி.ஆர். மரணத்திற்குப் பிறகே "தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற தனிக்கட்சி தொடங்கினார். பிறகு, ஜனதா தளத்திற்குச் சென்றார். இறுதியில், எந்தக் கட்சிக்காரராகவும் இல்லாத கலைஞனாகவே விடைபெற்றார். அரசியல் என்பது ஆலகால விஷம். எம்.ஜி.ஆர். அதை விழுங்கினார். சிவாஜியை அது விழுங்கிவிட்டது.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

நரிக்குறவத் தம்பதிகளுக்கு பாதபூஜை செய்த சென்னை பஸ் ஊழியர்கள் பற்றி?

ஓர் ஊரில் நரிக்குறவர் களையும் மீனவப் பெண் மணியையும் பஸ்ஸில் ஏற்றாமல் நடத்துநரும் ஓட்டுநரும் இறக்கி விடுகிறார்கள். இன்னொரு ஊரில் பாதபூஜை செய்து பவ்யம் காட்டுகிறார்கள். இரண்டுமே வரம்புகளுக்கு அப்பாற்பட்டதுதான். பயணிகளின் நிறம், இனம், தொழில் இவற்றைப் பார்க்காமல் பயணிகளாக மட்டுமே பார்த்துப் பயணிக்க வைப்பதுதான் பஸ் ஊழியர் களின் கடமை.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

கோவாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்கப்படும் என்று திரிணாமூல் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளதே?

மாதம் 1000 ரூபாய் என்று வாக்குறுதி அளித்து இங்கே ஆட்சிக்கு வந்த வர்களே, இதோ.. அதோ என்கிறார்கள். பொறுத்திருங்க.. எப்படியும் வாக்குறுதியை நிறைவேற்றிவிடுவோம் என்று சமாளிக்கிறார்கள். எப்படியும் என்பது எப்போது என்பதுதான் தெரியவில்லை. இந்த நிலையில், மாதம் 5000 ரூபாய் என்கிற திரிணாமூல் காங்கிரசை, கோவா வாக் காளர்கள் ஏர் என்கிறார்களா, வா என்கிறார்களா என தேர்தல் முடிவுகளில் பார்க்கலாம்.

nkn221221
இதையும் படியுங்கள்
Subscribe