மாவலி பதில்கள்

mm

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்

MAN OF THE YEAR 2021 யாருக்குத் தருவீர்கள் சார்..!?

எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் வாழ்கிற மிஸ்டர் அண்ட் மிஸஸ் பொதுஜனத்திற்கு.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

கலைஞரின் பெயர் சொல்லும் திட்டமாக ஸ்டாலின் அமல்படுத்தப்போகும் பெரிய திட்டம் எது என்று கூறும் மாவலியாரே?

பதவியேற்பு உறுதிமொழி ஏற்றபோதே கலைஞரின் பெயரையும் சேர்த்து, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொன்னவர் மு.க.ஸ்டாலின். தன்னைக் குறைவாக எடை போட்டவர்கள் ஆச்சரியப் படும் வகையில் அவர் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் கலைஞரின் பெயர் சொல்பவைதான். முப்படைத் தளபதி மரணமடைந்தபோது முதல்வரும் அவர் நிர்வாகத்தில் உள்ள காவல்துறையும் உடனடியாகக் களமிறங்கிச் செயல்பட்டதை பாராட்டி தட்சிண காரத் ஜெனரல் ஆபீசர் கமாண் டிங் லெப்டினன்ட் ஜென ரல் அ.அருண் எழுதியிருக்

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்

MAN OF THE YEAR 2021 யாருக்குத் தருவீர்கள் சார்..!?

எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் வாழ்கிற மிஸ்டர் அண்ட் மிஸஸ் பொதுஜனத்திற்கு.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

கலைஞரின் பெயர் சொல்லும் திட்டமாக ஸ்டாலின் அமல்படுத்தப்போகும் பெரிய திட்டம் எது என்று கூறும் மாவலியாரே?

பதவியேற்பு உறுதிமொழி ஏற்றபோதே கலைஞரின் பெயரையும் சேர்த்து, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொன்னவர் மு.க.ஸ்டாலின். தன்னைக் குறைவாக எடை போட்டவர்கள் ஆச்சரியப் படும் வகையில் அவர் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் கலைஞரின் பெயர் சொல்பவைதான். முப்படைத் தளபதி மரணமடைந்தபோது முதல்வரும் அவர் நிர்வாகத்தில் உள்ள காவல்துறையும் உடனடியாகக் களமிறங்கிச் செயல்பட்டதை பாராட்டி தட்சிண காரத் ஜெனரல் ஆபீசர் கமாண் டிங் லெப்டினன்ட் ஜென ரல் அ.அருண் எழுதியிருக் கும் கடிதத்தில், “எந்தெந்த உதவி முடியுமோ அந்த உதவிகளை எல்லாம் தங்களின் தலைமையின் கீழ் உள்ள தமிழ்நாடு அரசின் மொத்த நிர்வாகமும் செய்து தந்தது. இதுபோன்ற ஆதரவுகள்தான் எதிர்காலத்தில் நம் இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேர்வதற்கும், ராணுவ உடை அணிவதற்கும் உற்சாகமூட்டுவ தாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கும். தட்சிண பாரத தலை மை அலுவலர் என்ற வகையில் தங்களுடைய முன்மாதிரியான ஆதரவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக் கிறார். கலைஞர், தான் வாழும் காலத்தில் இளைஞரணியை ஸ்டாலினிடம் ஒப்படைத்த போது, தொண்டர்கள் அவரை தளபதி என்றனர். பின்னர், அதைக் கலைஞரும் சொன்னார். முப்படைத் தளபதி இறப்பில், ராணுவ அதிகாரிகள் அதனை உச்சரித்திருக்கின்றனர்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

சமீபத்தில் பார்த்து ரசித்த வேற்று மொழி திரைப்படம்?

தமிழில் வெளியான "அண்ணாத்த' படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளிலும் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது. எந்த மொழியில் ரசிக்க முடிகிறது என ஒவ்வொரு மொழியாகப் பார்த்த அனுபவம், ரசிக்க வைத்தது.

mm

வாசுதேவன், பெங்களூரு

பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற இந்திய பெண் ஹார்னஸ் சந்து?

இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகி என்ற பெருமையைப் பெற்றவர் சுஷ்மிதா சென். அதற்கப்புறம், லாரா தத்தா அந்தப் பட்டம் வென்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து ஹார்னஸ் சந்து பிரபஞ்ச அழகியாகியிருக்கிறார். புதிய பொருளாதாரக் கொள்கையால் உலகத்தின் வாழ்க்கை முறை மாறியபிறகு, வளரும் நாடுகளான இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரபஞ்ச அழகிகளாக, உலக அழகிகளாகத் தேர்ந்தெடுக் கப்படுவது வழக்கமாகிவிட்டது. அழகுடன் தன்னம்பிக்கையும் இந்தப் போட்டிக்கு முக்கியமானது. பட்டம் வென்ற ஹார்னஸ் சந்து, அந்தத் தன்னம்பிக்கையை வார்த்தைகளாலும் உடல்மொழியாலும் வெளிப்படுத்தியதுடன், ஒவ்வொரு நாளும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கைப் போராட்டத்தை வெல்லும் பெண்களுக்கு தனது வெற்றியைக் காணிக்கை யாக்கியிருக்கிறார். அழகிப் பட்டங்கள் அந்தந்த ஆண்டுடன் முடிந்துவிடும். தன்னம்பிக்கையும் அதனால் கிடைக்கும் முன்னேற்றமும்தான் நிரந்தர அழகு.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பெரிதும் வரவேற்பு பெற்ற "மார்க்ஸ் -பெரியார் -அம்பேத்கர்' என்கிற நூலை எழுதிய தோழர் என்.ராமகிருஷ்ணன் மறைவு குறித்து?

இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றையும், அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக எந்தவித எதிர்பார்ப்புமின்றி -எந்தப் பதவி சுகத்தையும் நாடாமல் தியாக வாழ்வு வாழ்ந்த தலைவர்களையும் பற்றி எழுதி, அடுத்தடுத்த தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடம் கற்பிப்பதையே வாழ்வாகக் கொண்டிருந்தவர் தோழர் என்.ராமகிருஷ்ணன். தியாகத் தலைவர்களைப் பற்றி எழுதிய அவரது வாழ்க் கையும் தியாகத் தன்மை கொண்டதுதான். வரலாற்றை எழுதியவர், வரலாற்றில் வாழ்வார்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

இந்துவுக்கும், இந்துத்துவ வாதிக்கும் வித்தியாசங்கள் இருப்பதை ராகுல் பேசியிருப்பது பற்றி?

திராவிட இயக்கம் இதைத்தான் தொடக்கத்திலிருந்து பேசி வருகிறது. அம்பேத்கர் இதைத்தான் தெளிவாகவும் வரலாற்று ஆய்வுகளுடனும் முன்வைத்தார். அப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இரண்டையும் குழப்பினர். அது, பின்னாளில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்தது. ராகுல் காலத்தில் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

அ. யாழினிபர்வதம், சென்னை-78.

இயக்குனர் ஷங்கரின் மகள் சமீபத்தில் டாக்டர் பட்டம் வாங்கினார். ஆனால், சினிமாவில் நடிக்கப் போய்விட்டார். அப்படியானால், பிறருக்குப் பயன்படும் ஒரு டாக்டர் சீட் வீணாகிவிட்டதே?

சில நோயாளிகளின் நலன் வீணாகாமல் காப்பாற்றப்பட்டதே என பாசிட்டிவாக நினைக்கக்கூடாதா?

nkn181221
இதையும் படியுங்கள்
Subscribe