மாவலி பதில்கள்

mm

சி. கார்த்திகேயன், சாத்தூர்

உண்மை -நியாயம் என்ன வித்தியாசம்?

பெரும்பான்மையான நேரங்களில் உண்மையின் பக்கம் நியாயம் வழங்கப்படுவதில்லை என்பதுதான் வித்தியாசம்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு என்று முதல்வர் அறிவித்திருக்கிறாரே?

இழந்தால் பெற முடியாதவற்றில் முக்கியமானவை நேரமும், உயிரும். விபத்து -மாரடைப்பு போன்ற நேரங்களில் உயிரைக் காப்பாற்றுவதில் நேரத்தின் அருமை மிக முக்கியமானதாக இருக்கும். அதைத்தான் ‘"கோல்டன் ஹவர்'’என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நேரத்திற்குள், சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால், உயிரைக் காப்பாற்றிவிட முடியும். விபத்தில் ஒருவர் சிக்கும்போது, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் பல இருக்கின்றன. இந்த நிலையில், "அரசாங்கமே 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கும்' என முதல்வர் அறிவித்திருப்பதால், போலீஸ் கேஸ் போன்றவை பற்றி கவலைப்படாமலும், தனியார் வாகனங்கள

சி. கார்த்திகேயன், சாத்தூர்

உண்மை -நியாயம் என்ன வித்தியாசம்?

பெரும்பான்மையான நேரங்களில் உண்மையின் பக்கம் நியாயம் வழங்கப்படுவதில்லை என்பதுதான் வித்தியாசம்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு என்று முதல்வர் அறிவித்திருக்கிறாரே?

இழந்தால் பெற முடியாதவற்றில் முக்கியமானவை நேரமும், உயிரும். விபத்து -மாரடைப்பு போன்ற நேரங்களில் உயிரைக் காப்பாற்றுவதில் நேரத்தின் அருமை மிக முக்கியமானதாக இருக்கும். அதைத்தான் ‘"கோல்டன் ஹவர்'’என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நேரத்திற்குள், சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால், உயிரைக் காப்பாற்றிவிட முடியும். விபத்தில் ஒருவர் சிக்கும்போது, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் பல இருக்கின்றன. இந்த நிலையில், "அரசாங்கமே 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கும்' என முதல்வர் அறிவித்திருப்பதால், போலீஸ் கேஸ் போன்றவை பற்றி கவலைப்படாமலும், தனியார் வாகனங்கள் தங்களுக்கான செலவு பற்றிக் கவலைப் படாமலும் விபத்தில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்ற முடியும். அதன்படி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப் படும்போது, அது தனியார் மருத்துவமனை யாக இருந்தால், விபத்துக்குள்ளானவரின் சிகிச்சை செலவை யார் ஏற்பது? பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அந்த அளவு வசதி இல்லாவிட்டால் வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடியுமா? அதற்கான நேர அவகாசத்தில் உயிரைக் காப்பாற்ற முடியுமா எனப் பல கேள்விகள் எழும். அதனால்தான், விபத்தில் சிக்கியவருக்கு 48 மணி நேர இலவச சிகிச்சை என்ற திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள் ளார். நெடுஞ்சாலைகளில் ஏற்படும் கோர விபத்துகளினால் மூளைப் பகுதி பாதிக்கப்பட் டால் முதலுதவி சிகிச்சைக்கே 1 லட்ச ரூபாய் வரை செலவாகும். அத்துடன் ஐ.சி.யூ.வில் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். உயிர் காக்க நேரம் முக்கியம். நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க பணம் முக்கியம். நேரத்தை மிச்சப்படுத்துங்கள். பணத்தை அரசு செலுத்தும். உயிர் முக்கியம் என்கிறது முதல்வரின் திட்டம்.

விநாயகம் தாமோதரன், ராணிப்பேட்டை.

எப்படி இருக்கிறது சிம்புவின் மாநாடு?

"டைம் லூப்' என்கிற முறையில், திரும்பத் திரும்பக் காட்சிகளை மாற்றியமைத்து அசத்தியிருக்கிறது வெங்கட் பிரபு அண்ட் டீம். சிம்புவும் எஸ்.ஜே.சூர்யாவும் போட்டி போட்டு கலக்கியிருக்கிறார்கள். ரோஜா, நரசிம்மா என 1990-களிலிருந்து 2010-கள் வரை தமிழ்த் திரையில் தீவிரவாத வில்லன்கள் என்றால் முஸ்லிம்கள் தான் என்று சித்தரித்து வந்த டெம்ப்ளேட்டை மாற்றி, முஸ்லிமை ஹீரோவாகவும், அந்த சமுதாயத்தின் மீது எப்படி பழி போடப்படு கிறது என்பதையும் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறது. காட்சிகள் ரிப்பீட்டு.. ரிப்பீட்டு.. ரிப்பீட்டு..! படத்தையும் பார்க்க வைக்கிறார்கள் ரிப்பீட்டு... ரிப்பீட்டு... ரிப்பீட்டு...!

வாசுதேவன், பெங்களூரு

உடல் உறுப்புகள், கண்கள், இரத்தம் தானம் செய்பவர்கள்?

கொடை வள்ளல் என்பதற்கு உதாரணமாக, மகாபாரதத்தில் வரும் கர்ணனைக் குறிப்பிடுவார்கள். எல்லாருக்கும் வாரி வழங்கிய கர்ணன், தன் உயிர்போகும் நேரத்தில், வேதியன் வடிவில் வந்த கண்ணனுக்கு, தான் அத்தனை காலமும் செய்த புண்ணியத்தை இரத்தத்தால் தாரைவார்த்துக் கொடுப்பார். நாயன்மார்கள் கதையில், சிவலிங்கத்தின் கண் பகுதியிலிருந்து இரத்தம் வந்ததால், தன் கண்களையே பறித்து கடவுளுக்கே கண்ணொளி வழங்குவார் கண்ணப்பனை நாயனார். புராண -இதிகாசங்களில் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது படைப்பாளரின் சிந்தனைவயப்பட்டது. அறிவியல் காலத்தில் அது நடைமுறை சாத்தியமாகி, மருத்துவத்துறையில் மகத்தான சாதனை படைத்து, உயிர்களைக் காப்பாற்றுகிறது. ஹிதேந்திரன் என்ற சிறுவன் மூளைச் சாவு அடைந்தபோது, அவனது இதயத்தை ஒரு சிறுமிக்குப் பொருத்தி ஆச்சரியப் பட வைத்தது மருத்துவ அறிவியல். கல்லீரல், சிறுநீரகம் என பல உறுப்புகளும் தானமாகத் தரப்படும்போது, பலரது உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இருக்கும்வரை இரத்ததானம்... இறந்தபிறகு கண்தானம் என்கிற அளவில் எல்லாருமே இதற்குத் துணை நிற்கலாம்.

mm

தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45

அண்ணா பெயரை பயன்படுத்திய கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இதில் யார் ஆட்சியில் அண்ணாவை மதித்தனர்?

1969-ல் அண்ணா மறைந்தபோது, அவரது ஆட்சி யைத் தொடர்ந் தவர் கலைஞர். அண்ணா பெற்ற வெற்றியைவிட மிகப்பெரிய வெற்றியை 1971-ல் தி.மு.க.வுக்குப் பெற்றுத் தந்தவர். அந்த வெற்றியின்போது கலைஞருடன் இருந்த எம்.ஜி.ஆர்., பின்னர் அண்ணா பெயரிலேயே கட்சி ஆரம்பித்தார். கலைஞரைவிட தனக்கு அண்ணா மீது பற்று அதிகம் என வெளிப்படுத்துவதில் கவனமாக இருந்தார். ஜெயலலிதா தலைமையிலான கட்சிக்கு அண்ணா, திராவிடம் என்பவை வெறும் லேபிள்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது' என்றும் "குடிநீர் மின் இணைப்பு வழங்கக் கூடாது' எனவும் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து?

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நீர்நிலைகள் மீது அமைத்தவர்களிடமிருந்து இந்த நடவடிக்கையைத் தொடங்கவேண்டும்.

nkn081221
இதையும் படியுங்கள்
Subscribe