வாசுதேவன், பெங்களூரு

சமீபத்திய சந்திர கிரகணம்?

பூமி-சூரியன்-சந்திரன் இவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஒன்றின் நிழல் மற்றொன்றை மறைப்பதனால் கிரகணங்கள் ஏற்படுகின்றன. சந்திர கிரகணத்தின்போது நிலாவைப் பாம்பு விழுங்குவதாகப் புராணக் கதைகள் சொல்கின்றன. தற்போதைய பருவ மழை காலத்தில் சந்திர கிரகணத்தை விட, சூரியன் எப்போது தெரிவான் என்கிற அளவுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மழை நேர நிவாரணத்திற்கு சூரியன் மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதை சூரியன் உணரவேண்டும்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

Advertisment

"அம்மா' சிமெண்ட், "வலிமை' சிமெண்ட் என்ன வேறுபாடு?

ஆட்சி மாற்றம்தான் ஒரே வேறுபாடு. கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சிமெண்ட் உற்பத்தியில் அரசு உரிய கவனம் செலுத்தினால், அம்மாவை மிஞ்சிய வலிமை உருவாகும்.

தே. மாதவராஜ் , கோயமுத்தூர் 45

Advertisment

எம்.எஸ்.தோனியை முதல்வர் மு. க. ஸ்டாலின் பாராட்டியது பற்றி?

dd

இந்தியாவில் சினிமாவைப் போலவே கிரிக்கெட்டும் அரசியலில் இருந்து பிரிக்க முடியாததாகிவிட்டது. ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல்வர் தலைமையில் நடந்த பாராட்டு விழாவில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பில் உள்ள ஜெய்ஷா கலந்துகொண்டார். அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன். அந்த விழாவில், தோனியின் ரசிகனாகக் கலந்துகொள்கிறேன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸின் உடையைக் குறிப்பிடும் வகையில் தோனியை ‘மஞ்சள் தமிழர்’ என்றார். ஐ.பி.எல். போட்டி களின் வெற்றிச்சூத்திரம் என்பது ஜார்கண்ட் மாநில தோனியை யும், மேற்குஇந்திய தீவுகளின் பிராவோவையும்கூட தமிழர் களாக்கிவிடுவதுதான். மஞ்சள் தமிழர் தோனியை முதல்வர் மு.கஸ்டாலின் வாழ்த்திய இரண்டு நாட்களில், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் விளையாடி, கடைசிப் பந்தில் சிக்ஸ அடித்து கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த மஞ்சள் தமிழர் ஷாரூக்கானை முதல்வர் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரிஜினல் மஞ்சள் தமிழர்கள் அணிக்கான பெருமை இது.

ff

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

விவசாய போராட்டங்களின்போது உயிரிழந்த 750 விவசாய குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளாரே தெலுங்கானா முதல்வர்?

கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில், ஒன்றிய அரசு அலட்சியமாக இருந்தபோது, மாநிலங்களின் நிதி உரிமைக்காக அழுத்தமாகக் குரல் கொடுத்தவர் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ். பெட் ரோல்-டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு கடுமையாக உயர்த்திவிட்டு, மாநில அரசுகளைக் குறைக்கக்கோருவது முட்டாள்களின் செயல் என மோடி அரசை நேரடியாகவே விமர்சித்தார். அவருடைய மாநிலத்தில் எப்படியாவது ஊடுருவி விடவேண்டும் என பா.ஜ.க. கணக்குப் போட்டுவரும் நிலையில், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான கருத்து களையும், நியாயமான செயல் பாடுகளையும் சந்திரசேகரராவ் மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப் படுகிறது. ஒன்றிய அரசின் சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை ஆகியவையும் உற்று நோக்கலாம்.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு- 77

ஆட்சிக்கு வந்த பிறகே, "ஆந்திர மாநில சட்ட சபைக்குள் நுழைவேன்'' என்று கூறுகிறாரே, தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு?

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், சட்டமன்றத்தில் தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை கொச்சைப்படுத்திப் பேசியதாக, தன் கட்சி அலுவலகத்தில் கண்ணீருடன் பேட்டியளித்து, "இனி முதல்வராகத்தான் சட்டமன்றத்தில் நுழைவேன்' என்றார் சந்திரபாபு நாயுடு. பெண்களைக் கொச்சைப்படுத்துவது சந்திரபாபு நாயுடுவுக்கும் அவரது தெலுங்குதேச கட்சிக்காரர்களுக்கும் வழக்கமானது என்று தன் பழைய அனுபவத்தை முன்வைத்து நாயுடு மீது குற்றம் சுமத்தியிருக்கிறார் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா. இப்படிக் குற்றச்சாட்டுகள், கண்ணீர், சபதம் எல்லாம் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்கனவே வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுள்ளன. காரசாரமான ஆந்திரா அரசியலில் எந்தளவு எடுபடும் என பார்க்க வேண்டும்.

பி.மணி, வெள்ளக்கோவில்,

மத்திய அரசு விவசாய சட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தும் சட்டத்தை நீக்கும் வரை போராட்டம் தொடர்வதாக விவசாயிகள் அறிவித்திருப்பது?

மோடி அரசு மீது அந்தளவுதான் இந்த நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்திலேயே சட்டத்தை ரத்து செய்யும் தீர் மானத்தை நிறைவேற்று வதுடன், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங் களுக்கு இழப்பீடு, விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை வாபஸ் பெறுவது உள்பட விவசாயிகள் சங்கம் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் நியாயமானவை.