வி.கார்மேகம், தேவகோட்டை
முனைவர் பட்டம்பெற்ற 994 பேர், எம்.பில் பட்டம்பெற்ற 23,049 லட்சம் பேர், பி.இ., பி.டெக்., முடித்த 1 லட்சத்து 92 ஆயிரம் பேர் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் குரூப்-4 தேர்வு எழுதியுள்ளனரே... இதை எல்லோர்க்கும் கல்வி என்பதா? யாருக்குமே வேலையில்லை என்பதா?
ஏதேனும் ஒரு வேலை உடனடியாகத் தேவை என்பதாலும், தனியார் நிறுவனங்களில் அள்ளி அள்ளி சம்பளம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் அதன் நிலையாமைத் தன்மையால், அரைச் சம்பளம் வாங்கினாலும் அரசாங்க சம்பளம் கெட்டியானது என்ற நம்பிக்கையினாலும் தேர்வு எழுத படையெடுக்கிறார்கள்.
ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்
கலைஞருக்கு "பாரத ரத்னா' விருதை மத்திய அரசு கொடுக்குமா?
அரசியல் தலைவர்களுக்கு விருது கொடுப்பதிலும் கொடுக்காமல் இருப்பதிலும் பல அரசியல்கள் இருக்கும். எந்தப் பட்டம் கிடைத்தாலும் எல்லாவற்றையும்விட உயர்ந்தது "கலைஞர்' என தமிழ் மக்களின் நெஞ்சில் பதிந்த பட்டம்தான்.

சோ.பூ.அரசு, பெ.ம.கூடலூர், 639 202
ஆயுள் தண்டனை என்ற சொல்லுக்கேற்ப வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டிய கட்டாயம் ராஜீவ் கொலையாளிகள் வழக்கில் மட்டும் கடைப்பிடிக்கப்படுவது எப்படி?
சட்டத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் நடத்துகின்ற அரசியல் விளையாட்டுதான் ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை இன்னும் சிறைக்குள்ளேயே முடக்கியிருக்கிறது. விடுதலை விவகாரத்தில் மத்திய அரசின் பக்கம் பந்தை உதைத்தார், அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அன்றைய மத்திய அரசுமுதல் இன்றைய மத்திய அரசுவரை அந்தப் பந்தை பழுதாக்குவதற்கானக் காரணங்களைத்தான் தேடின. மாநில முதல்வரே விடுதலை செய்யும் உரிமை இருந்தும் ஜெ.வும் செய்யவில்லை, அவர்வழி நடப்பதாகச் சொல்லும் எடப்பாடி அரசும் செய்யவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள்போலவே, முஸ்லிம் சிறைவாசிகள் சிலரும் நீண்டகாலமாக சிறைப்பட்டுள்ளனர். இவர்களில், விசாரணைக் கைதிகளாகவே சிறையில் அடைப்பட்டிருப்போரும் உண்டு.
ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி
ஜெயலலிதா, சசிகலா மீது பொய்வழக்குத் தொடுத்து சிறைக்கு அனுப்பியது தி.மு.க.தான் என்கிற டிடிவி. தினகரன் கருத்து பற்றி?
கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கினால் அ.தி.மு.க. ஆதரவு வாக்குகள் பறிபோய்விடும் எனக் கணக்கிட்டு மறுத்த எடப்பாடி தரப்பின் அரசியல் போலத்தான் தினகரன் சொல்லும் கருத்தும்! தி.மு.க. ஆட்சியில் ஜெ-சசி மீது வழக்குப்போட்டதில் அரசியல் இருக்கிறது என்று சொன்னால் நம்பலாம். பொய் வழக்கு என்றால் கோர்ட்டில் வாய்தா வாங்காமலேயே ஜெ.வும் சசியும் நிரூபித்திருக்கலாமே? தினகரன் குற்றம்சாட்டுவது தி.மு.க.வையல்ல, நீதிமன்றத்தை.
எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு?
இந்துத்வா கொள்கை கொண்ட தனது தந்தையின் நிழலிலிருந்து, மார்க்சிய சிந்தனை கொண்ட மக்கள்களத்திற்கு வந்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. இடதுசாரிக் கொள்கையும் தேர்தல் அரசியல் களத்தையும் உணர்ந்து செயல்பட்டு 10 முறை வெற்றிபெற்றவர். ஜனநாயகப்பண்பு காப்பதில் அக்கறை செலுத்திய நாடாளுமன்றவாதி. கட்சி விதிகளின்படி நடவடிக்கைக்குள்ளானாலும் தோழர்களால் எப்போதும் மதிக்கப்பட்ட தோழர்.
-----------------------------------------------------
ஆன்மிக அரசியல்
சாரங்கன், கும்பகோணம்
"சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என வழக்குத் தொடுத்து வாதாடுவதால்தான் கடவுள் கோபப்பட்டு கேரளாவை மழை-வெள்ளத்தால் தண்டித்துவிட்டார்' எனச் சொல்வது ஆன்மிகமா, அரசியலா?
ஆகமங்கள் -கோவில் விதிமுறைகள் இவற்றைக்காட்டி மனித உரிமைகளை மறுப்பவர்கள் இயற்கைச் சீற்றத்தை துணைக்கு அழைத்து வாதாடுகிறார்கள். வெள்ளம், பூகம்பம், புயல் போன்ற இயற்கைப் பேரழிவுகளைக் கடவுள் கொடுக்கும் தண்டனையாகச் சித்தரிப்பவர்கள்தான் உண்மையிலேயே கடவுளை நிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். உலகில் உள்ள அனைத்தும் கடவுளின் படைப்பு என்ற நிலையில், ஏதுமறியா அப்பாவிகளையும் -வாயில்லா ஜீவன்களையும் இயற்கை சீற்றத்தின் வாயிலாக அந்தக் கடவுள் தண்டிப்பாரா? "இமாலய சுனாமி' என வர்ணிக்கப்பட்ட உத்தரகாண்ட் நிலச்சரிவிலும் பெருவெள்ளத்திலும் கோயில்கள், வீடுகள், அலுவலகங்கள் என வகைதொகையின்றி அடித்துச் செல்லப்பட்ட காட்சிகளை கடவுள் விரும்பிச்செய்த செயல் என்று எவராவது சொல்ல முடியுமா? தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக இருந்தது என்பதே கேரளாவின் வெள்ளத்திற்குக் காரணம். அந்த நீர் உடனடியாக வடிவதற்கு வழியில்லாத சூழலால் கேரள மக்கள் இதுவரை சந்திக்காத துயரத்தை சந்தித்து வருகின்றனர். மனித உணர்வுள்ளோர் பலரும் மதம் -சாதி -மொழி பாகுபாடின்றி, கேரள மக்களுக்கு உதவுகிறார்கள். இழவு வீட்டிலும் எதை அபகரிக்கலாம் என நினைப்பவர்கள்தான், ஆன்மிகத்தின் பெயரால் அரசியல் செய்து, வெறுப்பை வளர்க்கிறார்கள். மகளிருக்கான வழிபாட்டு உரிமை தொடங்கி, மனுஷ்யபுத்திரனின் கவிதைவரை இந்த வெறுப்புணர்வு வளர்ந்து வன்முறைக் கட்டத்தை நோக்கிச் செல்கிறது.