பி.ஓம்பிகராஷ், கொடுங்கையூர், சென்னை 118

கொரோனாவுக்கு சமீபகாலமாக டாட்டா, பை... பை... சொல்லி வருவதுபோலத் தெரிகிறதே? யார் இதற்கு முழு காரணம்... அரசா, பொதுமக்களா?

பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய அரசு நிர்வாகமும், அரசு நிர்வாகத்தின் தடுப்பூசி முகாம்களைப் பயன்படுத்திக்கொண்ட பொதுமக்க ளும்தான், நாளொன்றுக்கு 30ஆயிரம் என்ற அளவில் இருந்த கொரோனா பரவலை 700 என்ற அளவில் கொண்டு வந்துள்ளது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

Advertisment

பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்தவருக்கு நிஜ பாஸ்போர்ட்டே அனுப்பி இருக்கிறதே அமேசான்?

நல்லவேளை, அவர் தன் குழந்தைக்கான உடையை ஆர்டர் செய்யவில்லை.

jj

Advertisment

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

"எப்போதுதான் அ.தி.மு.க.வினரை கைது செய்வீங்க?' என பொதுமக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்களே?

பொதுமக்கள், "மழை நேர பாதிப்புகளி லிருந்து காப்பாற்றுங்கள்' எனக் கேட்கிறார்கள். விவசாயிகள், "வெள்ள பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குங்கள்' எனக் கேட்கிறார்கள். வணிகர்கள்-தொழில் துறையினர், "கொரோனாவுக்குப் பிறகான வளர்ச்சிக்கு ஏற்பாடு செய்ய' வலியுறுத்து கின்றனர். இப்படி எல்லாத் துறையிலும் உள்ளவர்களில் அரசியலைக் கவனிப்பவர்கள் பலரும் ஊடக விவாதங்களையும் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளையும் பார்க்கும்போது, "அ.தி.மு.க.வினர் மீது ஏன் கைது நடவடிக்கை இல்லை' எனக் கேட்பது நியாயமான கேள்விதான். ஜெயலலிதா மீது, தி.முக. ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, முறைப்படி வழக்கு கள் தொடரப்பட்டன. "ஏன் இன்னும் கைது செய்யவில்லை' என நீதிமன்றமே கேள்வி கேட்டது. அதன் பிறகுதான் 1996 டிசம்பர் 7-ஆம் நாள் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். இப் போது நவம்பர்தானே, அப்போதுபோல ஒரு கேள்வி நீதிமன்றத்தால் கேட்கப்பட்டால், இ.பி. எஸ்.-ஓ.பி.எஸ். உள் ளிட்ட அ.தி.மு.க. முன் னாள் அமைச்சர்கள் ஜெயலலிதாவாகலாம்.

ஜி.மகாலிங்கம், காவல்காரன்பாளையம்

"இன்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஒரு ஃபைல்கூட ஆங்கிலத்தில் எழுதப்பட வில்லை. அனைத்தும் இந்தியிலேயே உள்ளன' என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமைப்படுகிறாரே?

இது பெருமைக்குரிய தல்ல, அரசியல் சட்டத்தின் அடிப்படையில் ஒன்றிய அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட வர், அந்த அரசியல் சட் டத்தை மீறுகிற செயல். ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி உள்ளது போல, இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது. இந்தி பேசாத மாநிலங்கள் சார்ந்த கோப்புகள் ஆங்கிலத்தில் கையாளப்பட வேண்டும். குறிப்பாக, இரு மொழிக் கொள்கை நடைமுறை யில் உள்ள தமிழ்நாட்டுக்கு 1976-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு இதற்கான சிறப்பு வழியையும் உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்ல, அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஆனால், குஜராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மோடியும் அமித்ஷாவும் தங்கள் கட்சியை இயக்கும் சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் எல்லா இடங்களிலும் திணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். மாநிலங்களிலிருந்து வெளிப்படும் எதிர்ப்புதான் அவர்களை ஓரளவு கட்டுப்படுத்தி வைத்துள்ளது. ஆனாலும், சட்டத்தின் சந்துகளின் வழியே ஆதிக்க மொழித் திணிப்பை மேற்கொண்டு, அது பற்றி பெருமையடித்துக்கொள்கிறது அமித்ஷா வகையறா.

மா.சந்திரசேகர், மேட்டு மகாதானபுரம்

"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்தரபிரதேசம் மாறிவிட்டது' என்கிறாரே பிரியங்கா?

mm

நள்ளிரவிலும் பெண்கள் பாதுகாப்பாக நடக்கக்கூடிய மாநிலம் உத்தரபிரதேசம் என பா.ஜ.க ஆட்சி பற்றி அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில்... பிரியங்காவின் பிரச்சாரம் அதற்கு நேர் எதிராக இருக்கிறது. "காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு 40% தொகுதிகள் ஒதுக்கப்படும்' என ஏற்கனவே அறிவித்திருந்த பிரியங்கா, மந்தாகினி ஆற்றங்கரையில் 5000 பெண்களிடம் உரையாற்றியதுடன், தரையில் உட்கார்ந்தும் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் என பலதுறை சார்ந்த பெண்களும் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவித் துள்ளனர். தொடர்ச்சியாகப் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பிரியங்கா, பெண் வாக்காளர்களை "கை' சின்னம் பக்கம் கொண்டு செல்லாதபடி தடுக்க வேண்டிய வியூகத்தில் இருக்கிறது பா.ஜ.க.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி

பயம் எப்போது தைரியமாக மாறும் -தைரியம் எப்போது பயமாக மாறும்?

மனதில் தைரியம் இல்லாவிட்டால் எதைக் கண்டாலும் பயமாக இருக்கும். மனது தைரியமாக இருக்கும்போது பிரச்சினைகளுக்குரிய எல்லாமும் பயந்து ஓடுவதுபோல இருக்கும்.