மாவலி பதில்கள்

dd

வாசுதேவன், பெங்களூரு

விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்துள்ளபோதும் புயல், மழைவெள்ளம் இவைகளால் ஏற்படப்போகும் அழிவுகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப திட்டங்கள் தயாரித்து செயல்படுத்தி ஏன் காத்துக்கொள்ள முடிவதில்லை?

இயற்கையின் தன்மையை அறிந்து கொள்வதில் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் முன்பைவிட இப்போது பெருமளவு முன்னேறியிருப்பதைக் காணமுடியும். வானொலி மட்டுமே இருந்த காலத்தில், இந்தளவுக்கு வானிலை அறிவிப்புகள் துல்லியமாக இருந்ததில்லை. “வராத மழைக்கு வார்த்தைகளைச் செலவிடும் வானிலை அறிக்கை போல...”என்று தனது புதுக்கவிதையில் கிண்டல் செய்தார் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். ஆனால், இப்போது மழை பெய்யும் நாட்கள், அளவு போன்றவை பெருமளவு சரியாக உள்ளன. காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் எனக் காற்றின் தன்மையை பொதுமக்களும் புரிந்து கொள்ளு

வாசுதேவன், பெங்களூரு

விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்துள்ளபோதும் புயல், மழைவெள்ளம் இவைகளால் ஏற்படப்போகும் அழிவுகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப திட்டங்கள் தயாரித்து செயல்படுத்தி ஏன் காத்துக்கொள்ள முடிவதில்லை?

இயற்கையின் தன்மையை அறிந்து கொள்வதில் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் முன்பைவிட இப்போது பெருமளவு முன்னேறியிருப்பதைக் காணமுடியும். வானொலி மட்டுமே இருந்த காலத்தில், இந்தளவுக்கு வானிலை அறிவிப்புகள் துல்லியமாக இருந்ததில்லை. “வராத மழைக்கு வார்த்தைகளைச் செலவிடும் வானிலை அறிக்கை போல...”என்று தனது புதுக்கவிதையில் கிண்டல் செய்தார் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். ஆனால், இப்போது மழை பெய்யும் நாட்கள், அளவு போன்றவை பெருமளவு சரியாக உள்ளன. காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் எனக் காற்றின் தன்மையை பொதுமக்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு வானிலை அறிக்கைகளை அரசுத் தரப்பும், தனியார் ஆராய்ச்சிகளும் வெளியிடுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு, அமைப்புகள், பொதுமக்கள் எல்லாரும் சேர்ந்து மேற்கொண்டாக வேண்டும். அதில் முனைப்பு இல்லை. ஒத்துழைப்பு இல்லை. 2004-ல் சுனாமி ஏற்பட்டபோது, அந்தமான் தீவுகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் தங்கள் அனுபவ அறிவால் அதனை முன்கூட்டியே உணர்ந்து, கடலோரத்திலிருந்து மேடான பகுதிக்கு சென்றுவிட்டார்கள். நவீனத் தொழில்நுட்பத்திற்கு ஆளாகிவிட்ட மனிதர்களால், இயற்கைப் பேரிடரிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் மாற்று இடத்தைத் தேடுவதற்கு வழியில்லை.

பி.மணி, வெள்ளக்கோவில்

"இந்தியாவின் கலாச்சாரத்தை உலகமே போற்றுகிறது' என்று பிரதமர் மோடி கூறியிருப்பது?

உலகம் போற்றுகிற இந்தியாவின் கலாச்சாரம் என்பது அதன் பன்முகத் தன்மை. அனைத்து மதத்தினரும், அனைத்து மொழியினரும், பலவித கலாச்சாரத்தைக் கொண்டவர்களும் ஒன்றுபட்டு வாழும் தன்மையை உலகம் போற்றுகிறது. அமைதியை வாழ்க்கை முறையாகவும் போராட்ட முறையாகவும் கையாண்ட புத்தரையும், காந்தியையும் போற்றுகிறது. உலகமே போற்றும் இத்தகைய கலாச்சாரத்தை மோடியின் 7 ஆண்டுகால ஆட்சி என்ன பாடுபடுத்தி வைத்திருக்கிறது என்பதை பிரதமர் தனது மனசாட்சியைத் தொட்டுச் சொன் னால் நன்றாக இருக்கும்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

சென்னை மழைநீரில் படகு விட்டு அரசியல் செய்வது ஏன்?

d

2015-ஆம் ஆண்டு வெள்ளத்தில் தரைத்தளம், முதல்தளம் ஆகியவை மூழ்கிய நிலையில், தண்ணீரில் சிக்கியவர்களை படகுகளில் மீட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சைலேந்திரபாபு தற்போது தமிழ்நாட்டின் டி.ஜி.பி.யாக இருக்கிறார். தற்போது பெய்த மழையில் முதல்வர், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. எல்லாரும் நடந்துபோகிற நிலையில், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான பா.ஜ.க. தலைவர் படகில் ஏறி உட்கார்ந்து நடத்தியது, அரசியல் அல்ல... மீம்ஸ்களுக்கு கண்டன்ட் தரும் ஃபோட்டோ ஷூட். இந்த பழைய ஐ.பி.எஸ். அதிகாரிக்குமுன் பல மடங்கு உயர்ந்திருக்கிறார், கல்லறையில் மரத்திற்கு இடையே கிடந்த இளைஞரைத் தன் தோளில் சுமந்து, ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி உயிர் பிழைக்க வைத்த ஆய்வாளர் ராஜேஸ்வரி.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"காதைப் பிடித்துக் கொண்டு அறநிலையத்துறை அமைச்சர் தோப்புக்கரணம் போட வேண்டும்' என்கிறாரே எச்.ராஜா?

தோப்புக்கரணம் போடுவது, மன்னிப்பு கேட்பது என்பதெல்லாம் சாவர்க்கர் வழிவந்த எச்.ராஜாவின் பா.ஜ.க.வினருக்கு சகஜம். வெள்ளத்தைப் பார்வையிடு வதற்காக தார் ஜீப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்த போது, பா.ஜ.கவினர் சிலர் ரோட்டோரமாக நின்று, "பாரத் மாதா கீ ஜே'’ என்று கோஷம் போட்டனர். அதைக் கேட்டதும், முதல்வரின் வாகனத்தில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் சேகர்பாபு, அந்த நபர்களை நெருங்கி "என்ன சவுண்டு?' ’என்று கேட்டதும், "மனு கொடுக்க வந்தோம்ங் கண்ணா'’என சாவர்க்கர் வாரிசுகள் பம்மினர். "கொடுக்கணும்னா ஒரு ஆள் வந்து கொடு'' என்று அமைச்சர் சொன்னதும், அத்தனை பேரும் கப்சிப். "அரசியல் பண்றீங்களா? நாங்களும் சவுண்டு விடலாமா...?'' என்று அமைச்சர் கேட்டதும் பா.ஜ.க. ஆட்கள் பாரத் மாதாவையும் மறந்து ஒடுங்கிவிட்டனர். இப்ப சொல்லுங்க, தோப்புக்கரணம் போட வேண்டியது யாரு?

mm

நித்திலா, தேவதானப்பட்டி

வாய்க்கொழுப்பு என்றால் என்ன?

"1947-ல் பிச்சையெடுத்து சுதந்திரம் பெறப்பட்டது என்றும், 2014-ல் மோடி ஆட்சி அமைந்ததுதான் இந்தியாவின் உண்மையான சுதந்திரம்' எனப் பேசி, வாங்கிக் கட்டும் நடிகை கங்கனா ரணவத்தை கேட்டுப் பாருங்களேன்.

nkn171121
இதையும் படியுங்கள்
Subscribe