அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72

அண்ணாத்த படம் எப்படி அண்ணாத்தே?

அடை மழை நேரத்தில் ஒரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது. எப்போதும் அங்கே சுவையான தேநீர் கிடைக்கும். ஆனால், இந்த முறை பழைய பால். சர்க்கரை டப்பா காலி. டீத்தூளில் சாயம் ஸ்ட்ராங்காக இறங்கவில்லை. அதனால் என்ன? அடைமழை நேரத்தில் திறந்திருப்பது ஒரு டீக்கடைதான் என்பதால், தேநீர் பருக ஆட்கள் வருகிறார்கள்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைபுதூர்

Advertisment

பாரதியாரின் பெண் விடுதலை சிந்தனைகள்-பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள். என்ன வேறுபாடு?

ஆண்களால் கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தில் மத நம்பிக்கைகளும் சாதிச் சடங்குகளும் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தன. அவர்கள் அடிமையாக இருப்பதே ஆண்களுக்கு வசதியாக இருந்தது. இதனை எதிர்த்து ஆண்கள் தரப்பிலிருந்து ஒலித்த இரண்டு வலிமையான குரல்கள்தான் பாரதியார்-பெரியார் இருவரின் பெண் விடுதலைச் சிந்தனைகளும்! இருக்கின்ற சமூகக் கட்டமைப்புக்குள் பெண்களின் விடுதலைக் குரல் ஒலிக்க வேண்டும் என விரும்பிய மகாகவி பாரதியார், "கும்மியடிப் பெண்ணே கும்மியடி' எனப் பெண்களின் உரிமையை ‘விடுதலைக் கும்மி’ எனத் தலைப்பிட்டுப் பாடினார். பெண்கள்தான் கும்மியடிக்க வேண்டும் என்பதே ஆண் உருவாக்கிய சமூகக் கட்டமைப்புதான் என்பது தந்தை பெரியாரின் பார்வை. அதனால், அவர் அந்தக் கட்டமைப்பையே செமத்தியாகக் கும்மி.. அடி.. எனும் வகையில் பெண் விடுதலையைச் சிந்தித்தார். அதனை வலியுறுத்தினார். செயல்படுத்தினார்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

Advertisment

எதற்கெடுத்தாலும் சம் பந்தமேயில்லாமல் தி.மு.க.வை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை சீண்டுகிறாரே?

எம்.ஜி.ஆர் யாரை எதிர்த்து அரசியல் நடத்தினார்? ஜெய லலிதா யாரை எதிரியாக நினைத் தார்? வைகோ யாருக்கு எதிராகக் கட்சி தொடங்கினார்? சீமான் யாரை அதிகம் தாக்குகிறார்? தமிழக அரசியலில் கவனம் பெற வேண்டுமென்றால் தி.மு.க ஆளுங் கட்சியாக இருந்தாலும் எதிர்க் கட்சியாக இருந்தாலும் அதைத் தான் குறி வைக்க வேண்டும். அதே ஃபார்முலாவை அண்ணா மலையும் கடைப்பிடிக்கிறார். அதன் மூலம் பா.ஜ.க.வின் செல்வாக்கை உயர்த்திவிடலாம் என நினைக்கிறார். இதனால் கவலைப்படவேண்டியது, தி.மு.க அல்ல. அதற்குப் போட்டியாக அரை நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் அ.தி.மு.க.தான்.

mm

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

உலக டி20 கிரிக்கெட்டில் இந்தியா சொதப்பிவிட்டதே?

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் இயல்பு. இம் முறை பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட அணி கள் இந்தியாவைவிட சிறப்பாக விளையாடின. நமீபியாவின் வளர்ச்சி கவனத்தை ஈர்த்தது. பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் இரண்டும் ரசிகர்களைக் கவர்ந் தன. ஆட்டத்திற்கேற்ற வகையில் அரைஇறுதிப் போட்டிகள் அமைந்துள்ளன. ஒரு காலத்தில், வெஸ்ட் இன்டீஸ் அணி ஜாம்பவனாக இருந்தது. 1983 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு எதிர்பார்க் கப்பட்ட இங்கிலாந்து, ஆஸ்தி ரேலியா அணிகள் ஏமாற்றத்தை ஏற்படுத்த, இந்திய அணிதான் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இன்டீஸை எதிர்கொண்டது. ஊதித் தள்ளிவிடுவார்கள் இந்தியாவை என்றுதான் உலக கிரிக்கெட் ரசிகர்களும் வல்லு நர்களும் கணித்தார்கள். ஆனால், கபில்தேவ் தலைமையிலான அணியின் முனைப்பான ஆட்டமும், ஒருங்கிணைந்த முயற்சியும் இந்திய அணிக்கு முதன் முதலாக உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தது. அதையடுத்து, தொடர்ச்சியான பல வெற்றிகளால் உலக கிரிக்கெட்டின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியது. அடுத்த உலகக் கோப்பைப் போட்டி 1987ல் இந்தியாவில் நடந்தபோது, அரை இறுதியிலேயே இந்திய அணி மண்ணைக் கவ்வியது. உலக ரசிகர்களின் எதிர்பார்ப்புப் பொய்த்து, உள்ளூர் ரசிகர்களின் கோபத்திற்கு இந்திய அணி காரணமானது. அதன்பின், பல உலகக் கோப்பை போட்டி களிலும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகி, 2011ல் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகளில் காட்டிய அதீத ஆர்வமே டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்கிறார் முன்னாள் கேப்டன் கபில்தேவ். அவரும் வெற்றி-தோல்விகளை சந்தித் தவர்தான். பலவீனங்களை சரிசெய்தால் இந்திய அணி மீண்டு வரும்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

பழங்குடி மக்கள் நலனுக்காக நடிகர் சூர்யா- ஜோதிகா தம்பதியர் முதல்வ ரிடம் 1 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கியது வரவேற்கத் தக்கதுதானே?

திரைப்பிரபலங்கள் பஞ்ச் டயலாக் மட்டும் பேசிக் கொண்டிருக்காமல், பாதிக்கப் படும் மக்களுக்கு உதவுவது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும். தமிழ்த் திரை யுலகுக்கு இது புதியதுமல்ல. தி.மு.க.வில் இருந்தபோது, ரிக்ஷா தொழிலாளர்களுக்குத் தன் சொந்த செலவில் மழைக் கோட்டுகளை வழங்கியவர் எம்.ஜி.ஆர். யுத்த நிதியாக சிவாஜி, ஜெயலலிதா உள்பட பல நடிகர் நடிகைகள் நிதியும் அணிகலன்களும் வழங்கியிருக் கிறார்கள். நாட்டின் விடுதலைக் காக காந்தியடிகளிடம் தன்னு டைய நகைகளைத் தந்தவர் கே.பி.சுந்தராம்பாள். இப்படிப் பல பேர் இருக்கிறார்கள். இன்றைய திரையுலகில் சூர்யா- ஜோதிகா ஒரு முன்னுதா ரணத்தைப் படைத்துள்ளனர். அவர்களைப் போல மேலும் சில கலைஞர்களும் இருக் கிறார்கள். இது வரவேற்பிற் குரியது.